கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்

Health • By அம்பிகா சரவணன் • Posted on 30 Aug

தாய்மை என்பது மறுபிறவி என்று கூறுவார்கள். ஒரு பெண்ணிற்கு இது ஒரு மறு பிறவியைத் தருவது போல், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அதுவே முதல் பிறவி. ஆகையால் ஒரு பெண் தாய்மையடையும் பருவத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கர்ப்பகாலத்தில் ஒரு பெண் எடுத்துக் கொள்ளும் உணவு, பருகும் பானம் மற்றும் செய்யும் ஒவ்வொரு செயலும் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். வயிற்றில் இருக்கும்போது மட்டுமல்ல, குழந்தை பிறந்த பிறகும் இந்த பாதிப்பு தொடரும். ஆகவே கர்ப்ப காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை பற்றிய ஒரு தெளிவு கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு தாய்க்கும் அவளுடைய முதல் கர்ப்பம் ஒரு புதிய அனுபவம். அடுத்த அடுத்த கர்ப்ப காலத்தில் முந்தைய அனுபவம் மூலம் அவள் பல விஷயங்களைக் கற்று கொள்ள முடியும். ஆகவே முதல் பிரசவம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது முக்கியம். தாய் மற்றும் சேயின் பாதுகாப்பு முதல் பிரசவத்திலேயே உறுதி செய்யப்பட வேண்டும். ஆகவே கர்ப்ப காலத்தில் சில விஷயங்களை தவிர்ப்பது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதி படுத்தும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். 

வேக வைக்காத விலங்கு இறைச்சி:
வேக வைக்காத இறைச்சி, சிப்பிகள், பதப்படுத்தாத முட்டை, வேக வைக்காத மீன், பேக் செய்யப்படாத கேக் மற்றும் குக்கி போன்றவற்றில் பக்டீரியா, கிருமிகள் மற்றும் நுண் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் உணவு சரியான பதத்தில் முழுமையாக வேக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தபின் உணவருந்துங்கள். வேக வைக்காத பச்சை மாவுகளை உண்ண வேண்டாம். 

பெரிய மீன்கள்:
பெரிய மீன்கள் அதிக அளவிலான பாதரசம் கொண்டிருக்கும், இது நிலக்கரி எரியும் தாவரங்களின் ஒரு தயாரிப்பு ஆகும், மேலும் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சியில் இவை பாதிப்பை ஏற்படுத்தலாம். ச்வார்ட்பிஷ், சுறா, டைல் பிஷ் மற்றும் கானாங் கெளுத்தி போன்றவை இந்த வகை மீன்கள் ஆகும். கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் பாதரசம் குறைவாக உள்ள மீன்களை ஒரு வாரத்திற்கு 12 அவுன்ஸ் வரை எடுத்துக் கொள்ளலாம் அன்று FDA அங்கீகரித்துள்ளது. சால்மன், இறால், டூனா, சர்டைன், மற்றும் கேட் பிஷ் போன்றவை இந்த வகையில் அடங்கும்.

பச்சை காய்கறிகள்-முளை விட்டது:
குதிரை மசால், முள்ளங்கி, முளை விட்ட பச்சை பயறு போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும். இந்த முளை மற்றும் விதைகளின் வழியாக பக்டீரியா காய்களில் ஊடுருவலாம். இதனை அழிப்பது கடினம் என்பதால் தவிர்ப்பது நல்லது. ஆனால் முளை விட்ட தானியங்களை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

பானங்கள்:
கர்ப்ப காலத்தில் மது அருந்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். பீர், ஒயின், ஸ்பிரிட் போன்றவை ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் வளர்ச்சி அடையும் அணுக்களை திருடிக் கொள்வதால், குழந்தையின் வளர்ச்சி தடைபடும். மதுவின் எந்த ஒரு அளவும் பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. ஆகவே இதனை முற்றிலும் தவிர்ப்பது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும். மது அருந்துவதால் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், பதப்படுத்தாத பழச்சாறுகள், போன்றவற்றில் ஈ கோலி போன்ற பக்டீரியா இருக்கலாம். ஆகவே அவற்றையும் தவிர்ப்பது நல்லது. கூடுதலாக, சீல் பிரிக்கப்பட்ட பானங்களை பருகாமல் இருப்பது பாதுகாப்பானது.

நீங்கள் தங்கி இருக்கும் வீட்டில் உள்ள தண்ணீர் குழாய்களில் துரு அதிகம் இருந்தால் அது நீங்கள் பருகும் தண்ணீரில் படியும் வாய்ப்பு இருக்கலாம். இதனால் குழந்தையின் எடை குறையும் வாய்ப்புகள் உண்டு. அல்லது வளர்ச்சி குறைப்பாடுகள் மற்றும் முன்கூட்டிய பிரசவம் போன்றவை ஏற்படலாம். காபின் அதிகம் உள்ள காபி, டீ மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் , தவிர்ப்பது நல்லது. இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது அல்லது எடை குறைந்து பிறப்பது போன்றவை உண்டாகலாம்.

புகை பிடிப்பது:
கர்ப்பிணிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா மனிதர்களுக்கு புகை பிடிப்பதால் தீமை ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் புகை பிடிப்பதால் , கருவில் உள்ள குழந்தையும் அபாயத்தை எதிர் கொள்கிறது. குழந்தை வயிற்றில் இருக்கும் போதும், பிறந்த பின்பும், புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. குழந்தையின் ஆரோக்கியத்தை அபாய கட்டத்திற்கு கொண்டு செல்வது நல்லதல்ல.

ஹேர் டை :
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், ஹேர் டை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஹேர் டையில் சேர்க்கப்படும் இரசாயனகள் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்குகின்றன. ஸ்ட்ரீக் ஹைலைடிங் செய்து கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இவற்றில் எந்த ஒரு ரசாயனமும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. அல்லது இயற்கை முறையில் மருதாணி போன்றவற்றை பயன்படுத்துவதால் கர்ப்பகாலத்தில் நரை முடியை மறைக்க முடியும்.

பெயிண்ட் :
கலிஃபோர்னியா பிறப்பு குறைபாடுகள் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது, பெயிண்ட் வாசனையுடன் அதிகம் தொடர்பு கொள்ளும்  பெண்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு  2-4 மடங்கு அதிகமான கிராஸ்டிராக்ஸிஸ் பாதிப்பு இருப்பதாக அறியப்படுகிறது. கிராஸ்டிராக்ஸிஸ் என்பது குடல் பகுதி குழந்தையின் வயிற்றின் வெளிப்புறம் தொப்புள் பகுதியில் இருந்து வெளிப்பட்டு அமைவதாகும். ஆகவே, குழந்தையின் அறைக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின் அந்த வேலையைத் தொடரவும்.

பூச்சிக்கொல்லி :
பல வகை பூச்சிக்கொல்லிகளில் DEET என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உங்கள் சருமத்திற்குள் உறிஞ்சி, நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. 

சவுனா குளியல்
இந்த வகைக் குளியலில் உடலின் வெப்ப நிலை 102F விட அதிகமாக இருக்கும். இதனால் குழந்தையின் மூளை மற்றும் முதுகு தண்டு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். உங்கள் சருமத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள பேஷியல், ஸ்க்ரப் போன்றவற்றை இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
 
உடற்பயிற்சி:
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானது. இருந்தாலும் கர்ப்பிணிகள், மருத்துவரிடம் ஆலோசித்து , எந்த அளவிற்கு உடற் பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்பதை அறிந்து கொண்டு பிறகு அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யலாம். மருத்துவர்கள் பொதுவாக சில எளிய பயிற்சிகளான நடை பயிற்சி போன்றவற்றை பரிந்துரை செய்வார்கள்.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like