நாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.

Health • By அம்பிகா சரவணன் • Posted on 24 Jul

மனிதனின் உற்ற நண்பனாக விளங்கும் ஒரு விலங்கு நாய். ஆனால் சில சமயங்களில் நாய்கள் மனிதனுக்கு ஒரு தொந்தரவாகவும் உள்ளன. குறிப்பாக அவை மனிதனை கடிப்பதால் பலவேறு பாதிப்புகள் மனிதனுக்கு உருவாகிறது. நாய் மனிதனை கடித்துவிட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். சிகிச்சை பெற்று காயம் முற்றிலும் குணமாகும்வரை  மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். மற்றபடி, நாய்க் கடியில் இருந்து உங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

நாய் ஒரு நன்றியுள்ள விசுவாசமுள்ள பிராணி தான். ஆனால் எந்த  அளவிற்கு இதன் விசுவாசம் உள்ளதோ, அதே அளவிற்கு, தீங்கும் விளைவிக்கிறது. தெரு நாய்களுடன் சண்டையிடும்போது அல்லது ஒருவரை துரத்திக் கொண்டு ஓடும் போது, அவற்றிடம் மாட்டிக் கொள்ளும் ஒருவரின் நிலைமை , மரணத்தை விட கொடுமையானது. நாய்களிடம் அகப்பட்டால் அதன் பற்களும் நகங்களும் மனிதனை பதம் பார்த்து விடும். இத்தகைய பயங்கரமான நாய் கடியில் இருந்து நிவாரணம் பெற சில எளிய மற்றும் விரைவான  தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிப் பற்றி தெரிந்து கொள்வதால் நாய் கடி உண்டானவுடன் உடனடி முதலுதவியாக இதனை மேற்கொள்வதால் தீவிர அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

செய்ய வேண்டுபவை :

1. வாழை இலை பயன்பாடு :

நாய் கடியால் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த வாழை இலை ஒரு சிறந்த தீர்வாகும். வாழை இலையில் அழற்ச்சியைப் போக்கும் தன்மை மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. நாய் கடித்தவுடன் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய சிகிச்சை இதுவாகும். ஒரு வாழை இலையை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். இதனை அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் மற்றும் பெண்ட்டோனைட் களிமண் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை காயம் ஏற்பட்ட இடத்தில் மென்மையாக தடவவும். சில மணி நேரங்கள் அந்த மருந்து காயத்தின் மேல் இருக்கட்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த மருந்தை காயத்தில் போடவும். விரைவில் இந்த காயம் குணமடையும். காயம் உள்ளவரை இந்த மருந்தை பயன்படுத்தலாம்.

2. மானுக்கா தேன் பண்புகள் :
மானுக்கா தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. காயத்தை குணப்படுத்தி சருமத்தை பாதுகாக்கும் சக்தி இதனிடம் உள்ளது. கிருமிகள் உடலில் பரவுவதை தடுத்து தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே , நாய் கடிக்கு இந்த தேனை சிக்கிச்சைக்காக பயன்படுத்தலாம். இந்த சிகிச்சைக்கு இரண்டு ஸ்பூன் மானுக்கா தேன் தேவைப்படுகிறது. மேலும் காயத்தின் அளவைப் பொறுத்து தேனின் அளவும் மாறும். அன்டி செப்டிக் பயன்படுத்தி காயத்தை கழுவி, ஒரு சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளவும். பின்பு காயத்தின் மேல் தேனை தடவவும். சில மணி நேரங்கள் தேன் காயத்தின் மேல் இருக்கட்டும். காயம் குணமாகும் வரை இதனை தொடர்ந்து செய்து வரவும்.

3. வேப்பிலையின் நன்மைகள் :
காயம் மற்றும் வெட்டுகளை குணப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் தான் வேப்பிலையை ஒரு சிறந்த அன்டி செப்டிக் என்று கூறுகின்றனர். எந்த ஒரு காயத்தையும் ஆற வைக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு. வேப்பெண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் வேப்பெண்ணெய் 10 துளிகள் சேர்க்கவும். இத்துடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்க்கவும். காயத்தை சுத்தம் செய்தவுடன், இந்த பேஸ்டை காயத்தில் தடவவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலை உங்களுக்கு ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் கற்றாழை, எரிச்சல் மற்றும் வலியைப் போக்கி இதமான உணர்வைத் தரும். வேப்பெண்ணெய்க்கு மாற்றாக வேப்பிலையையும் பயன்படுத்தலாம் 

4. மருத்துவ உதவியை நாடுங்கள்:
கண்ணுக்கு தெரியாத காயங்கள் இருந்தால், முதல் வேலையாக தண்ணீரில் காயத்தை கழுவுங்கள். தண்ணீருக்குள் காயம் பட்ட இடத்தை சில நிமிடங்கள் தொடர்ந்து வைத்திருங்கள். அல்லது அல்கஹாலை அந்த இடத்தில் தடவுங்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு இருந்தால் அதனையும் வலி உள்ள இடத்தில தடவலாம். காயம் அழுத்தமாக இருந்தால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்லலாம். தாமதித்தால் இன்னும் பல கடுமையான நோய் தாக்கம் அல்லது நீடித்த பிரச்சனை உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

5. காயத்திற்கான ஆவணத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்:
இந்த காலத்தில் எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஆகவே காயத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் மருத்துவ குறிப்புக்களை நகல் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாண்டேஜ் போன்றவற்றை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். 

6. தொடர்பு அதிகாரிகள் :
தெருவில் நடந்து செல்லும்போது நாய் கடித்தல், அந்த நாயை துரத்திக் கொண்டு போவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. மாறாக, நாய்கள் நெருங்கி வரும்போதே நாம் ஜாக்கிரதையாக விலகி செல்லலாம். மேலும் விலங்கு பாதுக்காப்பு அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு  கொள்வதால் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு அவர் உதவலாம்.

7. தகவல் சேகரியுங்கள்:
வருங்காலத்தில் இது போன்ற தற்செயலான சம்பவம் நடைபெறாமல் இருக்க, சாலையில் நடந்தவற்றை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். தெரு நாய்களின் விவரம் பற்றி அல்லது அதன் உரிமையாளர் பற்றி தகவல் தெரிந்து கொள்ள அதற்கான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இதனைப் பார்த்த சாட்சிகளிடம் இருந்து சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதால் இந்த வழக்கை பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

8. அமைதியாக இருக்கவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
உங்களைக் கடித்த நாய் ஆரோக்கியமாக இருக்கும் என்று நீங்களே முடிவு செய்ய வேண்டாம். மற்றும் இது மறுமுறை நடக்காது என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். நாய் உரிமையாளரின் பொறுப்பில் எந்த ஊகங்களையும் செய்யாதீர்கள். நாய்கள் ராபிஸ் அல்லது மற்ற கொடிய நோய்கள்ளால் தாக்கப்பட்டிருக்கலாம்  ஆகவே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

செய்யக்கூடாதவை :

1. இந்த வழக்கைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம் :

காப்பீட்டாளர்களுடன் சம்பவம் தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்கள் காயத்திற்காண போதிய காப்பீட்டு பணத்தை வழங்காமல் இருப்தற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, பாதுகாப்பான முறையில் அவர்களிடம் பேசி, முக்கிய தகவல்களை மட்டுமே அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2. தேவையற்ற கற்பனை வேண்டாம்:

உங்களை கடித்த நாயின் ஆரோக்கியத்தைப் பற்றி தேவையற்ற முறையில் கற்பனை செய்ய வேண்டாம். நாய் கடித்ததால் உங்களுக்கு என்னாகுமோ என்று பதற வேண்டாம். ஒரு வேளை அந்த நாயின் உரிமையாளர், அதனை ஆரோக்கியமாக பாதுகாப்பதோடு தகுந்த தடுப்பூசிகளையும் போட்டு வந்திருக்கலாம். ஆகவே என்ன நடந்தாலும், நாய் கடித்தவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

 

 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like