இன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்

Spiritual • By அம்பிகா சரவணன் • Posted on 27 Jul

சூரியன், பூமி மற்றும் நிலா ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியனின் வெளிச்சம் நிலா மீது படாமல் இருப்பது சந்திர கிரகணம் ஆகும். இன்று ஜூலை 27, 2018, இந்த நிகழ்வு ஏற்படுவதால்  இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. பொதுவாக பௌர்ணமி அன்று தான் இந்த நிகழ்வு உண்டாகும். இன்றைய சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின்  மிக நீண்ட சந்திர கிரகணம் என்று அறியப்படுகிறது. நாசாவின் கருத்துப் படி, இன்றைய சந்திர கிரகணம் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடிக்கிறது. பகுதி நேர சந்திர கிரகணம் தொடர்ந்து 3 மணி நேரம் 54 நிமிடங்கள் நீடிக்கிறது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதன் விளைவாக நிலவிற்கு சூரிய ஒளி கிடைக்காமல் நிலவின் மேல்புறத்தில் பூமியில் நிழல் படிகிறது. வட அமெரிக்காவைத் தவிர உலகின் மற்ற இடங்களில் இந்த கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் 1 மணி  நேரம் 42 நிமிடங்கள் கிரகணத்தைக் காண முடியும். வட கிழக்கு இந்தியாவின் சில இடங்களில் முழு சந்திர கிரகணத்தைக் காண இயலாது. இந்த  நாளில், உலகம் ஒரு அழகிய இரத்த சிவப்பு நிலவைக் காண முடியும்.

இந்த 2018ம் ஆண்டின் முதல் சத்திர கிரகணம் ஜனவரி 31, 2018 அன்று ஏற்பட்டது. அந்த நாளில் நிலா, சிவப்பு நிறத்தில் மிகப்பெரிய அளவில் காட்சி தந்தது. அந்த நாளில் 152 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வான, சூப்பர் மூன் , ப்ளு மூன்  மற்றும் ப்ளட் மூன் ஆகியவை மூன்றும் ஒன்றாக தோன்றியது. 

சந்திர கிரகணத்தை எப்போது காணலாம்?
கிரகணத்தின் முதல் பகுதி ஜூலை 27, நள்ளிரவு 11.54 க்கு தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் ஜூலை 28, காலை 1 மணிக்கு  தொடங்குகிறது. இரண்டாம் பகுதி , காலை 2.43 மணி முதல் காணப்படுகிறது.

இந்திய நேரப்படி,
சந்திரன் உதிப்பது - மாலை 6.59
பகுதி நேர கிரகணம் தோன்றுவது - ஜூலை 27, நள்ளிரவு 11.54
முழு சந்திர கிரகணம் - ஜூலை 28, அதிகாலை 1 மணி , 
அதிகபட்ச கிரகணம் - ஜூலை 28, அதிகாலை 1.51 மணி 
முழு சந்திர கிரகணம் முடிவு - ஜூலை 28, அதிகாலை 2.43 மணி 
பகுதி சந்திர கிரகணம் முடிவு - ஜூலை 28, அதிகாலை 3.49 மணி 

அடுத்த சந்திர கிரகணம் 
அடுத்த சந்திர கிரகணம், டிசம்பர் 31, 2028ம் ஆண்டு நிகழும்.

சந்திர கிரகண நம்பிக்கைகள் :

மனித உடலில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், கிரகணம் சில தாக்கத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. ஆகவே கிரகணம் தொடர்பான சில நம்பிக்கைகள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது காணலாம்.

1. கிரகண நேரத்தில் சாப்பிடுவது மற்றும் பருகுவது தவிர்க்கப்பட வேண்டும்.
2. கிரகண நேரத்தில் பயணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
3. கர்ப்பிணி பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும்.
4. கிரகண நேரத்தில் மகா மிருத்யுஞ்சய் மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும்.
 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like