செம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்

Health • By அம்பிகா சரவணன் • Posted on 30 Jul

இன்றைய தினங்களில் பல்வேறு விஷயங்களை கற்றறிந்த மக்கள், தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைக்கின்றனர். தாங்கள் சாப்பிடும் உணவிலும் மிகவும் கவனமாக இருந்து, ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். இதில் டீக்கு ஒரு முக்கிய இடமுண்டு. சில காலங்களுக்கு முன்பு வரை பால் டீ மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பால் இல்லாத டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இதில் செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குருதி நெல்லியின் சுவையை ஒத்து இருக்கும் இதன் சுவை. பொதுவாக இந்த செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகலாம். ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. ஆனால் சில பக்க விளைவுகளும் இவற்றில் உள்ளன.  

இந்தப் பதிவில், செம்பருத்தி டீயின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது :
மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுகிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படைகிறது. செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது :
உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு  கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் அது நல்ல கொலஸ்ட்ராலாக இருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் போது நிச்சயமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும். இதனால், பலரும் இன்று கொலஸ்ட்ரால் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதற்கு முக்கிய காரணம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஜன்க் உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை. இந்த உணவுகள் சரியான முறையில் செரிமானம் ஆகாமல், இவை கொலஸ்ட்ராலாக இரத்த குழாய்களில் படிந்து உடலுக்கு சேதம் விளைவிக்கிறது. செம்பருத்தி டீயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது.

காய்ச்சலைப் போக்குகிறது :
காய்ச்சல் என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் உடல் உபாதையாகும். இந்த கிருமி எளிதில் உடலைத் தாக்கி, உடலை வலுவிழக்கச் செய்யும். இந்த கிருமிகள் உடலை விட்டு அகலுவது எளிய காரியம் இல்லை, இவை சளி போன்ற தொல்லைகளை உண்டாக்கி, இன்னும் பல அபாயமான தொந்தரவுகளை உடலுக்குள் ஏற்படுத்துகிறது. இந்த காய்ச்சல் எளிதில் பரவுவதற்கு , உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவே முக்கிய காரணம். செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகிவதால், காய்ச்சலை அதிகரிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

அணுக்களை சுத்தீகரிக்கிறது :
உடலின் பல அணுக்கள் அழிவதும் பின்பு உற்பத்தியாவதும் இயற்கையான செயலாகும். ஆனால் சில அணுக்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாமல், உடலுக்கு பல்வேறு சேதங்களை உண்டாக்குகின்றன. சில அணுக்களில் உள்ள அழுக்கால் , உங்கள் முகம் கருமையாக மாறலாம். இவ்ற்றைப் போக்க முகத்திற்கு ஸ்க்ரப் செய்யலாம். செம்பருத்தி டீயைக் கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்வதால் அல்லது இதனை உட்கொள்வதால், உடலில் உள்ள அணுக்கள் விரைந்து தூய்மைப் படுத்தப்படுகின்றன.

மாதவிடாய் பிரச்சனைகளை எளிதில் போக்குகிறது :
பெண்களின் மாதவிடாய் காலங்களில் செம்பருத்தி டீ அவர்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள், சரியான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன. இதனால் கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.

 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like