காலா திரைப்படம் வெளியிடப்படும் தேதி!

Cinema • By அம்பிகா சரவணன் • Posted on 05 May

நடிகர் திரு. தனுஷ் அவர்களின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், திரு. பா. இரஞ்சித் அவர்கள் இயக்கி, "சூப்பர் ஸ்டார்" திரு. ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் உருவான "காலா" திரைப்படத்தைக் காண பலர் ஆவலாக உள்ளனர்.

காலா திரைப்படம் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திரைப்பட தயாரிப்பாளர்களின் ஒரு மாத கால வேலை நிறுத்த அறிவிப்பால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் இப்படம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் காலா திரைப்படம் ஜூன் திங்கள் ஏழாம் நாளில் வெளியிடப்படும் என அத்திரைப்படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like