குழந்தைகளின் ஆரோக்கிய உணவுகள் 

Health • By அம்பிகா சரவணன் • Posted on 25 Jul

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்கள் உண்ணும் உணவு முக்கிய பங்காற்றுகிறது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதில் அதிக அகவனம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் கவலையைக் குறைக்க இங்கே சில ஆரோக்கிய உணவுகளின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அனுதினம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. பல மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள் இதோ உங்களுக்காக..

அவகாடோ என்னும் வெண்ணெய்ப் பழம்:

தாய்ப்பாலுக்கு இணையான  கொழுப்பு சத்து இந்த பழத்தில் உள்ளது இதன் மிகபெரிய பலனாகும். மூளை வளர்ச்சிக்கு இந்த பழம் பெரிதும் உதவுகிறது.

இந்த பழத்தை மசித்து குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம்.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு சத்து போன்றவை எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இருப்பதால் தினமும் குழந்தைகள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்து ஸ்மூதியாக கொடுக்கலாம்.

ப்ரோகோலி :

இந்த ப்ரோகோலியில் நார்சத்து, போலேட், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை புற்று நோயைப் போக்கவும் உதவுகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு இதன் சுவையை அறிமுகம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்மை உண்டாகிறது.

ப்ரோகோலியை நன்றாக வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பயறு வகைகள்:

பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் புரதம் அதிகம் உள்ளது. குழந்தை கடிக்கும் வகையில் சிறிதாக இருக்கும் பயறு வகைகளை அவர்களுக்கு உண்ணக் கொடுக்கலாம். வேக வைத்த பயறு வகைகளை தினமும் குழந்தைக்கு கொடுப்பதால் நல்ல பலன் கிடைக்கிறது. 

பயறுடன், கேரட் துண்டுகளை சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். கீரை சேர்த்தும் கொடுக்கலாம். 

இறைச்சி :

இரும்பு சத்து குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கு இரத்த சோகை உண்டாகிறது. இறைச்சியில் இரும்பு சத்து, புரதம் மற்றும் ஜின்க் அதிகமாக உள்ளது. 

தானியங்களுடன் இணைத்து இறைச்சியை கொடுக்கலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

குழந்தைக்கு முதல் உணவாக கொடுப்பது பெரும்பாலும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு தான். அதன் மென்மையான தன்மை மற்றும் அதன் சுவை குழந்தைகளைக் கவரும். இந்த கிழங்கில் பீட்டா கரோடின், வைட்டமின் சி, இரும்பு சத்து மற்றும் தாமிரம் உள்ளது.

இந்த கிழங்கை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like