பெருங்குடலை இயற்கையான முறையில் சுத்தம் செய்வதற்கான 10 வழிகள்
இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளைத் தவிர்த்து பெருங்குடலும் ஒரு முக்கிய உடல் உறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது.
செரிமான ஆரோக்கியம் சீராக இருக்க, பெருங்குடல் ஆரோக்கியம் மிக முக்கியம். பெருங்குடலை சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஒருவரின் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆகவே இயற்கையான முறையில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் தொடர்ந்து காணலாம்.
பெருங்குடல் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. ஏறுங்குடற்குறை, இறங்கு பெருங்குடல், குறுக்குக் குடல், நெளிவுப் பெருங்குடல் ஆகியவை இதன் பகுதிகளாகும். சிறு குடல் வழியாக செல்லும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் கலோரிகளை உறிஞ்சி, செரிமானத்திற்கு உதவுவதால் உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாக பெருங்குடல் அறியப்படுகிறது. மேலும் உடலின் pH அளவு மற்றும் எலேக்டரோலைட் அளவைப் பராமரிக்க பெருங்குடல் உதவுகிறது.
இது மலச்சிக்கல் அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கையாள உதவுவதோடு, பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுவதால் பெருங்குடலை சுத்தமாக பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பெருங்குடலில் உள்ள கழிவுகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்வதால், உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் வெளியாவது உடலுக்கு சிறந்த நன்மையைச் செய்கின்றது.
உங்கள் பெருங்குடலை இயற்கையாக சுத்தம் செய்வதற்கான சில எளிய தீர்வுகள்.
கீழே குறிப்பிட்டுள்ள எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் இயற்கையான முறையில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்யலாம்
1. உப்பு நீர் அல்லது தண்ணீர்
2. ஆப்பிள் சிடர் வினிகர்
3. உயர் நார்ச்சத்து உணவு
4. நச்சுகளை வெளியேற்றும் எலுமிச்சை சாறு
5. எதிர்ப்பு ஸ்டார்ச்
6. பச்சை காய்கறி சாறு மற்றும் ஸ்மூதி
7. கற்றாழை சாறு
8. ப்ரோபயோடிக்
9. ஆளி விதைகள்
10. மூலிகை டீ
1. உப்பு நீர் அல்லது தண்ணீர்;
செரிமான மண்டலம் சிறப்பாக செயல் புரிய தண்ணீரின் அவசியம் இன்றியமையாதது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. பெருங்குடலில் உள்ள நச்சுகளை முற்றிலும் வெளியேற்ற தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே தினமும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதவது தினமும் 6-8 கிளாஸ் அளவு வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளலாம்.
குடல் இயக்க பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உப்பு நீரால் நன்மைகளை அடையலாம். காலை உணவிற்கு முன், இரண்டு ஸ்பூன் கல் உப்பு அல்லது இமாலயன் உப்பை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும்.
2. ஆப்பிள் சிடர் வினிகர்:
ஆப்பிள் சிடர் வினிகர் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது பெருங்குடலில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகர், அசிட்டோபாக்டெர் என்று அழைக்கப்படும் பாக்டீரியாவைக் கொண்டுள்ளது, இது செரிமான செயல்பாட்டில் உதவுகிறது மற்றும் உங்கள் குடலின் சீரான செயல்பாடுகளில் உதவுகிறது.
3. உயர் நார்ச்சத்து உணவுகள் :
நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் காணப்படுகிறது. இந்த தாவர உணவுகள் உங்கள் மலத்தை அதிகரிக்க மற்றும் மலச்சிக்கல் மற்றும் அதிக-செயல்பாட்டு குடல்களை ஒழுங்குபடுத்தும் செல்லுலோஸ் மற்றும் ஃபைபர்களைக் கொண்டிருக்கின்றன. உயர் நார்ச்சத்து தாவர உணவுகள் ஆரோக்கியமான பாக்டீரியாவை பெருமளவில் அதிகரிக்கிறது. உங்கள் தினசரி உணவில் உயர் நார்ச்சத்து உணவுப் பொருட்களை கட்டாயம் இணைத்துக் கொள்வது குடலுக்கு அதிக நன்மையைச் செய்கிறது.
4. எலுமிச்சை சாறு
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்திருக்கும், ஒரு உணவுப் பொருள் . இது உங்கள் வளர்சிதைமாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நச்சுத்தன்மையைப் போக்க உதவுகிறது. இது சிட்ரிக் அமிலத்தையும் கொண்டுள்ளது, இது செரிமான சாறுகளை தயாரிப்பதில் உதவுகிறது, இதனால் முறையான செரிமானம் ஏற்படுகிறது. எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்திகரிப்புக்கு ஒரு சிறந்த பொருளாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் அது உடலில் இருந்து நச்சுகள் நீக்கக்கூடியதாக இருக்கிறது.
5. ஸ்டார்ச் :
தாவர உணவுகளாகிய அரிசி, உருளைக்கிழங்கு, பயறு, பச்சை வாழைப்பழம், தானியம் ஆகியவற்றில் நார்ச்சத்து போல்காணப்படும் கார்போஹைட்ரெட் குடல் நுண்ணுயிரிகளை அதிகரித்து ஆரோக்கியமான குடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் இத்தகைய ஸ்டார்ச் உணவுகள் குடல் புற்று நோயைத் தடுப்பதாக புற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிகள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
6. பச்சை காய்கறிகள் சாறு மற்றும் ஸ்மூதி :
பெருங்குடலை சுத்தம் செய்வதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது காய்கறிகள் சாறு. காய்கறி சாறு மற்றும் ஸ்மூதி போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளில் உதவுகின்றன. காய்கறிகளில் உள்ள நார்ச்சத்தைப் பெருமளவில் பெறுவதற்கு காய்கறிகளின் விழுது மற்றும் தோலுடன் சாறு தயாரிப்பது சிறந்த முறையாகும். கேரட், பீட்ருட், வெள்ளரிக்காய், தக்காளி, கீரை போன்றவற்றின் சாறு பெருங்குடலை சுத்தம் செய்வதில் சிறந்த நன்மையைத் தருகின்றன.
7. கற்றாழை சாறு:
கற்றாழை சாறு கலவை உடலில் உள்ள கழிவு பொருட்களின் விளைவுகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் குடல் செயல்பாடுகளை எளிதாக்க உதவுகிறது, இதனால் உடலில் உள்ள நச்சுகள் அகற்றப்படுகின்றன. இது பெருங்குடலை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த உதவுகிறது.
8. ப்ரோபயோட்டிக்:
உங்கள் உணவில் ப்ரோபயோட்டிக்கை இணைத்துக் கொள்வதால் உங்கள் பெருங்குடல் சுத்தீகரிக்கப்படுகிறது. யோகர்ட், ஊறுகாய், மற்றும் இதர புளிப்பு உணவுகள் நல்ல பாக்டீரியாக்களை மீட்டு குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து சுத்தீகரிக்கிறது . மற்றும் குடலின் ஒழுங்கமைப்பை ஊக்குவிப்பதன் மூலமும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் அதை சுத்தப்படுத்துகிறது.
9. ஆளிவிதைகள் :
இரைப்பைக் குழாயில் வீக்கத்தை தடுக்க, ஒருவர் ஆளி விதைகளை உட்கொள்ள வேண்டும். இந்த விதைகளில் உள்ள மலமிளக்கி தன்மை இயற்கையாகவே உங்கள் பெருங்குடலை சுத்திகரிக்க உதவுகிறது. கூடுதலாக, ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் உங்கள் குடல் இயக்கங்களை அதிகரிக்கலாம், இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படும்.
10. மூலிகை டீ :
இஞ்சி, மிளகு , பூண்டு ஆகியவற்றில் உள்ள நுண்ணுயிர் கொல்லும் தாவர வேதிப்பொருள் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்கள் குடலில் பெருகுவதை குறைக்கின்றன. ஒரு நாளில் ஒரு முறை இஞ்சி, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து தயாரித்த தேநீர் பருகுவதால் உங்கள் பெருங்குடல் சுத்தம் செய்யப்படுகிறது.
பெருங்குடல் சுத்தீகரிப்பில் ஈடுபடும்போது அதிக கவனம் தேவை. அளவிற்கு அதிகமாக இதனை நாம் செயல்படுத்தும்போது வலி அல்லது எலேக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகும் வாய்ப்புகள் வரலாம். உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் உப்பு நீர் பயன்படுத்தி நச்சுகளை வெளியேற்றுவதை தவிர்க்கலாம். காரணம், உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், குறைந்த அளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு சிறந்த தகவலைத் தந்துள்ளதா? இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.