நயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்
நம் கண்களை பாதுகாக்க என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அதை செய்யாமல் இருப்பதும் நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
நயனம் நம் உடல் உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்று. நயனம் என்றால் கண் என்று பொருள்ப்படும். ஆதி காலத்தில் இருந்த மனிதனுக்கு பார்வைத்திறன் நம்மைவிட பல மடங்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் அது இப்பொழுது படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது என்பதை உங்களுக்கு உணர்த்த நம் முந்தைய தலைமுறையினரை நம்மோடு ஒப்பிட்டு காட்டினால் உங்களுக்கே புரியும் அது உண்மை என்று முன்பெல்லாம் எங்கோ ஒருவருக்கு தான் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மற்றும் சில பேர் தான் கண் பாதிப்பினால் கண்ணாடி அணிவதையும் பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுதோ பலருக்கு இந்த பிரச்சனைகள் உள்ளது, சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கண் பாதிப்பால் கண்ணாடி அணிவதை பார்க்கிறோம் ஏனென்றால் அப்பொழுது எல்லாம் கணினி, செல்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றை சில மணி நேரங்கள் மட்டும் தான் உபயோகித்தோம் மற்றும் சிலர் இவைகளை உபயோகபடுத்தியிருக்க கூட மாட்டார்கள். ஆனால் இப்பொழுது அப்படியா இவைகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இதை வேலைக்காகவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி பார்ப்பதற்காகவும், விளையாடுவதற்காகவும் பல மணி நேரங்களுக்கு இந்த சாதனங்களை மிக அருகிலும், கண் சிமிட்டாமல் பார்ப்பதும் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது கண்ணில் ஏற்படும் பாதிப்புகளுக்கு.இது மட்டுமே காரணம் என்று கூறமுடியாது இன்னும் பல காரணங்கள் உள்ளன.
கண்களை பாதுகாக்க செய்யக் கூடாதவைகள் :
- இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது.
- கண்ணில் தூசி விழுந்தால் கண்ணைப் கசக்கக் கூடாது.
- எழுதும் போதும் அல்லது படிக்கும் போதும் கண்களை இமைக்காமல் படிக்கக்கூடாது.
- அதிக வெளிச்சத்திலோ அல்லது குறைந்த வெளிச்சத்திலோ படிக்கக்கூடாது.
- துணியை தைக்கும் போது துணியையோ, தையலையோ பார்க்க கூடாது.
- கண்ணில் மருத்துவரின் அறிவுரை இன்றி மருந்துகளை போடக்கூடாது.
- தொலைக்காட்சி அல்லது கணினியை மிக அருகில் அமர்ந்துகொண்டு பார்க்கக்கூடாது.
- குப்புறப் படுத்துக்கொண்டோ, சாய்ந்துகொண்டோ படிக்கக்கூடாது.
- செல்பேசியை அருகில் வைத்து பார்க்க கூடாது மற்றும் செல்பேசியை இமைக்காமல் பார்க்க கூடாது.
- 20 நிமிடங்களுக்கு மேல் கணினியைப் பார்த்து வேலை செய்ய கூடாது.
நாம் கண்களை பாதுகாக்க சத்தான உணவை எடுத்துக் கொள்வதோ, கண்களுக்கான பயிற்சிகளை செய்வதோ மட்டும் போதாது. அதனுடன் நம் கண்களை பாதுகாக்க என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அதை செய்யாமல் இருப்பதும் நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏனென்றால் வருமுன் காப்பதே சாலச் சிறந்ததாகும்.