உங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்
காதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.
அழகான காதல் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதிலும் நிலைத்து நீடித்து, நெடுங்காலம் வாழும் காதல், நீயின்றி நான் இல்லை என்று கூறும் காதல் அமைவது நிச்சயம் ஒரு வரம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய நவீன காலத்தில் எல்லாமே நவீனமயமாக இருக்கும்போது காதலும் நவீனமாக மாறிவிட்டது. இன்றைக்கு காதல் எண்ணம் மனதில் ஏற்படுவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் விரும்பும்போது டேட்டிங் மீட்டிங் என்று சேர்ந்து பழக சமூகம் அங்கீகாரம் அளித்து விட்டது. ஆனால் இப்படி பல வாய்ப்புகள் ஆணும் பெண்ணும் பழகுவதற்கு ஏறபட்டாலும் உங்கள் மனம் கவர்ந்த அந்த நபர் உண்மையில் இவர் தானா என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றும். உங்கள் மனம் கவர்ந்த நபர் இவர்தான் என்பதை உங்கள் நெருக்கமான உறவில் சில அறிகுறிகள் உங்களுக்கு உணர்த்தும். அவை என்ன என்பது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.
1. சரியான நேரத்தில் உங்கள் சந்திப்பு நிகழும்:
இன்றைய காலகட்டத்தில் டேட்டிங் என்பது நேரம் தொடர்பானதாக உள்ளது. உங்கள் இருவருக்குமான உறவைத் தொடர்வதில் உங்களில் யாரவது ஒருவருக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் அல்லது, முன்பே தீர்மானிக்கப்பட்ட வேலை காரணத்தினாலும் ஒருவரை ஒருவர் சரியான நேரத்தில் சந்திப்பதில் தாமதம் உண்டாகும். ஆனால் உங்கள் மனம் கவர்ந்தவர் இவர் என்றால் உங்கள் சந்திப்பில் இருவரிடமும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. உங்களில் இரண்டு பேருமே உங்கள் உறவுக்கான தொடக்கப்புள்ளியாக இருக்க நினைப்பீர்கள்.
2. மற்றவரின் தவறை ஏற்றுக் கொள்வீர்கள்:
உங்கள் மனம் கவர்ந்தவரின் பிழைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அவருக்குள் உள்ள வலிமையை தொடர்ந்து நேசிப்பது என்பது உண்மையான காதல் இருந்தால் மட்டுமே சாத்தியம். குறிப்பாக உங்கள் பலவீனம் உங்கள் துணையின் பலமாக இருக்கும்போது உண்டாகும் புரிதல் மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
3. நீங்கள் ஒத்த வாழ்க்கை இலக்குகளை வைத்திருக்கின்றீர்கள்:
ஒரு விஷயத்தை நேர்மையாக சொல்லுங்கள். திருமணத்திற்கு பின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உங்கள் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருந்தால் அவருடன் இணைந்து வாழ்வது சாத்தியமா?
நீங்கள் ஒரு ஆடம்பரமான திருமணத்தை எதிர்பார்த்து அதன் பின் ஒரு கால்பந்து அணியை உருவாக்கும் அளவிற்கு குழந்தைகள் வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஏற்ற ஒரு துணை , அதாவது இந்த மினி கால்பந்து அணியின் பின்னால் ஓடக்கூடிய எண்ணம் உள்ள ஒருவர் உங்களுக்கு துணையாக அமைந்தால் அது தான் மகிழ்ச்சி.
4. பொறாமை ஒரு பிரச்சனை இல்லை:
பல உறவுகள் முறிவதற்கு பொறாமை குணம் தான் கரணம் என்று சொல்லப்படுகிறது. இது உண்மை அல்ல. உங்கள் மனம் கவர்ந்தவரிடம் உங்களுக்கு பொறாமை தோன்றாது. மேலும் எந்த உறவில் அதிகமான நம்பிக்கை இருக்கிறதோ, அந்த உறவில் ஒருவர் மற்றவரை பொறமை கொள்ள வைப்பதில்லை. ஒருவேளை உங்கள் உறவில் நீங்களோ அல்லது உங்கள் துணையோ ஒருவர் மற்றவரிடம் பொறமை படுவது போல் உணர்ந்தால் அது உண்மையான காதல் இல்லை.
5. அச்சுறுத்தல் என்பது இருக்கவே இருக்காது :
பொதுவாக பொறாமையுடன் இணைந்து இந்த அறிகுறியும் தோன்றும். ஒரு சில உறவுகளில் மற்றவரை மோசமாக உணரச் செய்யும் அச்சுறுத்தல் உண்டாகும். உங்கள் காதலர் உங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் அச்சுறுத்த மாட்டார். மாறாக உங்கள் முன்னேற்றத்தில் உங்களை ஊக்குவிப்பார். ஒருவேளை உங்கள் உறவில் பரஸ்பரம் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக அந்த உறவில் இருந்து விலகிக் கொள்வது சாமர்த்தியமான செயல் ஆகும்.
6. மன்னிப்பு ஒரு போர் அல்ல:
நீங்கள் இருவரும் தவறு செய்தால் ஒப்புக் கொள்ள தயாராக இருங்கள். இது உரையாடல் செய்வதற்கான ஒரு போர் அல்ல . இந்த விவாதத்தை விரிவுபடுத்த காரணமாக இருந்தவற்றிற்காக மன்னிப்பு கேளுங்கள். ஒரு மன்னிப்பு என்பது கலந்துரையாடலை முடிக்க மட்டுமல்ல, தேவையான பொழுதுகளில் மன்னிப்பு கேட்க பழகிக் கொள்ளுங்கள்.
7. அவர் சந்தோஷமாக இருக்க நீங்கள் ஆசைப்படுவீர்கள் :
இது இயற்கை தானே? உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள் பட்டியலில் உங்கள் காதலருக்கு இரண்டாம் இடம் கிடைத்தால் கூட அவர் ஒரு சிறந்த காதலராக இருக்க முடியாது. தன் துணையின் சந்தோஷத்திற்காக தன் சந்தோஷத்தையும் இரண்டாம்பட்சமாக நினைக்கும் ஒருவர் மட்டுமே ஒரு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக முடியும்.
8. மன நிறைவு உண்டாகும்
தெரியாத நபருடன் கூட நெருங்கிப் பழக முடியும். ஆனல் உங்கள் மனம் கவர்ந்த காதலருடன் நீங்கள் இணையும்போது ஒரு வித மன திருப்தி ஏற்படும். மன நிறைவு ஏற்படும்.
9. உங்கள் மன அழுத்தத்தைப் போக்கக் கூடியவர்:
உங்கள் துணை பல நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும் வாய்ப்பு வரலாம் . ஆனால் அவர் அப்படி செய்யக் கூடாது. உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில் நீங்கள் தேடித் போகும் ஒரு மருந்தாக அவர் இருந்தால் அவரே சிறந்த துணையாவார். அவருடைய அன்பான குரல், அல்லது சமாதானமான வார்த்தைகள் , எதுவாக இருந்தாலும் அது உங்களை அமைதிபடுத்தும்.
10. உங்களால் அவரை உணர்ந்து கொள்ள முடியும்.
நீங்கள் 16 வயது பெண்ணாக இருந்தால் உங்கள் முதல் ஆண் நண்பன் உங்கள் வாழ்க்கைத் துணையாக தெரிவார். ஆனால் நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது திருமண வயதை நெருங்கும் நபர்களைப் பற்றி. நீங்கள் சிறப்பாக நினைக்கும் உங்கள் மனம் கவர்ந்த காதலரால் உங்கள் வாழ்க்கை முழுமை அடைவதுடன் மட்டுமில்லாமல், இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டும், உங்கள் வாழ்வில் எண்ணற்ற மகிழ்ச்சியை அவர் உருவாக்க வேண்டும், உங்களை எந்த ஒரு சூழலிலும் கீழே தள்ளாமல் இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையை எதிர்மறை பாதையில் பயணிக்க வைக்கக் கூடாது.