உடனடி அழகிற்கான 5 பேஸ் பேக் !

இன்றைய நாட்களில் சருமம் பொலிவை இழப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதிகமான தூசி, மாசுபட்ட காற்று, புகை , சூரியனின் வெப்ப தாக்குதல் போன்றவை சருமம் சோர்வடைந்து பொலிவை இழப்பதற்கான காரணங்கள்.

உடனடி அழகிற்கான 5 பேஸ் பேக் !

ஆனால் இவையெல்லாம் நமது அழகை குறைக்க முடியுமா ? பொலிவிழந்த சருமத்தை நொடியில் அழகாக்கி கட்டுவது தான் பெண்களின் சாமர்த்தியம். ஆம்! உங்கள் அழகை சற்று நேரத்தில் மீட்டெடுக்க இந்த தீர்வுகளை பயன்படுத்துங்கள்.

வாழை பழ பேஸ் பேக் :
* 1 கனிந்த வாழைப்பழம் 
* 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் 
* 1 ஸ்பூன் தேன் 
செய்முறை:
* மேலே கூறிய எல்லா பொருட்களையும் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். 
* மென்மையான க்ளென்சர் கொண்டு முகத்தை முதலில் கழுவி கொள்ளுங்கள். ஒரு துண்டு எடுத்து முகத்தை துடைத்து, காய வைத்து கொள்ளுங்கள்.
* வாழைப்பழ விழுதை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்..
* பிறகு வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.
* வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம். 
வாழைப்பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. பொட்டாசியம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்தில் உள்ள கடின தன்மையை அகற்றி  கருப்பு திட்டுக்கள் மற்றும் கட்டிகளை போக்குகின்றது. சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது. வயது முதிர்வை தடுக்கிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் சரும நோய்களை தடுக்கிறது.

பேக்கிங் சோடா :
* 1 ஸ்பூன் பேக்கிங் சோடா 
* 1 ½ ஸ்பூன் தண்ணீர் 
செய்முறை:
* பேக்கிங் சோடாவுடன் தண்ணீரை சேர்த்து கலக்கவும்.
* க்ளென்சரால் முகத்தை  கழுவி காய வைக்கவும்.
* இந்த பேஸ்டை சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
* 5 நிமிடங்கள் கழித்து முகத்தை  வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
* ஒரு வாரத்தில் 2-3 தடவை இதனை பயன்படுத்தலாம்.
சருமத்தின் pH ஐ சமன் செய்வதற்கு பேக்கிங் சோடா உதவுகிறது. சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இதில் இருக்கும்  ஆன்டி பாக்டீரியல் தன்மையால் பருக்கள் மறைகின்றன. சரும துளைகளில் உள்ள அடைப்பை போக்கி, சருமத்தின் மேல் தோலில் படிந்திருக்கும் கருமை நிறத்தை போக்குகின்றது. சருமத்திற்கு ஆரோக்கியத்தையும் நல்ல நிறத்தையும் மீட்டு தருகிறது.

கடலை மாவு:
* 2 ஸ்பூன் கடலை மாவு 
* 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் 
செய்முறை:
* இரண்டு  பொருட்களையும்  ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். 
* முகத்தை மென்மையான க்ளென்சரால் கழுவி, காய வைக்கவும்.
* இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
* பின்பு வெது வெதுப்பான நீரில் முகத்தை  கழுவவும்.
* வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை பயன்படுத்தலாம் .
கடலை மாவு, முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்க உதவும். முகம் பிரகாசமாக விளங்க முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களின்  உற்பத்திக்கு உதவும்.

எலுமிச்சை:
* 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 
* 1 ஸ்பூன் தேன் 
செய்முறை:
* தேனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். 
* முகத்தை நன்றாக கழுவி காய வைக்கவும்.
* இந்த கலவையை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் விட்டு விடவும்.
* வெதுவெதுப்பான நேரில் முகத்தை கழுவவும்.
* வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம்.
எலுமிச்சையில்  வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சருமத்தை லேசாக்கி , கருப்பு திட்டுக்களை போக்குகின்றது. இந்த பேஸ்  பேக்  முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து , கட்டிகளை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.எலுமிச்சை மற்றும் தேன் இரண்டிற்கும் உள்ள சுத்தீகரிப்பு தன்மையால் மெலடோனின் உற்பத்தியை தடுத்து சரும நிறத்தை மேம்படுத்துகிறது.