உங்கள் வீட்டில் இருக்கும் 5 சூப்பர் உணவுகள்
வெயில் காலம் தொடங்கி வெளுத்து வாங்குகிறது. கோடையின் வெப்பத்தைக் குறைக்க பலர் பல விதமான வழிகளை பின்பற்றுகின்றனர்.
உடலில் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பழங்கள் மிகவும் நல்லது. பொதுவாக பழங்களை நாம் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் சில வகை பழங்களின் கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை நாம் தெரிந்து கொள்வதில்லை. ஆம், சில பழங்களின் கொட்டைகள் சூப்பர் உணவுகள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு நன்மைகள் கொண்டவையாக உள்ளன. உங்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் சில வகை கொட்டைகளைப் பற்றி இங்கே நாங்கள் கொடுத்திருக்கிறோம். இதனைப் படித்து அதன் நன்மைகளை அறிந்துக் கொள்ளுங்கள்.
பூசணி விதைகள் :
இந்த விதைகளை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கொதித்த பின், தண்ணீரை வடிகட்டி , சிறிதளவு எண்ணெய் விட்டு அதனை வறுத்துக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து காய வைக்கவும். இவற்றில் ஒமேகா 6 கொழுப்புகளும் , ஒற்றை புரிதக் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மேலும் இவற்றில் வைட்டமின் ஈ , வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் மங்கனீஸ், காப்பர், பொட்டசியம், கால்சியம் , இரும்பு, மெக்னீசியம், ஜின்க்,செலினியம் போன்ற மினரல்கள் உள்ளன.
பப்பாளி விதைகள் :
இந்த பப்பாளி விதையில் கால்சியம் , மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக உள்ளன. இவை ஒரு திடமான கிருமிநாசினியாக உள்ளன. மேலும் செரிமான மண்டலத்தில் வீக்கத்தை குறைக்கும் தன்மையும் இவற்றிற்கு உண்டு. இந்த விதைகள் சிறிதளவு கசப்பு தன்மைக் கொண்டது. ஆகையால் பப்பாளி விதிகளை முழுவதுமாக அப்படியே உண்ணலாம் அல்லது சிறிதளவு தேன் சேர்த்தும் உண்ணலாம்.
ஆளி விதைகள் :
ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் பி 1 , மினரல்கள் காப்பர், மெக்னீசியம், மற்றும் செலினியம் போன்றவை உள்ளன. இந்த விதைகளை வறுத்து, தூளாக்கி, சூப்பில் போட்டு பருகலாம். இன்னும் பல வழிகளில் இந்த விதைகளை நாம் உட்கொள்ளலாம்.
தர்பூசணி விதைகள் :
தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு பெரும்பாலும் அதன் விதைகளை நாம் குப்பையில் தான் வீசுகிறோம். ஆனால் அந்த விதையில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் மினரல்கள் மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜின்க், இரும்பு, பொட்டசியம் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த விதைகளைத் தூக்கி எறியாமல், அதனை முளைக்கவைத்து, காய வைத்து , பயன்படுத்தலாம்.
சியா விதைகள் :
சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும் இரும்பு, கால்சியம் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளன. இரவில் ஒரு கப் நீரில் ஒரு கைப்பிடி சியா விதிகளை ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் முதல் வேலையாக இந்த நீரை அருந்துங்கள்.
சூரியகாந்தி விதைகள் :
இந்த விதைகளில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி காம்ப்ளெக்ஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன. இவற்றில் கால்சியம், இரும்பு, மங்கனீஸ், ஜின்க் போன்ற மினரல்களும், ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம் போன்ற அதிகமாக உள்ளன.