உங்கள் பணம் இரட்டிப்பாக்க 6 நல்ல முதலீடு விதிகள்
இந்த எளிய விதிகளை அறிவதன் மூலம் உங்கள் முதலீட்டை லாபகரமானதாக திட்டமிடலாம்.
புதிய நிதி முதலீடு பற்றியும், அவற்றை கண்காணிப்பதற்கான குறிப்புகள் பற்றியும் பல ஆலோசனைகள் உள்ளன. ஆனால் அவற்றைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருப்பதால் அனைத்தும் பயனற்று உள்ளன.
ஒரு முதலீட்டாளர், எப்போது தான் முதலீடு செய்த தொகையை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு உயர்வதை எதிர்பார்க்கலாம் அல்லது ஒரு நிலையான எதிர்காலத்தைப் பெற அவர் எவ்வளவு சேமிக்க வேண்டும், என்பதை எளிய முறையில் ஒரு பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் சில அடிப்படை கணித விதிகள் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்து நமது முதலீட்டை திட்டமிடலாம். ஆகவே ஒரு கால்குலேட்டர் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.
இவை எல்லாம் தோராயமாக கணக்கிடப்படுபவை. துல்லியமாக கணக்கிடப்படுபவை அல்ல. குறிப்பாக உயர்ந்த வட்டி விகிதங்கள் இருக்கும்போது இவற்றில் சில மாறுபாடு இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. விதி 72 :
உங்கள் முதலீட்டிற்கான கூட்டு இருப்பு இரட்டிப்பாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை எளிய முறையில் மதிப்பீடு செய்வதற்கான வழி இதுவாகும். எண் 72 ஐ உங்களுக்கு தரப்பட்ட ஆண்டு வட்டி விகிதத்தால் வகுக்கவும். இதல் கிடைக்கும் விடை தான் மொத்த ஆண்டுகள். உங்கள் பணம் இரட்டிப்பாகும் ஆண்டுகளை இந்த கணக்கின் மூலம் கண்டுபிடிக்கலாம்'. உதாரணத்திற்கு நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடும் தொகை ரூபாய் 1000/-. உங்கள் ஆண்டு வட்டி விகிதம் 8%. நீங்கள் முதலீடு செய்த 1000/- ரூபாய், 2000/- ரூபாயாக இரட்டிப்பாக 72/8=9 ஆண்டுகள் பிடிக்கும்.
2. விதி 114 :
உங்கள் முதலீடு எப்போது மூன்று மடங்காக வளரும் என்பதை கணக்கிட இந்த விதி உதவும். விதி 72 போல், உங்கள் வட்டி விகிதத்தால் 114ஐ வகுக்கவும். இதன்மூலம் உங்கள் பணம் மூன்ற மடங்கு வளரும் மொத்த ஆண்டுகள் கிடைக்கும். உதாரணத்திற்கு, 114/8=14.25 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூபாய் 1000/- மூன்று மடங்காக ரூபாய்.3000/- ஆவதற்கு 14.25 ஆண்டுகள் பிடிக்கும்.
3. விதி 144 :
144 விதியை பின்பற்றுவதால் , உங்கள் தொகை நான்கு மடங்காக வளரும் காலத்தை அறிய முடியும். மேலே கூறிய வழிமுறைப்படி தான் இதுவும் செயல்படும். உங்கள் ஆண்டு வட்டி விகிதத்தால் 144ஐ வகுக்கவும்.
4. 50:20:30 விதி :
இளம் தனி நபர்களுக்கு தங்கள் வருமானத்தை சிறப்பாக நிர்வகிக்க இந்த பொது விதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விதியின்படி, ஒருவரின் மொத்த வருமானத்தில் எல்லா வரி விலக்குகளும் போக, மீதம் உள்ள தொகையில் 50 சதவிகிதம் வாழ்க்கை தேவைகளான பில் கட்டணங்கள், உணவு முதலியவற்றிற்க்கு பயன்படுத்தலாம். அடுத்த 20 சதவிகிதத்தை குறைந்த கால இலக்குகளுக்காக திட்டமிடலாம் மற்றும் அவசர தேவைக்காக வைத்துக் கொள்ளலாம். மீதி இருக்கும் தொகையை நீண்ட கால முதலீடாக சேமித்து வைக்கலாம்.
இந்த விதியை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் உங்களால் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
5. 100 மைனஸ் உங்கள் வயது :
உங்கள் வயது அடிப்படையில் நீங்கள் எடுக்க வேண்டிய அபாயத்தை அணுகுவதற்கு இந்த விதியை பயன்படுத்தப்படலாம். உங்கள் வயதை 100ல் கழிக்கவும். இதன் மூலம் நீங்கள் ஈக்விடீயில் முதலீடு செய்ய வேண்டிய தொகையின் சதவிகிதத்தை அறிய முடியும்.
உதாரணத்திற்கு . நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.5000/- முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்கள். உங்கள் வயது 20 என்றால் , ((100-20) 80 சதவிகிதம் தொகை அதாவது 5000/- ரூபாயில் 80% நீங்கள் ஈக்விடியில் மற்றும் இதர தொகையை பாதுகாப்பான முதலீட்டிலும் போடலாம். வயது அதிகரிக்கும் போது ஆபத்தின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
6. வருங்கால மதிப்பு:
நீங்கள் முதலீடு செய்யும்போது, பணவீக்க காரணி நிச்சயம் கருதப்பட வேண்டும். 10,000/- ரூபாய்க்கு இன்று இருக்கும் மதிப்பு, பத்து வருடங்களுக்குப் பிறகு அதே அளவு மதிப்பு இருக்காது . உங்கள் வாங்கும் திறன் குறைக்கப்படும். ஆகவே இன்றைய 10,000/- ரூபாய்க்கான மதிப்பு வருங்காலத்தில் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முதலீட்டு தொகைக்கு ஏற்ற லாபகரமான திட்டத்தை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
வருங்கால மதிப்பு = தற்கால மதிப்பு ((1+r/100)n என்பது சூத்திரம் ஆகும். இதில் "r" என்பது ஆண்டின் பணவீக்க விகிதம் மற்றும் "n" என்பது உங்கள் இலக்கை அடைய மீதம் இருக்கும் காலம்.