பைனாப்பிள் தோல் உடலுக்கு நன்மை என்பதற்கான 9 காரணங்கள் 

வெளிப்புறம் கடினமாக இருந்தாலும் உட்புறம் மிகவும் இனிமையான சுவை உடைய பழம் அன்னாசிப் பழம்.

பைனாப்பிள் தோல் உடலுக்கு நன்மை என்பதற்கான 9 காரணங்கள் 
பைனாப்பிள் தோல் உடலுக்கு நன்மை என்பதற்கான 9 காரணங்கள் 

அன்னாசிப்பழம் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் ஒரு பழமாகும். இந்தப் பழம் பலரின் விருப்பத்திற்குரிய ஒரு பழமாகும். இதனை சாலட் , ஜூஸ் என்று பல விதமாக உட்கொள்ளலாம். இந்த பழத்தைக் கொண்டு இனிப்புகள் கூட தயாரிக்கலாம். 

அன்னாசிப்பழம் நமக்கு பல நன்மைகளைப் புரிகிறது. மற்ற பழங்களைப் போல் சருமத்திற்கு இது சிறந்த நன்மைகளைச் செய்கிறது. குறிப்பாக இதன் மேல்புறத் தோல் பற்றிய நன்மைகளைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

நன்மைகள்:

1. அழற்சி எதிர்ப்பு :
அன்னாசிப் பழ தோல் மற்றும் தண்டுகளில் காணப்படும் சக்தி மிகுந்த என்சைம், ப்ரோமிலைன். இந்த என்சைம் உடலில் உள்ள அழற்சியைப் போக்க உதவுகிறது. காயம் ஏற்பட்ட பிறகு அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உகந்தது. மேலும் சைனஸ் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள பல்வேறு அழற்சியைப் போக்கவும் உதவுகிறது. 

2. செரிமானத்திற்கு உதவுகிறது:
அன்னாசிப் பழ தோல் ஜீரணத்தை எளிதாக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் குடலில் உள்ள ஒட்டுண்ணிகள், மலச்சிக்கல், IBS அறிகுறிகள் ஆகியவற்றையும் எதிர்த்து போராட உதவுவதாக அறியப்படுகிறது. மேலும் இவை ஆரோக்கியமான  குடல் நுண்ணுயிரிகள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

3. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
அன்னாசிப் பழம் மற்றும் அதன் தோலில்  இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி சத்து தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் தடுக்கிறது. ப்ரோமிலைன் மற்றும் வைட்டமின் சி யின் சக்தி , கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது , சளியைக் குறைக்கிறது, இருமலைக் கட்டுப்படுத்துகிறது, காயத்தை ஆற்றுகிறது , ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது 

4. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியை எதிர்த்து போராடுகிறது :
இந்த இடத்தில் மறுபடியும் ப்ரோமிலைன் மந்திரம் வேலை புரிகிறது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது. அன்னாசிப் பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட பானம் இந்த வலியைக்  குறைக்க நேரடியாக உதவுகிறது. இதனைத் தயாரிக்கும் முறையை கீழே காணலாம்.

5. கண் பார்வையைப் பாதுகாக்கிறது :
அன்னாசிப் பழ செடியில்  உள்ள பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் சி சத்தின் காரணமாக கண் அழுத்த நோய் போன்ற சீரழிவு நோய்கள் தடுக்கப்படுகின்றன. 

6. பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகின்றது :
அன்னாசி பழத் தோலில் உயர்ந்த அளவு மாங்கனீஸ் உள்ளது. ஆகவே இந்த தோல், அழற்சியை எதிர்ப்பதுடன் கூடுதலாக, பல் ஈறுகளையும் திசுக்களையும் பாதுகாக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மாங்கனீஸ் உதவுகிறது. வாய் வழி சுகாதாரத்தில் இந்த பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி சத்தும் துவர்ப்பு தன்மையும் இணைந்து ஈறுகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

7. புற்று நோய் எதிர்ப்பி :

அன்னாசிப் பழத் தோலில் உள்ள உயர்ந்த அளவு மாங்கனீஸ், வைட்டமின் சி, ப்ரோமிலைன் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் போன்றவை கட்டிகளை எதிர்த்து போராடி, புற்று நோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

8. நல்ல இரத்தம் பாய உதவுகிறது:
அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமிலைன் , இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் அன்னாசி பழச் சாற்றில் உள்ள தாமிரம் , ஆரோக்கியமான இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் நுண்ணிய பொட்டாசியம் , இரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது மேலும் இவை சோடியத்தின் பலத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

9. கருவுறுதல் :
தாய்மை அடைய விரும்பும் பெண்கள் தங்கள் உணவில் கவனமாக இருத்தல் அவசியம். அன்னாசிப் பழத்தில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் ப்ரோமிலைன் காரணமாக இதனை அனைவரும் விரும்பி உட்கொள்ள நினைப்பார்கள். கருப்பையில் உள்ள அழற்சியைக் குறைத்து, கருவுறுதலுக்கான சாதகமான சூழலை உருவாக்கித் தர  இந்த பழம் உதவுகிறது. வெதுவெதுப்பான டீ அல்லது சூப் செய்யும் முறையை பின்பற்றி பருகுவதால் ஆரோக்கியமான கருவுறுதலுக்கான உதவியைப் பெறலாம். மேலும் இதனைக் கொண்டு இனிப்புகள் தயாரித்து உட்கொள்ளலாம்.

அன்னாசிப் பழத்தின் தோலை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கான சில குறிப்புகள் இதோ உங்களுக்காக :

1. தேநீர் தயாரிப்பது எப்படி?
அன்னாசிப் பழத் தோலின் நன்மைகளைப் பெறுவதற்கு அதனைக் கொண்டு சூடாக அல்லது குளிர்ச்சியாக ஒரு தேநீர் தயாரித்து பருகலாம். அன்னாசிப் பழத்தின் தோலை உரித்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதனுடன் இரண்டு லவங்கப் பட்டை, , ஒரு சிறிய துண்டு  இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையில் 2  கிளாஸ்  அளவு தண்ணீர் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும். அடுத்த அரை மணி நேரம் இந்த கலவை அப்படியே இருக்கட்டும், தேவைபட்டால் இனிப்பு சேர்த்துக் கொள்ளவும். சூடாக அல்லது குளிர்ச்சியாக இதனைப் பரிமாறவும்.

2. ஜூஸ் தயாரிப்பது எப்படி?
தேநீர் தயாரிக்கும் அதே முறையில் ஜூஸ் தயாரிக்கலாம். ஆனால் எந்த ஒரு மசாலாப் பொருளும் சேர்க்காமல், வெறும் அன்னாசிப் பழத் தோல் மற்றும் தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை குளிர விடவும். பின்பு மேலும் சில தோலை எடுத்து அரைத்துக் கொண்டு இந்த கலவையில் சேர்க்கவும். பின்பு வடிகட்டி பிர்ட்ஜில் வைத்து குளிர செய்து பரிமாறவும்.

3. வினிகர் தயாரிப்பது எப்படி ?
அன்னாசிப் பழ வினிகர் தயாரித்து உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கீல்வாதம் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். பெர்மெண்டடு புட் லேப் என்ற இணையதளத்தில்  இருந்து எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ள  இந்த ரெசிபியை பின்பற்றி தயாரிக்கவும். தோலில் பூச்சிக் கொல்லி மருந்து படிந்திருக்கும் வாய்ப்பு இருப்பதால், நன்கு கழுவியபின் அதனைப் பயன்படுத்தவும்.

4. கஞ்சி :
காய்கறி சூப் , அல்லது கஞ்சி, சிக்கன், கடல் உணவு அல்லது மாட்டு இறைச்சி என்று எந்த உணவோடும் அன்னாசி பழத் தோலை சேர்த்து சாப்பிடலாம். இதனை இணைப்பதால், ஒரு சுவை மிகுந்த ஊட்டச்சத்து அடங்கிய ஒரு உணவு உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரோக்கியத்திற்கு மற்ற பழங்களைப் போல் இதன் தோலும் உதவுகிறது. அன்னாசிப் பழத் தோலை  வெட்டியவுடன் உடனடியாக உட்கொள்ள முடியாவிட்டால், அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரீசரில் வைத்துக் கொள்ளலாம். 

அல்கஹால் மற்றும் வினிகர் தயாரிப்பில் அன்னாசி பழத் தோல் பயன்படுகிறது. இதே முறையில் வீட்டிலும் தயாரித்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். 

அன்னாசிப் பழத் தோலின் நன்மை பற்றி தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் இதனைப் பயன்படுத்தி உங்கள் சரும பாதுகாப்பை மேற்கொண்டு வருபவரா? அதனைப் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.