சொறி சிரங்குக்கான 9 வகையான இயற்கை சிகிச்சை முறைகள்
சிரங்கு என்பது ஒரு அருவருப்பான நோய் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த சரும பாதிப்பை எளிதில் போக்கலாம்
சர்கொப்டிக் ச்கபிஸ் என்ற ஒட்டுண்ணிகள் தாக்கத்தால் சொறி சிரங்குகள் ஏற்படுகின்றன. இது சருமத்திற்கு அரிப்பைத் தருகின்றன. பெரியவர்களை விட குழந்தைகள் இந்த சிரங்கால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சருமதிற்குள் இந்த ஒட்டுண்ணிகள் ஆழ்ந்து ஊடுருவுவதால் சரும தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
சருமத்தில் உள்ள திசுக்களை உண்டு, அவை வளர்ந்து சருமதிற்குள் முட்டை இட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன. இதன் காரணமாக சருமம் சிவப்பு நிறமாக மாறி, எரிச்சல் அதிகமாகிறது. நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருதால் கூட இத்தகைய சிரங்குகள் வளர்ச்சியடையலாம் என்று சுகாதார சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய பாதிப்புகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதால் சரும தொற்று பாதிப்பு சில அபாய விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இந்த பாதிப்பு அதிகரிப்பதால் தோலின் மேற்புறம் உடைந்து சருமத்திற்கு சேதம் உண்டாகலாம். இந்த நிலை உண்டாகும் போது இதனை சரி செய்வது மிகவும் கடினம். ஆகவே அதிகபட்ச அரிப்பு உங்கள் சருமத்தில் உண்டாகும்போது அதனை புறக்கணிக்க வேண்டாம். கூடுதலாக, சருமத்தில் உண்டாகும் தடிப்புகள், விரல்களுக்கு இடையில் தோன்றும் பிளவுகள் போன்றவை சருமம் மேலும் சேதம் அடைவதற்கான அறிகுறிகள் ஆகும். சிரங்கிற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதனால் ஏற்படும் தொற்றை முற்றிலும் குணப்படுத்த சற்று கால தாமதம் ஏற்படலாம்.
சிரங்கிற்கான இயற்கை சிகிச்சை முறைகள்
மஞ்சள்:
மஞ்சள் . கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஒரு பொருள். மஞ்சள் , நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தொற்று பாதிப்புகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதில் மஞ்சள் சிறந்த தீர்வை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் மஞ்சளை சாப்பிடுவதால் , சிரங்கு உட்பட, உடலின் உட்புற மற்றும் வெளிப்புற தொற்று பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் சேர்த்து ஒரு விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதை சருமத்தில் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வரவும். அடுத்த 15 நாட்களுக்குள் நல்ல மாற்றத்தை உணரலாம்.
சந்தனம்:
எரிச்சலடைந்த சருமத்தை குணப்படுத்தும் மற்றும் மிருதுவாக்கும் தன்மை சந்தனத்திற்கு உண்டு. சந்தனத்துடன் தண்ணீர் சேர்ர்த்து கலந்து சருமத்தில் பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வரவும். இதனால் சருமத்தில் ஏற்பட்ட அழற்சி மற்றும் சிவப்பு நிறம் குறைகிறது. சந்தனத்தில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை சரும தொற்றை குணப்படுத்துவதோடு மட்டும் நில்லாமல், மறுபடி அவை தோன்றாமல் இருக்க உதவுகிறது.
டீ ட்ரீ எண்ணெய் :
கிருமி நாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் ஆதாரமாக விளங்குவது டீ ட்ரீ எண்ணெய். கடுமையான அரிப்பு மற்றும் வீக்கத்தை போக்க இது உதவுகிறது. டீ ட்ரீ எண்ணெயின் கிருமி எதிர்ப்பு தன்மையால் , சிரங்குகளை ஊக்குவிக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. டீ ட்ரீ எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பாதிக்ககப்பட்ட இடத்தில் தடவுவதால் சருமம் அழற்சி குறைந்து இதமான உணர்வைப் பெறுகிறது.
வேப்பெண்ணெய் :
வேப்பெண்ணெய் , பக்டீரியா எதிர்ப்பு தன்மை, நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை போன்றவற்றைக் கொண்டு ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மறுபடியும் சிரங்குகள் தோன்றாமல் இருக்க இந்த கூறுகள் அனைத்தும் அவசியமானது. இந்த எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏலக்காய் :
எல்லா விதமான செயலுக்கும் ஏற்ற ஒரு பொருள் இந்த ஏலக்காய். வாசனை பொருளாக மட்டும் இல்லாமல் இந்த ஏலக்காய் பல்வேறு சரும தொல்லைகளுக்கு தீர்வை அளிக்கிறது. குறிப்பாக சிரங்கு பாதிப்புக்கு ஏலக்காய் நல்ல ஒரு தீர்வை அளிக்கிறது. தொற்று எதிர்ப்பு மற்றும் புத்துணர்ச்சி பலன்களை அளிக்கக்கூடியது இந்த பொருள். இந்த இரண்டு தன்மைகளும் சிரங்கை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றி பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்தும். ஏலக்காய் அன்டி ஆக்சிடென்ட்களின் ஆதாரமாக விளங்குகிறது. ஆகையால் இந்த தன்மை, ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை நிர்வகிக்க உதவியாக உள்ளது. சிறந்து செயலாற்றும் நோயெதிர்ப்பு மண்டலம், சிரங்குகளை எதிர்த்து போராட உதவும்.
கற்றாழை :
கற்றாழை செடியை ஒரு மந்திரச் செடி என்று கூறுவது மிகையல்ல. இந்த கற்றாழை இலையில் இருந்து எடுக்கப்படும் ஜெல், பல்வேறு சரும நிலைகளை மாற்ற உதவுகிறது. சிரங்குகளைக் கூட கற்றாழை ஜெல் கொண்டு குணப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்தி மென்மையாக்க உதவுகிறது இந்த கற்றாழை. காயங்களின் மேல் ஒரு இதமான உணர்வைத் தரும் இந்த கற்றாழை. தினமும் கற்றாழை ஜெல் எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி வருவதால், குறைந்த கால அளவில் அரிப்பு நீங்கும்.
கிராம்பு எண்ணெய்:
கிராம்பு எண்ணெய் மிகவும் மிருதுவானது. வேகமாக சிரங்குகள் குணமடைய , பாதிக்கப்பட்ட இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவலாம். இந்த எண்ணெய்க்கு குணப்படுத்தும் தன்மை உண்டு. இந்த எண்ணெய் சருமத்தின் ஆழத்தில் ஊடுருவி, தொற்றை போக்குகிறது, மேலும் அவை மீண்டும் வராமல் தடுக்கிறது. கிராம்பு எண்ணெய் கொண்டு சருமத்தை 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காய சாறு:
அழற்சி எதிர்ப்பு தன்மையின் ஆதாரமாக விளங்குவது வெங்காயம். வெங்காயத்தில் போதுமான அளவு சிலிகான் மற்றும் சல்பர் உள்ளது. பூச்சிகளின் முட்டையை இந்த ஊட்டச்சத்துகள் கொன்று விடுவதால் புதிய பூச்சிகள் உருவாகாமல் தடுக்க முடிகிறது. வெங்காயத்தின் சாற்றை எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும். இதனை தடவியவுடன் எரிச்சல் மிக அதிகமாக இருந்தால் உடனடியாக அதனை கழுவி விடுவது நல்லது. தோல் சிகிச்சை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வேறு சிகிச்சையைத் தொடரலாம்.
சிட்ரோநெல்லா எண்ணெய் :
இந்த எண்ணெய் அதிகம் கேள்விப்படாத ஒரு எண்ணெய். லெமன் கிராசில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த பூச்சிகொல்லி என்று பல ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. பக்டீரியா தொற்று மற்றும் சிரங்குகளைக் போக்க சிட்ரோநெல்லா எண்ணெய்யை உபயோகிக்கலாம். இதன் குணப்படுத்தும் தன்மை, சரும தொற்று பாதிப்பில் இருந்து உங்களை விரைந்து விடுவிக்கும்.
வெறும் உடம்பில் இந்த எண்ணைய் தடவி 10 நிமிடம் ஊற விடவும். பிறகு கழுவி விடவும். சிரங்குகளை உடனடியாக விரட்ட, குளிக்கும் நீரில் இந்த் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சையின் நறுமணமும் இந்த ஒட்டுண்ணிகளை அழிப்பதில் குறிப்பிட்ட பங்கு ஆற்றுகிறது.
சிரங்குகள் வராமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த கிருமி தொற்று முழுவதும் நீக்கப்படாமல் இருந்தால் மறுமுறை சிரங்குகள் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் இந்த பாதிப்பு பரவும். ஆகவே சிரங்கு பாதிப்பு உள்ளவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம். அவை பின்வருமாறு,
நீங்கள் படுக்கும் இடம் மற்றும் உடுத்தும் உடைகள் மிகவும் சுத்தமாக இருப்பதால் மறுபடி கிருமி தொற்று ஏற்படமால் பார்த்துக் கொள்ளலாம்.
சின்ன சின்ன பூச்சிகளைத் தடுக்க, உஙகள் அறையில் உள்ள கார்பெட், மற்றும் மரச்சாமான்களை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
சிரங்குகள் உங்கள் உடலில் தோன்றியவுடன், அடிக்கடி வெளியில் செல்லாமல் உங்கள் அறையிலேயே இருக்க பழக வேண்டும். இதனால் இந்த பாதிப்பு உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களையும் உங்கள் செல்லப் பிராணிகளையும் அண்டாமல் பாதுகாக்கலாம்.
இந்த சிரங்கு பாதிப்பால், கட்டுப்படுத்தமுடியாத அரிப்பு ஏற்படும். அதனால் அரிப்பை கட்டுப்படுத்த சருமத்தை அதிகமாக சொறியவோ கீறவோ வேண்டாம். இதனால் உங்கள் பாதிப்பு குறையாது மாறாக அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சருமத்தை அதிகம் சொறிவதால் இரண்டாம் நிலை தோல் அழற்சி உருவாகலாம் என்று தோல் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரங்குகள் ஏற்பட்டதால் அதிகம் கவலைக் கொள்வது இந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்தது பற்றி கவலை கொள்ளும் நேரத்தில், அதனை போக்க சிகிச்சை அளிப்பது நன்மையைத் தரும்.
உடனடி நிவாரணத்திற்கு, ஊட்டச்சத்து மிக்க உணவு அட்டவனையை பின்பற்றலாம். அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்ட உணவை சேர்த்துக் கொள்வதால் வேகமாக இந்த பாதிப்பில் இருந்து வெளியேறலாம்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் சருமத்தில் உள்ள சிவப்பு நிறம் மறைந்து எரிச்சல் குறையும்.
முடிவுரை:
சருமத்தை எப்போது சிரங்குகள் பாதிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் அவை தோன்றியவுடன் இயற்கை சிகிச்சைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை பயன்படுத்தலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வேகமாக இந்த பாதிப்பில் இந்து வெளி வரலாம். மேலும் சருமம் சேதமடையாமல் இருக்க ஒரு தோல் சிகிச்சை மருத்துவரை அணுகலாம்.