போகர்

ஆன்மீக தன்மையும், அறிவியலும் ஒன்று சேர்ந்து இருக்கும் நவபாஷான சிலையை பார்க்கும்போது போகர் சகல கலைகளிலும் வல்லவர் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

போகர்
created to wikipedia

போகர்

போகருடைய இயற்பெயர் போகாநாதர் . நம் நாட்டில் பல சித்தர்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க பதினெட்டு சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் காளாங்கிநாதர் சீடர் ஆவார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவரை சீனாவில் போகர் போயாங் வேய் என்று அழைக்கிறார்கள். பழனியில் உள்ள நவபாஷான முருகன் சிலை இவரால்  உருவாக்கப்பட்டது என்று சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ளது. இன்றும்  பழனிமலை கோயிலில் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது.

போகரின் மருத்துவ ஞானம் 

இவருடைய மருத்துவ ஞானத்தை கூறும் வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், வைத்திய சூத்திரம், சப்பாணி காண்டம், துவார காண்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இவருக்கு கூடுவிட்டு கூடுபாயும் அற்புதக் கலையும் தெரியுமாம். மனிதர்கள் சாகாவரம் பெறுவதற்காக பல ஆராய்ச்சிகள் செய்து அதற்கான மருந்தையும் கண்டுபிடித்துள்ளார் என்ற குறிப்புகள் உள்ளது. ஆனால் இது இயற்கைக்கு புறம்பான செயல் என்று எதிர்ப்பு வந்ததால் இதை கைவிட்டு அந்த மூலிகையை கொண்டு மக்களின் நோய்களை குணமாக்கும் நவபாஷான சிலையை செய்தார் என்று கூறப்படுகிறது. இவர் செய்த நவபாஷான சிலையின் மகிமையை கண்டு உலகமே வியக்கின்றது ஏனென்றால் இது மருத்துவ குணம் கொண்ட சிலை. இந்த சிலையை எவ்வாறு செய்தார் என்ற சிறு தொகுப்பை பற்றி பார்ப்போம்.  

பழனியில் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய காரணம்

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் தான் போகர் அவருடைய சீடர் புலிபாணியுடன் உதவியுடன் இந்த நவபாஷான முருகன் சிலையை செய்தார். செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சு பழனியில் விழுவதால் இந்த இடத்தில் போகர் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவரான முருக பெருமானின் சிலையை (நவபாஷான முருகன் சிலையை) பிரதிஷ்டை செய்தார் என்றும், ஒருமுறை இவர் தவம் மேற்கொண்ட போது  முருகன் பெருமான் இவர் முன் அவதரித்து தன்னுடைய சிலையை செய்து பழனியில் பிரதிஷ்டை செய்ய சொன்னதால் பழனியை  தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்ற இருவேறு கருத்துக்கள் உள்ளது.    

நவபாஷான சிலை அதன் தன்மை மாறாமல் நிலைத்திருக்க காரணம் 

நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான பாஷாணங்கள் (விஷயங்கள்) என்று பொருள்படும். நவ  பாஷாணத்தில் உள்ள ஒவ்வொரு பாஷாணத்திலும் ஒவ்வொரு  நவகிரகங்களின் குணங்கள் உள்ளன என்று உணர்ந்த போகர் இந்த ஒன்பது பாஷாணத்தை சரியான விகிதத்தில் கலந்து மருத்துவ குணம் கொண்ட நவபாஷான முருகன் சிலையை  போகர் அவருடைய சீடர் புலிபாணியின் உதவியுடன் மக்களின் நலனுக்காக உருவாக்கி இருக்கிறார். இன்றும் அதன் தன்மை மாறாமல் நிலைத்திருக்க காரணம். அவர் இந்த சிலையை பொது நலத்துடன் செய்தது தான். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பொருட்களை மக்களுக்கு பிரசாரமாக கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்த பிரசாதம் அனைத்து விதமான நோய்களை குணமாக்கும் ஆற்றல் பெற்றது. இவர் சோதிடத்திலும் தேர்ந்தவர் என்பதால் இந்த சிலையை செய்ய நவக்கிரகங்களின் தன்மை கொண்ட ஒன்பது வகையான பாஷாணங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார். அதனால் இந்த சிலையை வணங்குவோருக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைப்பதோடு  திருமணத்தடை நீங்கும், தொழில் வளர்ச்சி பெருகும்,  குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

ஆன்மீக தன்மையும், அறிவியலும் ஒன்று சேர்ந்து இருக்கும் இந்த நவபாஷான சிலையை பார்க்கும்போது போகர் சகல கலைகளிலும் வல்லவர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. போகர் செய்த நவபாஷான சிலை பழனி மலைக்கோவிலில் மட்டுமல்ல கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலிலும் உள்ளது. பழனி மலையில் உள்ள நவபாஷான முருகன் சிலையின் தன்மை இன்றும் மாறாமல் இருப்பதற்கு அவரின் அறிவாற்றலே காரணம்.