ஜின்செங் மற்றும் பார்லி தேநீர்
தினமும் ஜின்செங் மற்றும் பார்லி தேநீர் எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கடுமையான சுற்றுச் சூழல் பாதிப்பால் நமது சருமம் மற்றும் நமது ஆரோக்கியத்தில் தேவையற்ற பாதிப்பு உண்டாகிறது. சுற்றுப்புறத்தில் மாசு உண்டாக்கும் காரணிகள் அதிகரிப்பதால் அவை உடலில் உயிரணுக்களை சீர்குலைத்து நுரையீரல் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் ஆஸ்துமா , மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடால் உடலில் ஏற்படும் விளைவுகள்:
- சுற்றுச்சூழல் மாசுபாடுகள் சுவாச மண்டல நோய்கள் மற்றும் உடலின் பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.
- சரும நிறமிழப்பு, வயது முதிர்விற்கான அறிகுறிகள் மற்றும் சீரற்ற சருமம் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
- சரியான முறையில் ஆக்சிஜன் வடிகட்டப்படாத காரணத்தால் சோர்வு மற்றும் பதட்டம் உண்டாகிறது
- கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவை உண்டாகிறது.
- இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்ட ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
- தொடர்ச்சியாக இவ்வித மாசுபாடுகளுக்கு வெளிப்படுவதால் சருமத்தின் நீர்ச்சத்து குறைந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைந்து , சருமம் வறண்டு காணப்படுகிறது.
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவை பாதிக்கப்படுகிறது.
- உடலின் ஹார்மோன்களை பாதித்து இனப்பெருக்க அமைப்பை சேதப்படுகித்துகிறது.
ஜின்செங் மற்றும் பார்லி டீ கொண்டு இந்த பாதிப்பை போக்குவது எப்படி?
ஜின்செங் தேநீர் அதன் தாவரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரத்தில் ஜின்சனாய்டு உள்ளது. பார்லி தானிய வகையைச் சேர்ந்தது. இவை இரண்டும் சேர்த்து. தயாரிக்கப்படும் ஒரு தேநீர் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
ஜின்செங் டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நச்சுகளை வெளியேற்றுகிறது:
இந்த தேநீரில் இயற்கை ஆன்டிஆக்சிடெண்ட் இருப்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு புத்துணர்ச்சியை மீட்டுத் தருகிறது. தொடர்ந்து ஜின்செங் தேநீர் பருகுவதால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குறைகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது.
பார்லி டீ பல பொதுவான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது:
சுற்றுச்சூழல் மாசுபாடால் உண்டாகும் குளிர் போன்ற பொதுவான நோய்களைப் போக்க இந்த தேநீர் உதவுகிறது. இது ஒரு சிறந்த டையூரிடிக் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (யுடிஐ) போக்க உதவுகிறது, இது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் தேவையற்ற பாதிப்புகளைப் போக்க உதவுகிறது.
ஜின்ஸெங் டீ உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது:
ஜின்ஸெங் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதால், உடலின் ஆற்றல் அளவும் அதிகரிக்கிறது. இதனை அருந்துபவர் மனம் அமைதியடைந்து சுறுசுறுப்பாகவும் அதிக ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது. வெளிப்புற அழுத்தத்தை சமாளிக்கும் திறனை உடலுக்குக் கொடுக்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட பார்லி டீ:
பார்லி தேநீரில் வைட்டமின் சி சத்து இருப்பதால், தொற்றுநோய்களைத் தடுத்து சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. இதன் அதிகரித்த கொலோஜன் அளவு காரணமாக சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரிக்கிறது. உடலில் புகை மற்றும் மாசுகள் அளவைக் குறைக்க வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. வயது முதிர்விற்கான அறிகுறிகளும் குறைகிறது