ப்ரவுஸ் செய்யும்போது தோன்றும் விளம்பரங்கள் உங்களை தொந்தரவு செய்கிறதா??
கூகிளில் ப்ரவுஸ் செய்யும் போது வரும் விளம்பரங்களை எவ்வாறு இலவசமாக ப்ளாக் செய்யலாம் என அறிய இங்கே தொடர்ந்து படியுங்கள்.
வெப்சைட்டில் வரும் விளம்பரங்கள் தான், வெப் பிரவுசர்களின் முக்கிய வருமானமே ஆகும். ஆனால் அதே நேரத்தில் ஒரே வலைதள பக்கத்தில் வரும் எண்ணற்ற விளம்பரங்கள் நம்மை எரிச்சலைடைய செய்து விடும் குறிப்பாக பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் இன்னொரு வலைப்பக்கம் வந்து அங்கே தோன்றும் விளம்பரங்கள், என இவையெல்லாம் நம்மை கடுப்படித்து விடும்.
ஆனால் நமக்கு உதவுவதற்கு என்றே, கூகிள் குறிப்பிட்ட வலைத்தளங்களில் விளம்பரங்கள் வராமல் இருக்க பயனர்களுக்கு என்று ad-blocker ஐ உருவாக்கியுள்ளது. இந்த ad-blocker ஆனது, மற்ற குறிப்பிட்ட ad blocker போல திறமையாக செயல்படாது என்றாலும், இதுவும் கூட வீடியோ விளம்பரங்கள், வைரஸை ஏற்படுத்தும் விளம்பரங்கள், மோசடிகள் மற்றும் நமக்கு தொந்தரவு தரும் விளம்பரங்களைத் தடுக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த விளம்பரதாரர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை திருடுவதையும் சிறப்பாக தடுக்கும்.
எனவே, உங்கள் குரோம் ப்ரவுசர்களில் ஏதேனும் தெரியாத adblocker ஐ நீங்கள் பதிவிறக்க விரும்பவில்லை என்றால், இந்த கூகிள் குரோமின் built-in ad-blocker ஐ எவ்வாறு இயக்கலாம் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
தேவையானவை : கூகிள் குரோம் ப்ரவுசரின் சமீபத்திய எடிசன், இண்டெர்நெட் இணைப்பு,விண்டோஸ் PC, மேக், ஆண்ட்ராய்டு அல்லது iOS.
ஸ்டெப்ஸ் : கூகிள் குரோமின் built-in ad-blocker ஐ ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்
1. எந்த வலைதள பக்கத்தில், உங்களுக்கு விளம்பரங்களைத் ப்ளாக் செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தை ஓபன் செய்யுங்கள்.
2. பின் URL பாரின் அருகில் இருக்கும் ‘பேட் லாக்’ என அழைக்கப்படும் பூட்டு வடிவத்தில் இருக்கும் ஐகானை திறந்து அதில் ‘site settings ' ஐ கிளிக் செய்யுங்கள்.
3. இந்த ‘site settings’ பக்கத்தில் ads என்னும் ஆப்ஷனை தேடி கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது இதில் தோன்றும் ஆப்ஷன்களில் ‘block’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது அந்த வலைதள பக்கத்திற்கு மறுபடியும் சென்று பார்த்தால் பல விளம்பரங்கள் block செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
சில நேரங்களில் பிரவுசர்கள் தானாகவே default Block ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் அதை கண்டுக்காமல் அப்படியே விட்டுவிடலாம் அல்லது நீங்களும் கீழேயுள்ள Block ஆப்ஷனை செலக்ட் செய்யலாம்.