பல சுவாரசியங்களை கொண்ட முக்கியமான அவயம்
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை 80% தெரியப்படுத்துவது கண் தான்.
பல சுவாரசியங்களை கொண்ட முக்கியமான அவயம்
கண் நம் உடலில் உள்ள அவயங்களில் மிக முக்கியமானது.மூளைக்கு அடுத்தப்படியாக மிக சிக்கலான பாகங்களை கொண்ட அவயம் கண் தான்.நாம் காணும் ஒரு பொருளை தெளிவாக நமக்கு காட்டுவதற்காக கண் எவ்வளவு வேலைகளை துரிதமாக செய்கின்றது என்பதை இக் கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்துகிறோம். நாம் ஒரு காட்சியை காணும் போது முதலில்
விழி படலத்தின் வழியாக ஒளிக்கதிர்கள்( காட்சிகள்) கண்களுக்குள் செல்கின்றது. மனித கண்ணில் உள்ள லென்ஸ் ஒளிக்கதிர்க்கு ஏற்றவாறு தன்னை சரி செய்து கொள்ளும். இதற்கு கண்மணியை சுற்றி ஒரு வகை தசை(சிலியரி தசை) இருக்கும்.இந்த சிலியரி தசைநார்கள் கண்களைச் சுற்றி உள்ள வெண்மையான சவ்வை விரிவடையவோ, சுருங்கவோ வைக்கிறது. அதன் விளைவாக கண்ணுக்குள் இருக்கும் கண்மணி ஒளியை பெற்றுக்கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும் திறனை பெறுகிறது.இந்த வெண்மையான சவ்வு பகுதியில்தான் கண்விழி முன்புறத்தில் புடைத்து இருக்கும். கருவிழியின் பின்புற தோல் தான் விழித்திரை. விழித்திரைக்கு பார்க்கும் காட்சியானது விழிப்படலம், லென்ஸ், கூர்ம திரவம் வழியாக சென்றடைகிறது. விழித்திரை இந்த காட்சிக்கு சில மின்வேதிய மாற்றங்களை ஏற்படுத்தி மூளைக்கு செல்லும் பார்வை நரம்புகள் வழியாக மூளைக்குத் தகவல்களை (காட்சிகளை) தலைகீழாக அனுப்புகிறது. மூளை இத்தகவல்களை நேரான காட்சிகளாக மாற்றி நமக்கு காட்டுகிறது.ஆனால் நாம் ஒரு காட்சியை காண கண் எவ்வளவு துரிதமாக வேலைகளை செய்கின்றது என்பதே அதனுடைய சிறப்பம்சமாகும்.
கண்களை பற்றிய சுவாரசியமான விஷயங்கள்:
மனித கண்களால் 10 லட்சம் மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்.
பிறக்கும்போது கண் எந்த அளவு இருக்குமோ அந்தளவில் தான் வாழ்நாள் முழுக்க இருக்கும்.
ஒரு வருடத்திற்கு மனிதக் கண் சராசரியாக 42,00,000 முறை சிமிட்டும்.
கண்களில் இரண்டு லட்சம் வேலை செய்யும் பாகங்கள் உள்ளது.
ஒவ்வொரு கண்ணும் 107 மில்லியன் செல்களை உடையது. அவை அனைத்திற்கும் ஒளி உணர் திறன்(லைட் சென்சிதிவிடி) இருக்கும்.
நம் உடம்பிலேயே வேகமான வேலை செய்யும் தசைகளை கொண்ட உறுப்பு கண் தான்.
இரவு வேளையில் புலிகளுக்கு கண்பார்வை ஆறுமடங்கு மனிதனைவிட அதிகமாக தெரியும்.
கடல் கொள்ளையர்கள் தோடு அணிவதால் கண் பார்வை தெளிவாகத் தெரியும் என்று நம்புகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும்.
மனிதக் கண் கேமராவை போன்று வேலை செய்யும் ஆற்றல் மிக்கது.நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை 80% தெரியப்படுத்துவது கண் தான். கருப்பு, நீலம், பச்சை மற்றும் பழுப்பு ஆகியன மனிதன் கருவிழியின் நிறங்கள் ஆகும். இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட கண்களை நாம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.