தேன் செய்யும் அற்புதங்கள்!

தேன் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது மற்றும் தேனினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

தேன் செய்யும் அற்புதங்கள்!

தேன், அதன் மருத்துவ குணங்களுக்காகவே பழங்காலத்திலிருந்தே, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் வளர்ந்து வரும் இக்காலத்தில், பல்வேறு சான்றுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தேனின் நன்மைகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேனை பயன்படுத்துவதற்கு முன்பு, அது சுத்தமானா தேனா அல்லது கலப்படமா என்பதை நீங்கள் எப்போதும் உறுதிபடுத்த வேண்டும். நீங்கள் இயற்கையான தேனுக்குப் பதிலாக கலப்பட தேனைப் பயன்படுத்தினால், அது பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும்.

 

 

 

எனர்ஜி:

 

தேனில் உள்ள குளுக்கோஸ் உடலின் எனர்ஜியை அதிகரிக்கிறது. இது சோர்வு மற்றும் சோம்பலை குறைக்க உதவுகிறது.

 

குளுக்கோஸ்:

 

இரத்த சர்க்கரை அளவைப் பற்றி நாம் ஆராய்ந்தால், மற்ற சர்க்கரைகளைப் போலவே, தேனும் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தும். ஆனால் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வளர்சிதை மாற்ற நோய்க்குறியிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நீரிழிவு பிரச்சனையில் நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின் தேனை அளவாக உட்கொள்ள வேண்டும்.

 

அழகு:

 

 

தோல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்,

தேசிய மருத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தேன் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது மற்றும் இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

 

 

சளி மற்றும் இருமல்:

 

சளி மற்றும் இருமலுக்கு பெரும்பாலான வீட்டில் தேன் தான் பயன்படுத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அம்மாக்கள் தங்கள் வீட்டு வைத்தியத்தில் தேனை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவும். இதனுடன், இது சளியை நீர்த்துப்போகச் செய்து, உடலில் இருந்து நீக்குகிறது.