சரும பராமரிப்பில் ஏற்படும் தவறுகள் மற்றும் தீர்வுகள்
கண்ணாடியில் நம்மை பார்க்கும்போது நமக்கு தெரியும் முதல் பகுதி நமது தோல். தோலால் பொருத்தப்பட்டது தான் நமது உடல்.
நமது உள்ளுறுப்புகளை எல்லா வித வெளிப்புற காரணிகளிடம் இருந்து காத்து உடலுக்கு சீரான இயக்கத்தை தருவது தோல் பகுதி. ஒரு குடும்பத்தில் தந்தை எல்லா பாரத்தையும் சுமந்து பிள்ளைகளையும் மனைவியையும் காப்பது போல், உடலை காத்து ஒழுகும் சருமத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
சரும பாதுகாப்பில் நாம் சில தவுறுகளை மேற்கொள்கிறோம். அதனால் சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதனை பற்றி எடுத்து கூறுவதுதான் இந்த பதிவு. சரும பாதுகாப்பில் நாம் செய்யும் தவறுகளையும் அதனை திருத்திக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இப்போது பார்க்கலாம் .
சரும பிரச்சனைகளை கவனிக்காமல் விடுவது:
உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு தோன்றும்போது , நமக்கு சில சிக்னல்கள் கிடைக்கும். அந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பது நலம். நமது உடல் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு அறிகுறியை தோற்றுவிக்கும். உணவு தேவைக்கு பசியாகவும், தண்ணீர் தேவைக்கு தாகமாகவும் அறிகுறியை வெளிப்படுத்தும்.
அது போல் சரும ஆரோக்கிய கோளாறில், சில அறிகுறைகளை தோற்றுவிக்கும். அவை கட்டிகளாக, அரிப்புகளாக, கோடுகளாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி ஏற்படும் அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது விளைவுகள் தீர்க்கப்பட முடியாதவையாக மாறக்கூடும். எக்ஸீமா போன்ற இள நிலை கோளாறை அலட்சியம் செய்யும்போது, ஆஸ்துமா , கீல்வாதம் போன்றவைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வெளியில் சிறியதாக தோன்றும் கட்டிகளை சரிசெய்யும் போது உள்ளுக்குள் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்த முடியும்.
உணவு:
க்ளுட்டன், பால் பொருட்கள், சர்க்கரை போன்றவை தோல் அழற்சியை உண்டாக்கும். நாள்பட்ட தோல் பிரச்சனைகளான ரோசாசியா , எக்சிமா , வறண்ட சருமம், இள வயது மூப்பு போன்ற கோளாறுகளுக்கு இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்று காரணிகளாக இருக்கின்றன.
சரும pH நிர்வாகம்:
ஆரோக்கியமான சருமத்தின் pH, 4 முதல் 6.5 வரை இருக்கும். சருமத்தில் இருக்கும் மெல்லிய அமிலத்தன்மை, தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைத்து சருமத்தின் வலிமை மற்றும் வடிவத்தை தக்க வைக்க உதவுகிறது. சரியான pH அளவு பராமரிக்கப்படும்போது வெடிப்புகள், கட்டிகள் போன்றவை தடுக்கப்பட்டு, இளமையுடன் கூடிய பொலிவான சருமம் கிடைக்கிறது.
சரும நுண்ணுயிர்கள் சேதம்:
குடல் ஆரோக்கியத்தில் பாக்டீரியாக்களின் பங்கு இருப்பதை போல், சரும ஆரோக்கியத்திலும் சில நுண்ணுயிர்களின் பங்கு இருக்கிறது. இவை சமச்சீராக இருக்கும்போது சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும், சானிடைசேர், சோப்பு போன்றவற்றில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் தன்மை இந்த கிருமிகளையும் சேர்த்து அழித்துவிடுவதால் சருமத்தில் சிறிய அளவு பாதிப்பு முதல் நாட்பட்ட நோய்கள் வரை ஏற்படுகின்றன.
சரும பாதுகாப்பிற்கான குறிப்புகள்:
1. தோல் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படும்போது, பால் பொருட்கள், சர்க்கரை, க்ளுட்டன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனை தொடர்ந்து 14 நாட்கள் தவிர்த்த பிறகு உடலில் மாற்றம் ஏற்பட்டால் இதே முறையை தொடருங்கள்.
2. ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள ஆர்கானிக் காய்கறிகளை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தோல் அழற்சி குறையும். அவகொடோ, ஆலிவ் எண்ணெய், மீன் வகைகள் போன்றவை இதில் அடங்கும்.
3. மன அழுத்தத்தை குறைத்து, ஊட்டச்சத்துள்ள சமசீர் உணவை தினமும் சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி ஹர்மோன்களை சீராக இயங்க வைக்கிறது.
4. மல்டி வைட்டமின் மாத்திரை மற்றும் ஒமேகா 3 கொழுப்பு சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகிறது.
5. புளிக்க வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், சருமத்தில் நல்ல நுண் கிருமிகள் வளர்ச்சிக்கு உதவும்.
6. எண்டோகிரைன் உற்பத்தியை குறைக்கும் மூலப்பொருளான ஆக்சிபென்சோன் , பராபென் , மற்றும் செயற்கை வாசனை மூலப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.
7. இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சரும பாதுகாப்பு பொருட்கள், அதனுடன் pH சமநிலையில் உள்ள பொருட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திடும்.