கால் பெருவிரல் வீக்கம் என்றால் என்ன?
கால் பெருவிரல் வீக்க அபாயத்தை அதிகரிக்கும் பல்வேறு காரணிகள் உண்டு.
கால் பெருவிரலில் வீக்கம் என்பது பிறப்புக் குறைபாடு அல்லது மோசமான பாத செயல்பாடு அல்லது இறுக்கமான தசை போன்ற பாதிப்புகளின் விளைவாக ஏற்படும் உடற்கூற்றியல் குறைபாடு ஆகும்.நெருக்கிய தசைகள் மற்றும் தசை நார்கள் காரணமாக மூட்டுகளில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகின்றன. இந்த அழுத்தம் காரணமாக அடிக்கடி குறைபாடு ஏற்படும் பகுதிகள் கால் பெருவிரலுக்கும் பாதத்திற்கும் இடையிலான மூட்டு பகுதியாகும். இந்த இடத்தில் தான் இந்த வீக்கம் உண்டாகிறது. இத்தகைய வீக்கம் பாதத்தின் மறுபுறம் அதாவது சுண்டுவிரல் மற்றும் பாதத்திற்கு இடையில் கூட உண்டாகலாம்.
சில காரணிகள் ஏற்படாமல் நம்மால் தடுத்துக் கொள்ள முடியும் , எலும்பு கட்டமைப்பு செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி போன்றவை இதர காரணிகளாக உள்ளன.
கால் பெருவிரல் வீக்கம் எவ்வாறு உருவாகிறது?
1. உயரம் அதிகம் கொண்ட அதாவது ஹை ஹில் கொண்ட காலணி அணிவது
2. குறுகலான காலணிகள் அணிவது
3. கீல்வாதம் குறிப்பாக முடக்கு வாதம்
4. பாதத்தில் காயம் ஏற்படுவது
5. பிறப்பிற்கு முன்பே, பாதங்கள் முழுமையான வளர்ச்சி அடையாமல் இருப்பது
6. சமச்சீரற்ற எடை தாங்குதல், இதனால் மூட்டு பகுதி நிலையற்றதாகிறது
7. இறுக்கமான தசை மற்றும் தசைநார்கள்
8. பாதங்களில் மரபு வழி பாதிப்பு
கால் பெருவிரல் வீக்கத்தின் அறிகுறிகள் :
கால் பெருவிரல் வீக்கம் வளர்ந்து பெரிதாகும்போது, உங்களுக்கு இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தோன்றலாம்..
1. கால் பெருவிரல் காலணியுடன் உராயும்போது, மேல்தோலில் வலி அதிகரிக்கும்.
2. கால் பெருவிரல் வீக்கத்தை சுற்றி மரத்துப் போன நிலை உருவாகும்.
3. எரிச்சல் உணர்வு மேலோங்கும்.
4. பாதத்தில் வீக்கம் ஏற்படலாம்
5. பாதிக்கப்பட்ட விரலின் அடிப்பகுதி தோல் அடர்த்தியாக மாறலாம்.
6. தோலில் உராய்வு ஏற்படுவதால் தோல் சிவத்து போவது அல்லது ஆழ்ந்த அழற்சி காரணமாக சிவத்து போவது
7. உங்கள் ஒட்டுமொத்த உடலின் எடை சீரின்றி பரவுவதால் தோல் தடிப்பு ஏற்படலாம்.
8. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் செயல்பாடு குறையலாம்
இந்த அறிகுறிகள் விரக்தியும் வேதனையும் அளித்து , உங்களுக்கு சௌகரியமான காலணிகளை அணிய விடாமல் செய்கிறது. இந்த வகை வீக்கத்திற்கு சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு இல்லாவிட்டால், அவை வளர்ந்து பெரிதாகி , வைடு-டோ(wide-toe ) காலணிகள் கூட அணியமுடியாத நிலை உண்டாகலாம்.
கால் பெருவிரல் வீக்கத்திற்கு வீட்டிலேயே சிகிச்சை எடுப்பது எப்படி ?
1. அழுத்தத்தைக் குறையுங்கள்:
பெருவிரல் வீக்கத்தை சுற்றி இருக்கும் அழுத்தத்தைக் குறைப்பதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. விரல்களுக்கு இடையில் அதிக இடம் இருக்கும் காலணிகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும். விரலில் வீக்கம் உள்ள இடத்தை ஜெல் தடவிய பேட் பயன்படுத்தி பாதுகாப்பாக வைக்கவும்.
2. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும்:
பாதிக்கபட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வகையில் வெதுவெதுப்பான சாக்ஸ் அணிவது, சூடு ஒத்தடம் தருவது, அல்ட்ரா சவுண்ட் , மசாஜ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனால் அழற்சி குறைந்து பாதிப்பு விரைவில் குணமாகும்.
3. அழற்சியைக் குறைப்பது:
ஐஸ் மற்றும் மஞ்சள் போன்றவை கால் பெருவிரலில் உண்டான அழற்சியைக் குறைத்து வலியைக் குறைக்கிறது.
4. நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவது :
கால் பெருவிரலில் வீக்கம் ஏற்பட்டால், குறைபாடு ஏற்பட்ட விரலில் மற்றொரு கால் விரலில் உள்ள நெகிழ்வுத்தன்மையை விட குறைவாக இருக்கும். குறிப்பாக கால் பெருவிரலில் நெகிழ்வுத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். இரண்டு டிகிரி அளவிற்கு மட்டுமே காலை அசைக்க முடியும். இத்தகைய நெகிழ்வற்ற தன்மை இந்த வகை வீக்கத்திற்கு வழி வகுக்கிறது.
5. உங்கள் தசைகளை வலிமையாக்குங்கள் :
விரல்களுக்கு நெகிழ்வுத்தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு தசைகளின் வலிமை முக்கியம். உங்கள் உடலின் தினசரி செயல்பாடுகளுக்கு பாதங்கள் மிகவும் அவசியம், குறிப்பாக தடகள விளையாட்டுகளுக்கு கால்கள் மிகவும் அவசியம். வழக்கமான பாத பயிற்சிகளுடன் ஒருங்கிணைந்த மேம்படுத்தப்பட்ட நெகிழ்வுத்தன்மை , உங்கள் பாதத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி கால் பெருவிரல் வீக்கம் அதிகரிக்காமல் தடுக்கிறது.
6. ஸ்ப்ளின்டிங்
முறிந்த எலும்பை இணைக்க வைத்துக் கட்டப்படும் ஒரு தட்டையை அணிந்து கொள்வதால், தசைகள் விரிந்து கால் பெருவிரலை சுற்றி இருக்கும் பகுதி நெகிழ்வடையும். உங்கள் பெருவிரல் சரியான நிலையில் வைக்கப்பட்டு, தசைகள் அதிக நெகிழ்வுடன் இருப்பதால், பாதத்தில் உள்ள நீளமான எலும்பு சீரமைப்பில் இருந்து வெளியேறாமல் பாதுகாக்கப்படும்.
7. சரியான உடல் எடையை பராமரிப்பது:
உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம், பாதத்தில் உள்ள அழுத்தம் விலகி, கால் பெருவிரல் வீக்கத்தில் உள்ள அழுத்தம் குறையும்.