குழந்தைகளுக்கு அற்புதமான ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கொய்யா
பல்வேறு மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட, எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா.
கொய்யா பழத்தின் ஒரு தனித்துவமான சுவை பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமானது. ஆனால் சின்ன குழந்தைகள் கொய்யா பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு .
பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகள் கொடுப்பது வழக்கம். இந்த வயதில் தாய்ப்பால் மட்டுமே போதுமான முக்கிய ஊட்டச்சத்துகள் தந்து வளர்ச்சிக்கு உதவ முடியாது என்பதால் திட உணவுகள் சேர்த்து கொடுக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் பழங்கள் கொடுப்பது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது, காரணம் இவற்றின் சுவை மற்றும் இவற்றில் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்துகள். கொய்யாவில் உள்ள விதைகள் , செரிமான பாதிப்பை உண்டாக்கும் என்றும் , குழந்தைகள் கொய்யா உட்கொள்வது பாதுகாப்பான செயல் அல்ல என்றும் தவறான கணிப்பு மக்கள் மனதில் உள்ளது. இருப்பினும், கொய்யாவை குழந்தைகள் உட்கொள்வதற்கு வேறு வழிகள் உள்ளன. கொய்யாவின் ஊட்டச்சத்து மதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த வழிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுக்கலாம் .
கொய்யா உட்கொள்வதால் குழந்தைகளுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்:
- நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது :
கொய்யா பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. குழந்தைகளில் நோயெதிர்ப்பு செயல்பாடு, வளர்ச்சி மற்றும் உயிரணு மீளுருவாக்கம் செய்வது போன்றவற்றில் வைட்டமின்சி யின் பங்கு மிகவும் முக்கியம். ஒரு கொய்யாவில் ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.
- நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது:
கொய்யாவில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இது குழந்தைகளில் நரம்பு மற்றும் சுற்றோட்ட அமைப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
- ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது:
கொய்யாவில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளில் விழிவெண்படல வறட்சிக்கு காரணமாகிறது.
- புற்றுநோயைத் தடுக்கிறது :
கொய்யாவின் ஆன்டிஆக்சிடெண்ட் பண்பு குழந்தைகளைப் புற்றுநோய் அபாயத்திலிருந்து தடுக்க உதவுகிறது. ROS- தூண்டப்பட்ட அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்கள் மற்றும் ஹைபராக்ஸியா மற்றும் அழற்சி போன்ற பிற கோளாறுகளிலிருந்தும் குழந்தைகளைத் தடுக்க இது உதவுகிறது.
5. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது:
கொய்யா விதைகளில் லினோலிக் மற்றும் பினோலிக் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை குழந்தையின் மூளை மற்றும் பிற திசு அமைப்புகளின் வளர்ச்சியில் முக்கிய கூறுகளாக இருக்கின்றன.
- செரிமானத்திற்கு உதவுகிறது:
கொய்யாவில் உள்ள அதிகமான நார்ச்சத்து அளவு குழந்தைகளில் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்சியைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் கொய்யா, வயிற்றுப்போக்கு மற்றும் பேதி ஆகியவற்றின் போது உதவுகிறது மற்றும் இரத்த உற்பத்தியை வளப்படுத்துகிறது.
- எலும்பு மற்றும் குருத்தெலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது:
கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொய்யாவில் நிரம்பியுள்ளன, இது குழந்தைகளில் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைகளுக்கு கொய்யா பழத்தை எவ்வாறு அறிகுகம் செய்யலாம் ?
எப்போதும் எந்த உணவையும் முதன்முதலாக குழந்தைக்கு அறிமுகம் செய்யும்போது மிகக் குறைந்த அளவில் மெதுவாக அவர்களுக்கு கொடுக்க வேண்டும். கொய்யா பழத்தை கொதிக்கும் நீரில் சிறிதுநேரம் போடவும். பின்பு அதன் தோலை முழுவதும் நீக்கிவிட்டு, பழத்தை மசித்து கொட்டைகளை ஸ்பூன் கொண்டு நீக்கிவிடலாம் அல்லது வடிகட்டி எடுத்து விடலாம்.
பின்பு ஒரு ஸ்பூன் மூலம் மிகச் சிறிய அளவு பழத்தை எடுத்து குழந்தைக்கு ஊட்டிவிடுங்கள். குழந்தை எந்தவொரு அசௌகரியம் இல்லாமல் பழத்தை விழுங்கிவிட்டால் மறுமுறை ஊட்டுங்கள்.
கொய்யாப் பழத்தின் அமில தன்மை பெரும்பாலும் குழந்தைகளில் டயபர் தடிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே குழந்தைகளுக்கு கொய்யாப் பழத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், நமைச்சல், தடிப்புகள் அல்லது முகத்தின் வீக்கம் போன்ற பிற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக உணவளிப்பதை நிறுத்தி சுகாதார நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கூடுதல் குறிப்புகள்:
- குழந்தைக்கு கொய்யாப். பழத்தைக் கொடுப்பதற்கு முன் பழத்தை நன்றாகக் கழுவவும்.
- எப்போதும் புதிய மற்றும் பழுத்த கொய்யாவை குழந்தைக்கு கொடுங்கள் மற்றும் உறைந்த ப்யூரி கொடுப்பதைத் தவிர்க்கவும்.
- உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது, ஒரே நேரத்தில் அதிக அளவு உணவளிக்க அவசரப்பட வேண்டாம். ஒரு டீஸ்பூன் மூலம் சிறிது சிறிதாக கொடுத்து, பின்னர் அளவை அதிகரிக்கவும்.
- கொய்யாவை எப்போதும் வேகவைத்து சாப்பிடக் கொடுங்கள். இதனால் அது மென்மையாக மாறும். செரிமானம் எளிதாகும்.
- விதைகளை முழுவதுமாக அகற்றவும் அல்லது சீராக கலக்கவும்.
- ஒரு வாரத்தில் அதிகபட்சம் இரண்டு முறை குழந்தைகளுக்கு கொய்யா கொடுங்கள்.