நீங்கள் மேஷ ராசியா? உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத் திறன் அமைகிறது என்று கூறுகிறது ஜோதிடம். நமது சிந்தனை நமது எதிர்பார்ப்புகளை தீர்மானிக்கிறது. நம் எதிர்பார்ப்புகள் நாம் உறவுகளை எப்படி கையாளுகிறோம் என்று தீர்மானிக்கிறது
பொதுவாக உறவுகள் மத்தியில் பிரச்சனைகள் உண்டாவது சகஜம் தான். ஆனால் ஓவொரு உறவிலும் அதற்கான பிரச்சனை வேறுபடும். குறிப்பாக கணவன் மனைவி உறவில் உண்டாகும் விரிசல் காரணமாக விவாகரத்து பெற்று பிரியும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அனைவரும் ஒரே காரணத்திற்காக பிரிவதில்லை. கணவன் மனைவியாக இணையும் இந்த திருமண பந்தத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கான பொருத்தம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பது உண்மை. ஒவ்வொருவரின் ராசியும், கிரகமும் உறவில் தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விடை தரும் இந்த பதிவு.
தனது துணைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் மேஷ ராசியினர். ஆனால் பொருத்தமில்லா துணை அமையும்போது இந்த நிலை மோசமடைகிறது. இதனால் மேஷ ராசியினர் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.
மனிதர்களை மாற்ற முடியும் என்று மேஷ ராசியினர் நம்புகின்றனர்:
உலகத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மேஷ ராசியினர். அதே போல் தன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். மாற்றத்தை நோக்கி அனைவரையும் தள்ள நினைப்பார்கள். மனிதர்களுக்குள் உண்டாகும் மாற்றம் வெளிப்புறத்தில் இருந்து மட்டும் இல்லாமல் தனக்குள் இருந்தும் உண்டாக வேண்டும். தங்கள் துணையின் எதாவது ஒரு பழக்கம் தனக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று பல வாறு முயற்ச்சிப்பார்கள் மேஷ ராசியினர். இதனை மற்றொருவரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அந்த உறவில் உள்ள விரிசல் மேலும் பெரிதாக வெடிக்கும்
அவர்கள் இணைப்பது போல் எல்லாம் இருக்க வேண்டும் :
மேஷ ராசியினரில் பெரும்பாலானவர்கள் தனது இஷ்டம் போல் எல்லாம் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லாமே ஒருவரின் விருப்பத்திற்கு அமைய வேண்டும் என்று நினைக்கும்போது, அது ஒரு உறவில் இணையும் மற்றொருவருக்கு சங்கடத்தை உண்டாக்கும். இதனால் உறவில் பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு. மேஷ ராசியினர், அவர்கள் நினைப்பது மட்டுமே சரி என்னும் எண்ணம் கொண்டவர்கள். அவர்களின் முடிவை தனது துணையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தனது துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமை மேஷ ராசியினரிடம் இருப்பதில்லை. ஆனால் அன்பும் அமைதியும் கொண்ட துணையாய் இருந்தால் இவர்களை கட்டுபடுத்த முடியும். ஆகவே மேஷ ராசியினரின் துணை அன்பாகவும் அமைதியாகும் இருந்து இவர்கள் கட்டுப்படுத்தினால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
எதிலும் அவசரம் :
மேஷ ராசியினர் அவர்களின் உறவு தொடர்பான பல திட்டங்கள் வைத்திருப்பார்கள். தனது துணையுடன் ஒரு அழகான எதிர்காலத்தை திட்டமிட்டிருப்பார்கள். மேஷ ராசியினர், தன் துணையின் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால் அவர்களுக்காக ஒரு கனவு மாளிகையைக் கூட உருவாக்குவார்கள். மேஷ ராசியினருக்கு ஜோடியாக அமையும் மற்றவரும் இதே அன்போடு ஜோடி பொருத்தம் சிறப்பாக அமையும்போது இவை நன்மை தரும். இல்லையேல் இவர்களின் கனவை கட்டுப்படுத்துவது நல்லது.
இல்லை என்பதை ஏற்கும் மனம் இல்லாதவர்கள்:
மேஷ ராசியினர், இல்லை என்ற சொல்லை விரும்பமாட்டார்கள். மேஷ ராசியினர் போடும் திட்டங்களை தனது துணை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை விரும்பவே மாட்டார்கள். சினிமா, பார்க், பீச் , பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வதை அவர்கள் விரும்பும்போது, எதாவது ஒரு அவசர வேலையின் காரணமாக அவர்களின் துணை இதற்கு ஒத்துழைக்காமல் இருந்தால் இவர்களுக்கு மிகுந்த கோபம் உண்டாகும்.
மாற்றங்களை ஏற்றுக் கொள்ள கடினமாக உணருவார்கள்:
உறவின் நிலை மோசமாக இருந்தாலும் அதனை முடித்துக் கொள்ள விரும்பாமல், இழுத்துக் கொண்டே செல்வார்கள். என்றாவது ஒரு நாள் நிலைமை சீராகும் என்று நம்புவார்கள். இந்த உறவில் நல்ல மாற்றத்திற்கான அறிகுறி மிகவும் குறைவாக இருந்தாலும் உறவு முறிவது குறித்து சிந்தனை செய்ய மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் போராடி பாதுகாக்கும் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அது அவர்களுக்கு பேரிழப்பாக இருக்கும். மேஷ ராசியினருக்கு கற்றுக் கொள்வதில் சிறந்த ஆர்வம் உண்டு. இதனால் தான், வாழ்க்கையின் பாடங்களை கற்று தேர்ந்தவர்களாய் அவர்கள் இருப்பார்கள்.
அன்பால் அடக்கி ஆளும் தன்மை உள்ளவர்கள் மேஷ ராசியினர். மேஷ ராசியினர், மக்கள் மனதை நன்றாக புரிந்து கொள்வதால் அன்பால் அவர்கள் ஆட்சி செய்ய முடிகிறது. மேஷ ராசியினரிடம் அன்பால் எதைக் கேட்டாலும், அவர்களிடமிருந்து இல்லை என்ற பதில் வராது.