நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்
ஆர்ஜினைன் என்ற வார்த்தையை நாம் அதிகமாக கடந்து வந்திருக்க முடியாது. இது ஒரு முக்கியமான அமினோ அமிலமாகும்.
உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு அமினோ அமிலம் இந்த ஆர்ஜினைன். இதய ஆரோக்கியம், அதிகரித்த நோயெதிர்ப்பு சக்தி போன்றவை ஆர்ஜினைன் அதிகமுள்ள உணவுகளால் கிடைக்கிறது. அமினோ அமிலம் புரதத்தின் கட்டுமான தொகுதிகளாகும். புரதங்கள் உடையும் போது உடல் உறிஞ்சுவதற்காக அமினோ அமிலங்களாக மாற்றப்படுகின்றன. காயத்தினால், அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வலியால் , தீ புண்ணால் உடலில் அதிகமான வலி ஏற்படும்போது , உடல் உற்பத்தி செய்யும் அளவை விட அதிக அளவிலான ஆர்ஜினைன் தேவை படுகிறது.
ஆர்ஜினைன், நைட்ரஸ் ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது. இது ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இதன்மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. ஹார்மோன் மற்றும் இன்சுலின் வளர்ச்சிக்கு ஆர்ஜினைன் பெரிதும் உதவுகிறது.உடலை இயங்க வைக்க, திசுக்களை மறுஉற்பத்தி செய்கின்றது.
ஆர்ஜினைன் அதிகம் உள்ள உணவுகள்:
. கடல் உணவுகள்
. கோழி இறைச்சி
. சிவப்பு இறைச்சி
. பருப்புகள்
. நட்ஸ் மற்றும் விதைகள்
. காய்கறிகள்
. கடல் உணவுகள்:
கடல் வாழ் உயிரினங்களான இறால், நண்டு, டூனா, இரால் மீன், போன்றவை ஆர்ஜினைன் அதிகம் உள்ள கடல் உணவுகளாகும்.
. கோழி இறைச்சி:
வான்கோழி மார்பு பகுதி, அதிக அளவு ஆர்ஜினைன் கொண்டது. 100கிராம் இறைச்சி அளவில் 2096மிகி அளவு ஆர்ஜினைன் உள்ளது. சிக்கன் , காடை போன்ற வகைகளிலும் ஆர்ஜினைன் அதிகமாக உள்ளதால் உங்கள் அன்றாட உணவில் இவற்றை இணைத்து கொள்ளலாம்.
. சிவப்பு இறைச்சி:
புரதம் அதிக அளவில் இருக்கும் சிவப்பு இறைச்சியில் ஆர்ஜினைன் அதிகமாக உள்ளது. பன்றி இறைச்சியில் ஆர்ஜினைன் அதிகமாக உள்ளது.
. பருப்புகள்:
சோயா பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் கொண்டை கடலையில் அதிக அளவு ஆர்ஜினைன் உள்ளது. தாவர உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் பருப்புகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
. நட்ஸ் மற்றும் விதைகள் :
ஆரோக்கியமான மற்றும் துரிதமான சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் சூரியகாந்தி விதை, பூசணி விதை, வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்து அஆர்ஜினைன் அளவை அதிகரிக்கலாம்.
. காய்கறிகள்:
கடல் பாசி மற்றும் கீரை வகைகளை தினசரி எடுத்துக் கொள்வது அதிக அளவு ஆர்ஜினைன் உடலில் சேர்வதற்கு உதவும். ஒரு நாளில் 6000மிகி அளவு உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அளவை விட அதிகமாக உட்கொள்ளும் ஆரோக்கியமான ஒருவருக்கு இரைப்பை குடல் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உண்டு.
ஆர்ஜினைன் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது . கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆர்ஜினைனை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. அனைவருமே போதுமான அளவு ஆர்ஜினைன் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.