வயசானாலும் இளமையோடு இருக்க வேண்டுமா?
இளமையில் நாம் உண்ணும் உணவின் அளவை விட வயதாகும்போது குறைந்த அளவே உண்ண முடியும். உடலின் மெட்டபாலிசம் வயது அதிகமாகும்போது குறைய தொடங்கும். குறைந்த அளவு உணவிலேயே அதிக எடை அதிகரிப்பும் தோன்றும். மெட்டபாலிக் செயல்பாடுகளில் முதிர்ச்சி, தசைகளின் இழப்பு மற்றும் குறைந்த சுறுசுறுப்பு போன்றவை இதன் காரணங்களாகும். இந்த பதிவில் மெட்டபாலிசம் குறைவது பற்றிய விளக்கங்களை தான் பார்க்க போகிறோம்.
மெட்டபாலிசம் என்னும் வளர்சிதை மாற்றம்:
மெட்டபாலிசம் என்பது வளர்சிதை மாற்றம் என்று பொருள் படும். நாம் உட்கொள்ளும் கொழுப்புகள் கொழுப்பு அமிலமாக, கிலிசெரோலாக மற்றும் சிறு சிறு கூறுகளாக மாற்றப்படுவது தான் இந்த வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம். இப்படி மாற்றப்பட்ட கூறுகளை உடலில் எல்லா அணுக்களும் பயன்படுத்தும். இன்னும் எளிதாக கூறவேண்டுமானால், உடலை இயங்க வைக்க உள்ளுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தான் இந்த வளர்சிதை மாற்றம். இவைகள் கலோரிகள் எரிக்க படுவதை தீர்மானிக்கின்றன. வேகமான வளர்சிதை மாற்றம் வேகமான கலோரிகள் எரிப்பிற்கு உதவும்.
வளர்சிதை மாற்றத்தின் வேகம்:
இந்த வளர்சிதை மாற்றத்தின் வேகத்தில் கீழே குறிப்பிட்டவைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
* ஓய்வின்போது வளர்சிதை மாற்ற விகிதம் - தூங்கும்போது அல்லது ஓய்வு எடுக்கும்போது எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பதை குறிக்கும். இது ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கை ஆகும்.
* உணவின் வெப்ப நிலை - உணவை உறிஞ்சி செரிமானம் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்க படுகின்றன என்பதை குறிக்கும். இந்த முறையில் நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் 10% ஆகும்.
* உடற்பயிற்சி - உடற்பயிற்சியால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை குறிக்கும்.
* உடற்பயிற்சி அல்லாத செயல்பாடுகளில் வெப்ப உருவாக்கம் - நிற்பது, உட்கார்வது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற உடற் பயிற்சி அல்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பதை குறிக்கும்.
உடற்பயிற்சி மற்றும் நமது தினசரி செயல்பாடுகளால் ஒரு நாளைக்கு 10-30% கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர்களுக்கு இந்த விகிதம் 50% வரை கூட இருக்கும்.
வயது அதிகமாகும்போது, உடற்பயிற்சி மற்றும் வீட்டு வேலைகள் செய்வது குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தின் வேகமும் குறைகிறது. வயதானபோது சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர்களின் வளர்சிதை மாற்றத்தில் வேகம் குறையாமல் இருக்கும்.
தசை இழப்பு:
30 வயதிற்கு மேல் ஒவ்வொரு 10வருடத்திற்கும் 3-8% தசை இழப்பு ஏற்படுகிறது. 80 வயதில், உங்கள் 20 வயதில் இருந்த தசையில் 30% இழக்கப்பட்டிருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தசை இழப்பால் தான் வயதானவர்களுக்கு எலும்பு முறிவு, சோர்வு, போன்றவை எளிதாக ஏற்படுகின்றன. வயது முதிர்வில் ஏற்படும் தசை இழப்பை சர்கோபீனியா என்று கூறுவார். இது வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்துகிறது.
வளர்சிதை மாற்ற தாமதத்திற்கு காரணம்:
குறைவான சுறுசுறுப்பும் , தசை இழப்பும் தான், வளர்சிதை மாற்றத்தின் தாமதத்திற்கு காரணம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படும் அணு கூறுகள் வயது முதிர்ச்சியால் ஆற்றலை இழக்கின்றன. இதனால் வளர்சிதை மாற்றம் தாமதப்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க:
* வளர்சிதை மாற்றத்தில் தாமதம் ஏற்ப்படுவதை தவிர்க்க உடற் பயிற்சி மிகவும் முக்கியம்.
* பளு தூக்கும் பயிற்சியால் இந்த தாமதம் குறையும்.
* ஏரோபிக் பயிற்சியும் இடையில் குறைந்த நேர ஓய்வும் எடுப்பது ஒரு நல்ல தீர்வை தருகிறது.
* நீண்ட நேர ஆழமான தூக்கம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
* புரத சத்து அதிகமாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வது வளர்சிதை மாற்ற தாமதத்தை குறைக்கிறது.
* வயதானவர்கள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்வதால் கலோரிகள் எடுத்துக் கொள்வது குறைக்கிறது, இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாமதம் ஏற்படுகிறது. போதுமான அளவிற்கு கலோரிகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாவிட்டால், சிறு இடைவெளியில் அடிக்கடி சாப்பிடலாம்.
* க்ரீன் டீ பருகுவது 4-5% வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
வயதானாலும் உங்கள் அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்க புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். இதனால் உங்கள் மெட்டபாலிசம் குறையாமல் நீங்களும் பழைய உற்சாகத்தோடு இளமையாகவே இருப்பீர்கள்.