தமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்
தமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல் நம் குரல் வழியாக உலகெங்கும் பரவட்டும்.
தமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்:
தமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல் நம் குரல் வழியாக உலகெங்கும் பரவட்டும்.
தமிழரின் மொழியான தமிழ் மொழி எல்லா மொழிகளிலும் மூத்த மொழி. மொழிக்கு முதல் முதலில் வடிவத்தை தந்தவன் தமிழன். இன்றும் தமிழரின் மொழித் திறனையும், இலக்கியத்தையும், கணிதத்தையும், விஞ்ஞான அறிவையும் , கட்டிடக் கலையையும், நடனக் கலையையும், இசை ஞானத்தையும், பாட்டு பாடும் திறனையும், போர் முறையையும், சமையல் கலையையும், மருத்துவ அறிவையும் அறிந்து வியக்கிறார்கள் பல நாடுகளில் உள்ள அறிஞர்கள்.
இவை அனைத்திலும் சிறந்து விளங்கும் தமிழரின் நம்பிக்கை எப்படி மூட நம்பிக்கையாகும்? எல்லா நம்பிக்கைக்கும் பின்னால் பல நல்ல விஷயங்கள் உள்ளது.
தமிழரின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கையல்ல, மூடப்பட்ட விஷயங்களை கொண்ட நம்பிக்கை என தமிழரின் குரலான 'நம் குரல்' வழியாக சிலவற்றை தெளிவுபடுத்துகிறோம்:
- வடக்கே சூலம்: வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பது மூடநம்பிக்கை என்று கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் வடக்குப்பக்கம் காந்த சக்தி அதிகம் ஆதலால் வடக்கு பக்கம் தலை வைத்தால் அந்த காந்த சக்தி நம் மூளையை பாதிக்கும். அதற்காகத்தான் அப்படி கூறுவார்கள்.
- கர்ப்பிணிப் பெண்களையும், பூப்படைந்த பெண்களையும் , குழந்தைகளையும் மாலை வேளையில் வெளியில் சென்றால் காற்று கருப்பு அடித்துவிடும் : காற்று, கருப்பை பேய் பிசாசு என்று எண்ணி விடுவோம், ஆனால் காற்றிலுள்ள அணுக்களும், கிருமிகளும் கருப்பாக இருக்கும். இவை நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் மாலை வேளைகளில் அதிகமாக வெளி வரும். அதனால் தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இவர்களை அந்த மாலை வேளையில் வெளியில் செல்லக் கூடாது என்பார்கள்.
- எலுமிச்சைப் பழத்தை வீட்டு வாசலில் கட்டினால் நன்மை வந்த சேரும்: எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் தொங்க விடுவார்கள், அதற்கு காரணம் எலுமிச்சை பழம் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் மற்றும் கிருமிகளை வீட்டில் அண்ட விடாமலும் பாதுகாக்கும்.இதனால் தான் இவ்வாறு செய்ய சொன்னார்கள்.
- சூரிய கிரகணத்தின் போது வெளியில் செல்லக்கூடாது: கிரகணத்தின் போது சூரியன் கெட்ட கதிர்களை வெளிப்படுத்தும், அதனால் அவ்வேளையில் யாரையும் வெளியே வரக்கூடாது என்பார்கள் முக்கியமாக கருவுற்ற பெண்களை ஏனென்றால் அந்த சமயத்தில் சூரியன் வெளிப்படுத்தும் கதிர் நம் உடலுக்கு நல்லதல்ல என்பதற்காகவும், அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண்ணுக்கு கெடுதி. இது மூடநம்பிக்கை அல்ல அறிவியல் சிந்தனை.
- புளிய மரத்தடியில் இரவு படுத்தால் பேய் அடித்து விடும் என்பார்கள்:இரவு நேரங்களில் கார்பன் டையாக்சைட் என்ற வாயு அதிக அளவில் வெளிப்பட்டு, மூச்சித் திணறல் ஏற்படும். இதை அமுக்குவான் பிசாசு என்றும் கூறுவார்கள். அதனால் தான் அங்கு படுக்க கூடாது என்று பயத்தை ஏற்படுத்தினர்.
- இரவில் நகம் வெட்ட கூடாது:இரவில் நகம் வெட்டினால்,அவை சமைக்கும் சாப்பாட்டில் தெரியாமல் விழுந்து நம் உடல் நலனைக் கெடுத்துவிடும்.நம் உடலை பாதுகாப்பதற்காகவே இரவில் நகம் வெட்ட கூடாது என்று கூறினார்கள்.
- இரவில் வீட்டைக் கூட்டினால் லட்சுமி தங்காது:பகல் முழுதும் நாம் வீட்டில் நடமாடும் போது நமக்கு தெரியாமல் விலையுயர்ந்த ஆபரணங்கள் விழுந்துவிட்டால், அதை கவனிக்காமல் இரவு வேளையில் வீட்டைக் கூட்டிக் குப்பையை வெளியில் போட்டுவிட்டால் , அந்த நகையை தேடுவது மிகவும் கடினமாக இருக்கும் அல்லது அந்த நகை கிடைக்காமலும் போகலாம். விலையுயர்ந்த பொருட்களை நாம் லட்சுமியாக பார்ப்பதால் அவ்வாறு கூறினார்கள்.
- காப்பு கட்டி வெளியே சென்றால் தெய்வக்குற்றம்:அம்மை நோய் போன்று பல கொடிய நோய்கள் எளிதில் பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும். இதை கட்டுக்குள் கொண்டுவர திருவிழா நடத்த வேண்டும் இல்லை என்றால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்று திருவிழாவின் முதல் சடங்காக காப்பு கட்டுவார்கள். இதனால் திருவிழா ஆரம்பித்து முடியும் வரை யாரும் அந்த ஊருக்கு செல்லவும் கூடாது ,அந்த ஊரில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. அவ்வாறு செய்தால் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். இதை மூடநம்பிக்கை என்று சொன்னவர்கள் இப்போது சில கொடிய நோய்க்கு தீர்வு என்று நடைமுறைப் படுத்துகிறார்கள்.
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்! என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தமிழரின் அறிவு/அறிவியல் பூர்வமான நம்பிக்கைகள் பார் முழுக்க ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல் வாயிலாக.