பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் அற்புத நன்மைகள்
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. உடலில் கழிவுகளை அகற்றுவது , pH அளவை பராமரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது , நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இதய ஆரோக்கியத்திற்கு உதவுவது , சருமத்தை பாதுகாப்பது , கல்லீரலை குணப்படுத்துவது மற்றும் நாட்பட்ட நோய்களிலிருந்து தடுப்பது போன்றவை பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் ஒருங்கிணைப்பின் நன்மைகளாகும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை எவ்வாறு தயாரிப்பது ?
ஒரு க்ளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த விளைவுகளைப் பெற்றுத் தரும். உணவு உட்கொள்வதற்கு சற்று முன்பு இதனைப் பருகுவது நல்ல பலன்களை பெற்றுத் தராது .
சரும பராமரிப்பு:
எலுமிச்சையில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுக்கிறது .குறிப்பாக இது சருமத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. வயது முதிர்வை தாமதப்படுத்தி பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தருகிறது .
எடை இழப்பு:
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கும் பானத்திற்கும் எடை இழப்பிற்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை . ஆனாலும் பேக்கிங் சோடா உள் அதிக ஆற்றலை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த ஆற்றல் காரணமாக தினசரி செயல்பாடுகள் அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது . எனவே எடை இழப்பிற்கு இந்த பானம் ஒரு வகையில் நல்ல தீர்வாகும்.
இதய ஆரோக்கியம்:
பேக்கிங் சோடா சேர்க்கப்பட்ட நீரை பருகுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது. இதனால் வாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
குறிப்பு:
பேக்கிங் சோடா ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இருந்தாலும் இந்த பானத்தை பருகுவதற்கு முன்னர் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.