அன்னப்பால் கர்ப்பிணிக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
இந்த அன்னப்பால் என்னும் அமிர்தத்தை அருந்தி அதில் உள்ள சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்கள்.
அன்னப்பால் கர்ப்பிணிக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமான சத்துக்கள் தேவைப்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் இந்த அன்னப்பாலை எடுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இந்த பானத்தில் அரிசியில் உள்ள அனைத்து சத்துக்களும் உள்ளதால் இது கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தையும், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.ஏனென்றால் அன்னப்பால் என்பது சாதத்தில் வடித்த கஞ்சியாகும். பல ஆய்வுகளில் இதனால் பல பலன்கள் கிடைக்கும் என்று வெளியிட்டுள்ளார்கள். இந்த கஞ்சியை காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் நோயிலிருந்து விரைவாக குணமாகிவிடுவார்கள் என்று வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன்(WHO) அறிவுறுத்தியுள்ளனர்.
அரிசி கஞ்சியை கர்ப்பிணிகள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- சத்தான உணவு: இந்த கஞ்சியை கர்ப்பிணிகள் குடிப்பதால் பல சத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
- செரிமான பிரச்சனையை போக்க: இந்தக் கஞ்சியில் சிறிது சீரகம், உப்பை சேர்த்துக் குடித்தால் செரிமான பிரச்சனையை போக்கும்.
- குமட்டல் மற்றும் வாந்தியால் ஏற்படும் சோர்வை நீக்க: இந்த கஞ்சியை சிறிது உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதால் குமட்டல் மற்றும் வாந்தியால் ஏற்படும் சோர்வு சரியாகிவிடும்.
- காலையில் ஏற்படும் மயக்கத்தையும், வாந்தியையும் போக்க: இந்த கஞ்சியில்,அரைத்த கொத்தமல்லி இலை மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து குடித்தால் மயக்கமும், வாந்தியும் வராது.
- கர்ப்பிணிக்கு ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்க: சாதம் பாதி வெந்தவுடன் அதில் இருந்து ஒரு கப் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த கஞ்சியில், பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் கர்ப்ப காலத்தில் உடலில் நீர் சத்து குறையும் அதை அதிகரிக்கச் செய்து தேவையான அளவு நீர் சத்தை உடலுக்கு கொடுக்கும்.
- வயிற்றில் ஏற்படும் சூட்டு வலியை குறைக்கும்: சாதம் பாதி வெந்தவுடன் அதில் இருந்து ஒரு கப் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த கஞ்சியில், சிறிது வெண்ணெய், பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து, சூட்டு வலியை குறைக்கும்.
- ரத்த அழுத்தத்தை சீராக்க: இந்தக் கஞ்சியில், உப்பு சேர்த்து குடிப்பதால் ரத்த அழுத்தம் சீராகும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: இந்த கஞ்சியில் புதினா, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து குடிப்பதால் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இவ்வளவு நன்மைகளை அள்ளித்தரும் என்று தெரிந்ததாலேயே இந்த அன்னப்பாலை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள் நம் முன்னோர்கள் என்று இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். அதனால் இந்த அன்னப்பால் என்னும் அமிர்தத்தை அருந்தி அதில் உள்ள சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்கள். அமிர்தமே ஆனாலும் அளவோடு உட்கொண்டால் ஆரோகியமாக வாழலாம்.