குளிர்ந்த நீரில் குளிப்பதின் நன்மைகள்
இன்றைய தலைமுறையினர் குளிப்பதையே சோம்பேறித்தனமாக செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் குளிப்பதற்கும் சேர்த்து விடுப்பு அளிக்கலாமா என்று யோசிக்கின்றனர்.
ஆபீசுக்கு போக வேண்டும் என்பதற்காக குளிக்க நினைக்கும்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றால் இன்னும் அலர்ஜி. வெந்நீரில் குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி அப்பப்பா ; சொல்வதற்குள்லேயே டயர்ட் ஆகுது…
நன்றாக குளியுங்கள்… வெந்நீரில் அல்ல.. குளிந்த நீரில் ! இந்த குளிர்ந்த நீர் குளியல் பற்றியது தான் இந்த தொகுப்பு.
குளிர்ந்த நீர் குளியல் நன்மைகள்:
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
குளிர்ச்சிக்கு நம்மை உட்படுத்துவது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்ந்த நீர் நம் உடலை நனைப்பதால் ஏற்படும் நடுக்கத்தால் , வளர் சீதை மாற்றத்தின் எண்ணிக்கை உயருவதாக கூறப்படுகிறது. இதனை ஆய்வு செய்து பார்த்ததில், 6 வாரங்கள் குளிர்ந்த நீரில் குளித்தவர்களின்,இரத்த நீர் அதிகரித்ததாகவும், T செல்கள் மற்றும் லிம்போசிட்க்கள் அதிகரித்ததாகவும் கூறுகின்றனர்.
சுவீடனில் நடந்த ஒரு ஆய்வில், வீட்டிற்குள் குழந்தைகளை குளிக்க வைக்காமல், வீட்டின் வெளிபுறத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பதால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மற்றவர்களை விட அதிகரித்து காணப்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன . அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருவதாக கண்டறியப்பட்டது.
கொழுப்பு குறைகிறது:
குளிர்ந்த நீரில் குளிக்கும்போது, உடலுக்கு அதிக வெப்பம் தேவை படுகிறது. உடலை வெப்பம் அடைய செய்ய அதிக ஆற்றல் தேவை படுகிறது. அதிக ஆற்றல் பெற உடல் உழைக்கும் போது அதிக கொழுப்புகள் எரிக்கப்படுகிறது .குளிர்ச்சியாய் இருக்கும் போது உடல் பழுப்பு நிற கொழுப்புகளை ஊக்குவிக்கின்றன . உடலுக்கு வெப்பத்தை உருவாக்க இந்த கொழுப்புகள் உதவுகின்றன. இது வளர்சிதையை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :
தொடர்ந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. உடலில் உண்டாகும் குளிர்ச்சி, உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்ல உதவுகிறது. இதனால், உடல் அதிக அளவு இரத்த சுழற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது:
உடலில் வெப்ப இழப்பை குறைக்க உதவும், உங்கள் முக்கிய உடல் வெப்பநிலையை குறைக்க, மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த குளிர்ந்த நீர் உதவுகிறது. .
மனச்சோர்வின் அறிகுறிகளில் இருந்து காக்கும்:
நமது சருமத்தில் அதிகமான குளிர் வாங்கிகள் உள்ளதால், குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நரம்புகளில் மின் தூண்டுதல்கள் ஏற்பட்டு அவை மூளைக்கு செல்கின்றன. அதனால் மனம் புத்துணர்ச்சி அடைந்து மனச்சோர்வு வெளியேறுகிறது. அதனால் , உடல் சோர்வாக உணரும் போது, குளிர்ந்த நீரில் குளித்து புத்துணர்ச்சி அடையுங்கள்.