அமர்வதால் இவ்வளவு நன்மையா?

சம்மணம் வெறும் உட்காரும்  முறை மட்டுமல்ல,  இது சுகாசனம்  என்று கூறப்படும் ஒருவகையான யோகாசனமும்  ஆகும்.உடற்பயிற்சிகளும்,  யோகாசனமும் செய்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில்லை சாதாரணமாக சம்மணமிட்டு உட்கார்ந்தாலும் நம்மை நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வைக்கும்.  

அமர்வதால் இவ்வளவு நன்மையா?

நம் நாட்டில் அமரும் முறையை தான் சம்மணம் என்பார்கள். இது வெறும் உட்காரும்  முறை மட்டுமல்ல,  சுகாசனம்  என்று கூறப்படும் ஒருவகையான யோகாசனமும் ஆகும். நம்மூரில் உட்காரும்போது சம்மணமிட்டு உட்காருங்கள் என்று பெரியவர்கள் கூறுவார்கள், அவர்கள் சொல்வதை கேட்காமல் நாற்காலிகளிலும், கட்டிலிலும்,   சோபாகளிலும்  உட்கார்ந்ததன் விளைவு தான் பல நோய்கள் நமக்கு  ஏற்பட காரணமாகும்.  முன்பெல்லாம் அனைவரும் சம்மணமிட்டு உட்காருவார்கள்,  அதனால் எந்த நோய்களும் அவர்களை அண்டாது.  ஆனால் இப்பொழுது இந்தப் பழக்கம் மக்களிடையே குறைய,குறைய நோய்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. சம்மணம் போட்டு  உட்காருவதால் நம்  உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, நம்மை நீண்டஆயுளோடும்  வாழவைக்கும். 

சான்று:

ர்னல் ஆஃப் பிசியாலஜி, யோக அண்ட் ஸ்போட்ஸ் மெடிசினில் ஆய்வு நடத்தினர். சம்மணம் போட்டு உட்காருவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதே அது. இதை சிறு முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உடல் பயிற்சி ஆக செய்ய சொன்னார்கள். அவர்களின் உடம்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டதோ அது அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு கிடைத்த பதில் ஆகும். சம்மணம் போட்டு உட்காருவதால் சாதாரணமானவர்களுக்கும், சிறு முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் உடலில் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் . இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள். அழுத்தத்தை சீராக்கும், கொழுப்பை குறைக்கும், இதயத்துடிப்பு சீராகும், உடல் எடையை குறைக்கும், பசியின்மையைப் போக்கும், மூச்சை சீராக சுவாசிக்க வைக்கும், இடுப்பு பலப்படுத்தும், ஆயுளை நீட்டிக்கும். முழு முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த உடல் பயிற்சியை செய்ய கூடாது என்றும் அறிவுருத்தியிருக்கிறார்கள்.இந்த ஆய்வை (இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஆர்தோபேடிக்ஸ் சயின்ஸ்) virtue Or voice for health  என்ற பெயரில்  வெளியிட்டார்கள்.

 சம்மணமிட்டு உட்காருவதால் ஏற்படும் நன்மைகள்:

  • சம்மணமிட்டு சாப்பிட உட்காரும்போது பசியை தூண்டுகிறது. 
  •  உணவை எளிதாக செரிக்க வைக்கிறது. 
  • இது முதுகெலும்பை பலப்படுத்துகிறது. 
  •  இடுப்புக்கு மேல் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.இதனால் இதயம்,  நுரையீரல்,  மூளை,  சிறுநீரகம்,  கணையம்,  வயிறு போன்ற மேல் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
  • எவரொருவர் சம்மணமிட்டு  உட்கார்ந்து தானாகவே எழுந்து  நிற்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள் என்பது ஆய்வின் மூலம் கண்டறிந்தது.
  •  நம் உடல்  எடையை குறைக்க உதவுகிறது.
  • இடுப்பை சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதால் வயிற்றில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
  •  முதுகுவலி வராமல் காக்கிறது.
  •  இந்த நிலையில் அமர்வதால் மூட்டு எலும்புகளையும், இடுப்பு எலும்புகளையும் பலப்படுத்துகிறது.
  •  நம் உடலை சுறுசுறுப்பாக இயங்க  வைக்கிறது.
  •  மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

இனிவரும்  அடுத்த தலைமுறையினருக்கு நம் நாட்டின் உட்காரும் முறையே தெரியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாம் முதலில் சம்மணமிட்டு கீழே உட்கார்ந்தால் தான் நம் பிள்ளைகள் நம்மை பார்த்து இந்த பழக்கத்தை பழகிக் கொள்வார்கள்.   உடற்பயிற்சிகளும்,யோகாசனமும் செய்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில்லை சாதாரணமாக சம்மணமிட்டு உட்கார்ந்தாலும் நம்மை நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வைக்கும்.