அத்தி மரத்தின் மகத்துவம்
அத்தி மரத்தின் சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள எல்லா பகுதிகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது.
அத்தி மரத்தின் சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள எல்லா பகுதிகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் முக்கியமான சிறப்பே இயற்கையாகக் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்கள் எல்லாம் நான்கு மடங்கு அதிகமாகவே அத்திப் பழத்தில் உள்ளது.
அத்தி பழத்தில் உள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, ஏ, இ, தயாமின், பொட்டாசியம், சோடியம், கால்சியம், தாமிரம் இரும்பு, புரதம், கரோட்டின், செலினியம், ஜிங்க், மாங்கனீசு, மெக்னீசியம், ரிபோஃபிளேவின், ஒமேகா, ஃபினோலிக் ஆன்ட்டி ஆக்சிடென்டு.
அத்திப்பழத்தின் நன்மைகள்:
- அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில் கலந்து உட்கொண்டால் இதயம் வலுவாகும்.
- அத்தி மரத்தின் இலைகளை ஒன்று அல்லது இரண்டு எடுத்து வாயில் போட்டு மெல்லவும் பிறகு வெதுவெதுப்பான வெந்நீரில் வாயை கொப்பளிக்கவும் இதை அடிக்கடி செய்து வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்கும்.
- இரவில் இரண்டு அல்லது மூன்று பழங்களை நீரில் ஊறவைக்கவும் அதை மறுநாள் எடுத்து ஒரு மேஜைக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், வறட்டு இருமல், கல்லீரல் பிரச்சனை, பித்தம் தலைக்கேறுதல், தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
- அத்திப்பழ இலைகளின் சாற்றை வெண்குஷ்டம், தோல் வியாதிகள் இருக்கும் இடத்தில் தடவி வர நோய் குணமாகும்.
- அத்திப்பாலை எடுத்து மூட்டில் பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.
- அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டைபட்டை மற்றும் நறுவிளம் பட்டை சேர்த்து பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் மூன்று வேளை குடித்து வர இரத்த பேதி குணமாகும்.
- தினமும் இரண்டு வேளை அரை கிராம் அளவுக்கு நெல்லிக்காய் பொடியையும், பக்குவம் செய்த அத்திப் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்கும்.
- தேனில் ஊற வைத்த ஒரு அத்திப்பழத்தை தினமும் காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் கடுமையான வயிற்று வலியை போக்கும்.
- அத்திப்பழத்துடன் பாலை சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அதில் தேனை கலந்து முகத்தில் அந்த பேஸ்ட்டை தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பள பளவென்று மின்னும்.
- அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு வர எலும்புகள் வலிமையாகும்.
- அத்திப் பழ ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.