இஞ்சியின் மகத்துவம்
நாம் அன்றாட உணவில் உபயோகிக்கும் இஞ்சியின் மகத்துவத்தை பற்றி அறிந்து கொள்வோம். இஞ்சி நம் சமையலறையில் உள்ள மிக சிறந்த மருந்தாகும்.
இஞ்சியின் மகத்துவம்
நாம் அன்றாட உணவில் உபயோகிக்கும் இஞ்சியின் மகத்துவத்தை பற்றி அறிந்து கொள்வோம் .இஞ்சி நம் சமையலறையில் உள்ள மிக சிறந்த மருந்தாகும்.
இஞ்சியில் மருத்துவ குணம் உள்ள சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்ட ஜிஞ்சர் ஆல் என்ற பொருள் உள்ளது. ஜிஞ்சிபெர் அபிசினால் என்னும் தாவரத்திலிருந்து தோன்றும் மூலிகைதான் இஞ்சி ஆகும் .இது சீனாவை பிறப்பிடமாக கொண்டது.இந்த மூலிகையை 4000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
இஞ்சியின் நன்மைகள்:
இஞ்சியில் கிட்டத்தட்ட 40 ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்து உள்ளது. செரிமான பிரச்சனை குமட்டல், சளி, இருமல், உடல் எடை குறையவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கவும், இதயம் ஆரோக்கியம் பெறவும் நமக்கு உதவுகிறது.கருவுற்ற பெண்களுக்கு ஆரம்ப நாட்களில் காணப்படும் உடல் சோர்வு வாந்தி மயக்கம் முதலான உடல் உபாதைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சியை சீராக்க இஞ்சி உதவுகிறது. முழங்காலின் கீல்வாதத்தை குணப்படுத்தும் மருந்தாகவும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. .
இஞ்சியை எவ்வாறு உபயோகப்படுத்தலாம்:
இஞ்சியை பல வகையாக பயன்படுத்தலாம் பச்சையாகவும் காயவைத்தும் ஜூஸ் ஆகவும் எண்ணெயாகவும்.உணவிற்காகவும் அழகிற்காகவும் பயன்படுத்தலாம். மற்ற பயன்கள்: .
- இஞ்சியை 2 கிராம் அளவிற்கு பதினோரு நாட்கள் எடுத்துக்கொண்டால் தசைவலி குறையும்.
2.இஞ்சி உடன் பூனைக்கண் குங்கிலியம் பட்டை நல்லெண்ணெய் சேர்த்து முழங்காலில் தடவிவர முழங்கால் வலி குணமாகும்.
- ஒரு மேஜைக்கரண்டி இஞ்சியை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் சர்க்கரையை கலந்து அந்நீரை வடிகட்டி உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் குடித்து வர மாதவிடாய் சுழற்சி சீராகும்.
- இஞ்சியை தழும்புகள் மீது தேய்த்து வந்தால் 6 முதல் 12 வாரங்களுக்குள் தழும்புள் மறைந்துவிடும்.
5.ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சியுடன் ஒரு மேஜைக்கரண்டி ஜோஜோபா எண்ணெயை கலந்து உச்சந்தலையில் தேய்த்து 30 நிமிடங்களுக்குப் பிறகு தலையை ஷாம்பு போட்டு அலசவும் ; இது முடிக்கு ஊட்டச்சத்தைத் கொடுத்து முடியை அடர்த்தியாக வளர வைக்கும்.
இஞ்சியில் உள்ள புரதம், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, சோடியம், வைட்டமின்கள், தாதுக்கள், கனிமச்சத்துக்கள், கொழுப்பு, அமிலங்கள் போன்றவை மிகச் சிறந்த ஊட்டசத்தாக விளங்குகின்றன. இதை தினமும் அளவோடு உட்கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.