குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய போறீங்களா?
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிய இங்கே படியுங்கள்.
குழந்தைகளின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டங்களிலும் பெற்றவர்களின் தொடுதல் என்பது அடிப்படை விஷயங்களில் ஒன்றாகும். பெற்றவர்களின் தொடுதலை குழந்தைகள் உணரும்போது, அவர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும், நேசிக்கப்பட்டதாகவும், முக்கியமாகவும் உணர்வார்கள். அதனடிப்படையில் மசாஜ் என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உறவைத் தொடங்க அழகான மற்றும் அன்பான வழி மசாஜ் தான். மசாஜ், உங்கள் குழந்தையின் தசைகளை தளர்த்துகிறது. மசாஜ் செய்வதால் குழந்தைகள் நன்றாக தூங்குவார்கள்.
உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது, மெலடோனின் என்ற ஹார்மோன் அவர்களின் உடலில் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன் உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. மேலும் இந்த ஹார்மோன் தோலின் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம்.
குழந்தைகளுக்கு பகலில் விழித்திருப்பதற்கும் இரவில் தூங்குவதற்கும் கண்டிப்பாக உதவி தேவை.
மசாஜ் செய்ய எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?
ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். இது குழந்தைகளின் சருமத்தை ஊட்டமளித்து, சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் மென்மையாக்குகிறது.
இந்த எண்ணெய் எதுவும் கிடைக்காவிட்டால், நீங்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.
வேறு ஏதேனும் நன்மைகள் உள்ளதா?
குழந்தைக்கு மசாஜ் செய்வது உங்கள் குழந்தையின் எடை, வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானம் ஆகியவற்றை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நன்றாக தூங்கவும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு பாசமான உறவை வளர்ப்பதுக்கும் மசாஜ் உதவுகிறது. மசாஜ் செய்வதால், உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. வாயு, பிடிப்புகள், மலச்சிக்கல் போன்ற தொல்லைகளை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு மசாஜ் மிக நல்லது.