நீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா?
நெல்லிக்கனி தான் நீண்ட ஆயுளோடு நோயின்றி நம்மை வாழவைக்கும் அதிசய கனி.
நீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா இந்த கனியை உண்டாலே போதும்:
நெல்லிக்கனி தான் நீண்ட ஆயுளோடு நோயின்றி நம்மை வாழவைக்கும் அதிசய கனி. இதன் அருமை பெருமைகளை உணர்ந்து நம் முன்னோர்கள் இதனை உபயோகப்படுத்தினர். அதற்கு சான்றுதான், அதியமான் அவ்வையார் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக இந்தக் கனியை அவ்வையாருக்கு கொடுத்தார். நெல்லிக்கனி மருத்துவ குணம் மட்டுமின்றி பல சத்துக்களை கொண்டுள்ளது. இதனை "ஏழைகளின் ஆப்பிள்" என்று கூறுவர் .
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
இதில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், கரோட்டின் பாலிஃபீனால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
நெல்லிக்கனியின் நன்மைகள்:
- நாட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லிக்கனி சாறு உடல் சூட்டைத் தணிக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், செரிமானத்தை சீராக்கும், வயிற்றுப்போக்கு, வயிற்று வலியை சரி செய்யும் ஆற்றல் மிக்கது.
- நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து நாள் தோறும் காலையும், மாலையும் உண்டுவந்தால் உடல் வலிமையும், இளமையும் பெறலாம்.பித்தமயக்கம் தலைசுற்றல், ரத்த சோகையும் குணமாகும்.
- அருநெல்லிக்கனியை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
- நெல்லிக்காய் சாறுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
- அடிக்கடி நெல்லிக்கனியை உண்டு வருவதால் நம் கண் பார்வையை மேம்படுத்துவதோடு கண்ணிலிருந்து நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற கண் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
- நெல்லிக்கனியை தினமும் ஒன்று உட்கொண்டால் இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும்.
- நெல்லிக்கனியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும்.
- மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
- நெல்லிக்கனி சாறுடன் சிறிது இஞ்சியையும், தேனையும் கலந்து குடித்துவந்தால் தொண்டை புண்ணையும், இருமலையும் உடனே குணமாக்கும்.
- மலை நெல்லிக்காயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம்மை இளமையோடு வாழ வைக்கும்.
- மலை நெல்லிக்காயில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோயை குணப்படுத்தும்.
- நெல்லிக்கனியை அல்லது நெல்லிக்கனியின் சாறை தினமும் எடுத்துக்கொண்டால் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும். நெல்லிக்காயின் மருத்துவ குணத்தையும், சத்துக்களையும், மகத்துவத்தையும் பார்த்தோம். நம் முன்னோர் நமக்கு சொன்ன நெல்லிக்காயின் மகத்துவத்தை நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லி அக்கனியை உண்ண வைப்போம். அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் இந்த அற்புத கனியை பயன்படுத்தி நீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ்வோம்.