உங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா?
சிறு குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுக்கொடுக்க தொடங்கும்போதே இம்முறையின் மூலம் கற்றுக்கொடுத்தால் கற்கும் திறன் மேம்படும். இதனால் அவர்களுக்கு கற்றல் சுலபமாகிவிடுவதோடு அதன் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
ஃபோனிக்ஸ் என்பது ஒலிபியல் என்று பொருள்படும். ஒவ்வொரு எழுத்தின் ஒலியை கொண்டு படிக்கும் முறையைத்தான் ஃபோனிக்ஸ் முறை என்பார்கள். இந்த முறை கற்றலை எளிமைப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு எந்த ஒரு மொழியிலும் படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டுமென்றால் அது அவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்வதில்லை நாம் அவர்களுக்கு ஒரு வார்த்தையை மனதில் பதிய வைக்க பலமுறை அந்த வார்த்தையை எழுதவோ, சொல்லவோ சொல்கிறோம் அதை நமக்காக செய்கிறார்களே தவிர அந்த வார்த்தை அவர்களின் நினைவில் பதிவதில்லை சிறிது நேரம் மட்டுமே இருக்கும் அதன்பிறகு அது அவர்களுக்கு மறந்து போகிறது. இதனால் கற்றல் அவர்களுக்கு ஒரு சுமையாக மாறி அதன் மீது ஒரு வெறுப்பை உண்டாக்குகிறது. இந்த ஃபோனிக்ஸ் முறையில் குழந்தைகளுக்கு ஒரு வார்த்தையை கற்றுக்கொடுப்பது மிக சுலபமானது. ஒரு வார்த்தை என்றால் பல எழுத்துக்கள் கொண்டிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அதற்குரிய ஒலியை கற்றுக் கொடுத்துவிட்டாலே குழந்தைகளால் எந்த ஒரு பெரிய வார்த்தையையும் எளிதில் படிக்க முடியும். அது எப்படி என்றால் உதாரணத்திற்கு (A+m+ma)இந்த வார்த்தையில் (A என்பது அ என்று ஒலிக்கும்)( m என்பது ம் என்று ஒலிக்கும் ) (ma என்பது மா என்று ஒலிக்கும் ) இதில் உள்ள எழுத்துக்களின் ஒலியை சேர்த்து படித்தாலே அந்த வார்த்தையை அவர்களால் எளிதில் படிக்க முடியும். இதனால் அவர்களுக்கு கற்றல் சுலபமாகிவிடுவதோடு அதன் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
ஃபோனிக்ஸ் முறையில் உள்ள நன்மைகள்:
- கற்றலை எளிமையாக்குகிறது,
- சுலபமாக படிக்கவும் எழுதவும் உதவுகிறது,
- இதனால் எந்த மொழியையும் நம்மால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்,
- கற்றலின் மீது ஆர்வத்தை உண்டாக்குகிறது,
- எழுத்துக்குரிய ஒலியை கொண்டு படிப்பதாலும், எழுதுவதாலும் எந்த ஒரு மொழியின் உச்சரிப்பையும் நம்மால் சரியாக உச்சரிக்க முடியும்.
- பல மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்து கொண்டாலே அந்தந்த மொழியில் உள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கம் நமக்கு உண்டாகும். இதனால் பல நல்ல சிந்தனைகளும், தெளிவான அறிவும் நமக்கு கிடைக்கும்.
- பல மொழிகளை எளிதாக கற்க முடிவதால்,நமக்கு எந்த மொழியிலும் சுலபமாக பேச முடியும்.இதனால் நமக்கு வேலை வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும்.
எந்த மொழியை நம்மால் சுலபமாக படிக்கவும், எழுதவும் முடிகிறதோ அந்த மொழியில் நம்மால் சரளமாக பேசவும் முடியும். அதனால் தான் ஃபோனிக்ஸ் முறையில் எந்த ஒரு மொழியையும் எளிதாக நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுக்கொடுக்க தொடங்கும்போதே இம்முறையின் மூலம் கற்றுக்கொடுத்தால் கற்கும் திறன் மேம்படும். இந்த முறையில் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு மொழியில் உள்ள எழுத்துக்களுக்கும் அதற்குரிய ஒலியையும் ஃபோனிக்ஸ் முறையில் எவ்வாறு பயில்வது என்று பல புத்தகங்களும், அட்டை வனைகளும் உள்ளது அதைக்கொண்டு நாமும் நம் பிள்ளைகளுக்கு இந்த முறையில் படிக்க கற்றுத்தந்து அவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிறப்புடையதாக்குவோம்.