அழகைத் தரும் அன்னப்பால்
அன்னப்பாலை உங்கள் முடிக்கு பயன்படுத்தி பளபளக்கும் அடர்த்தியான முடியைப் பெறுங்கள். இந்த அன்னப்பாலை உபயோகித்தால் உங்கள் சருமம் குழந்தையின் சருமத்தை போல் எப்படி மிருதுவாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்!
அழகை தரும் அன்னப்பால்
அரிசி கஞ்சி என்றால் அன்னத்தை வடிக்கும் போது வரும் நீர் என்று பொருள்படும். இந்த நீர் பால் போன்று இருக்கும். அதனால் இதை அன்னப்பால் என்று கூறுவார்கள். அரிசியில் உள்ள அனைத்து சத்துக்களும் இந்த கஞ்சியில் உள்ளது. இந்த கஞ்சி நம் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளித்து இளமையாக வைத்திருக்கும். இதை நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்காகவும் பயன்படுத்தினார்கள். இதை சில பொருட்களுடன் சேர்த்து உபயோகப்படுத்தினால் நமக்கு பல பயன்கள் கிடைக்கும் என்று சில ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
அரிசி கஞ்சியை அழகிற்காக எவ்வாறு பயன்படுத்தலாம்:
- சுருக்கங்களை நீக்கி இளமையோடு இருக்க: அரிசி கஞ்சியில், சிறிது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து வறண்டு போகாமல் இருக்க செய்வதால் சுருக்கங்கள் வராமல் இளமையோடு இருக்க வைக்கும்.
- சருமம் புத்துணர்ச்சி பெற: இந்த அரிசி கஞ்சியை சருமத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
- சருமம் மிருதுவாக இருக்க: அரிசி கஞ்சியில், சிறிது பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலந்து சருமத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் சருமம் மிருதுவாக மாறும்.
- சருமம் பொலிவோடு இருக்க: இந்த கஞ்சியில், ஓட்ஸ் சேர்த்து கலந்து சருமத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவோடு பளபளப்பாக மின்னும்.
- வேர்க்குருவைப் போக்க: இந்த கஞ்சியை வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் உடலுக்கு குளிர்ச்சியூட்டி வேர்க்குருவைப் போக்கி விடும்.
- பாத வெடிப்பை குணமாக்க:இந்தக் கஞ்சியில் சிறிது உப்பு கலந்த பிறகு இந்தக் கஞ்சியில் பாதத்தை வைத்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் பாத வெடிப்பு சரியாகிவிடும். இதை தினமும் செய்து வந்தால் வெடிப்பைப் போக்கி பட்டுப்போன்ற பாதங்களை பெறுவீர்கள்.
- கரும்புள்ளிகள் மறைய: இந்தக் கஞ்சியில், பச்சைப் பருப்பு மாவை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மங்க செய்யும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் விரைவாக கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
- தழும்புகள் மறைய: இந்தக் கஞ்சியில், சிறிது கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலைமாவை ஒன்றாக கலந்து தழும்புகள் உள்ள இடத்திலும் கருமையான இடத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் இந்த இடத்தில் உள்ள கருமையை மங்கச் செய்யும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பலன் விரைவாகவே கிடைக்கும்.
- பருக்களை வர விடாமல் இருக்க: இந்தக் கஞ்சியில் ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு மாவை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பருக்களை வரவிடாமல் செய்யும்.
- சருமம் வறண்டுபோகாமல் பளபளக்க: இந்த கஞ்சியில் பால் அல்லது தயிரை ஒன்றாக கலந்து சருமத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்தை வறண்டு போகாமல் செய்து பளபளவென்று வைத்திருக்கும்.
- முடியை பொலிவோடு அதிகமாக வளர வைக்க: சீயக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி முடியை நன்றாக அலசிய பிறகு இந்த நீரை தலை முழுவதும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் உங்கள் முடியை அலச வேண்டும் அல்லது சீயக்காய் உபயோகப்படுத்தும் போது சீயக்காய் பொடி உடன் இந்த கஞ்சியை ஒன்றாக கலந்து தலையை நன்றாக தேய்த்து குளித்தாலும் முடிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்கும்போது செய்து வந்தால் முடி உதிர்வை குறைத்து, முடிக்கு ஊட்டச்சத்தை கொடுத்து நன்றாக வளர வைக்கும்.
அன்னப்பாலை உங்கள் முடிக்கு பயன்படுத்தி பளபளக்கும் அடர்த்தியான முடியைப் பெறுங்கள். இந்த அன்னப்பாலை உபயோகித்தால் நீங்களே உணர்வீர்கள் உங்கள் சருமம் குழந்தையின் சருமத்தை போல் எப்படி மிருதுவாக இருக்கிறது என்பதை.எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாததால், அனைத்து சருமத்திற்கும் ஏற்றது என்பதால் நாம் அனைவரும் இதைப் பயன்படுத்தி நிலா போன்று களங்கமில்லாத பொலிவான சருமத்தை பெறுவோம்.