முட்டை கோஸ் சாறின் நன்மைகள்
முட்டைகோஸ் என்பது எளிதில் கிடைக்கக் கூடிய இலையுடைய காய்கறி வகையாகும். முட்டை கோஸ் சாறு பருகுவதற்கு ஏற்ற ஒரு பானமாகும். உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை செய்ய கூடிய முட்டை கோஸ் பற்றிய விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
இது அதிகமான பாலிபீனால்கள் கொண்டது. கால்சியம், மெக்னீசியம், இரும்பு , பாஸ்போரோஸ் , ஐயோடின் மற்றும் வைட்டமின் ஏ , பி 1 , பி 2 , பி 6 , கே மற்றும் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது.
முட்டை கோஸை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு எடுத்து பருகுவதால் பல உடல் நன்மைகள் கிடைக்கின்றன. முட்டை கோஸ் சாறு பல வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நச்சுக்களை வெளியேற்றும்:
அதிகமான ஆல்கஹால் அருந்துவதால் செரிமான மண்டல இயக்கம் தடைபடுகிறது. மது அருந்திய அடுத்த நாள் காலையில் வயிறு மந்தமாகி இருப்பதை உணர முடியும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஆல்கஹால் அழிப்பதால் இவை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய வைட்டமின் மற்றும் மினரகள் உடலுக்கு கிடைப்பது தடைபடுகிறது.
முட்டை கோஸ் சாறு ,செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி , உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது . தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 க்ளாஸ் முட்டைகோஸ் சாறு பருகுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயிற்று புற்று நோய்:
முட்டைகோஸ் சாறில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள் வயிற்று புற்று நோயை குணமாக்குகிறது. சிறுநீரக அல்சர் பாதிப்பு கொண்ட நோயாளிகள் முட்டைகோஸ் சாறு எடுத்துக்கொள்வதால் சாதாரணமாக அவர்கள் குணமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மூன்றில் ஒரு பங்கு நேரம் குறைகிறது. வயிற்றின் உட்பகுதியில் ஏற்படும் அமில தாக்குதலில் இருந்து மீள்வதற்கான வலிமையை இந்த சாறு கொடுப்பதாக அறியப்படுகிறது.
முக வசீகரம் :
முட்டைகோஸ் சாறு அழகை அதிகரித்து வசீகரம் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளான ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை காத்து பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றாமல் தடுக்கிறது. முக வறட்சி மற்றும் வயது முதிர்வை தடுக்கிறது.
வலுவான கூந்தல்:
முட்டைகோஸ் சாறு பருகுவதால் பலவீனமான கூந்தல் பலமடைகிறது. தினமும் ஒரு க்ளாஸ் முட்டைகோஸ் சாறு பருகுவதால் முடி உதிர்தல் குறைந்து வலிமையாகிறது.
முட்டை கோஸ் சாறின் நன்மைகள்:
* முட்டைகோஸ் சாறை தினமும் எடுத்துக் கொள்வதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
* எடை குறைப்பு ஏற்படுகிறது.
* சளி மற்றும் இருமல் குறைகிறது.
* பல நோய்களை எதிர்த்து போராடுகிறது,
இவ்வளவு நன்மைகளை செய்யும் முட்டை கோஸ் நமது தினசரி உணவில் இடம்பிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.