கற்றாழை அல்லது கள்ளிச்செடி சாறு

கற்றாழை சாறு பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கற்றாழை அல்லது கள்ளிச்செடி சாறு

சப்பாத்தி கள்ளி என்னும் செடியை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சப்பாத்தி போல் வட்டவடிவத்தில் இருக்கும். இந்தச் செடியில் முட்கள் அதிகமாக் காணப்படும் .  இது ஒரு வகை கற்றாழை என்றும் அறியப்படுகிறது. இந்த வகை கற்றாழையின் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று அறியப்படுகிறது. நிறைய முட்களைக் கொண்டு, காண்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் இந்த கற்றாழை செடியில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். 

கற்றாழை சாறு - ஊட்டச்சத்து விபரம்

கற்றாழை சாறு குறைந்த கலோரிகளைக் கொண்டது. இந்த கள்ளிச்செடியில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம்.

  • வைட்டமின் சி
  • பி வைட்டமின்கள்
  • ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்
  • தாவர ஊட்டச்சத்துகள்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • பீட்டா கரோட்டின்
  • அமினோ அமிலங்கள்

உணவு சார்ந்த கடைகளில். இந்த கற்றாழை சாறு தற்போது விற்கப்படுகிறது. ஆனால் இது  மிகவும் விலை உயர்ந்தது.  வீட்டிலேயே கற்றாழை சாறு தயாரிப்பது மிகவும் எளிதானது. 

கற்றாழை சாறு ரெசிபி:

  1. சப்பாத்தி கள்ளியை எடுத்துக் கொள்ளவும் . அதன் முட்களை மெதுவாக விலக்கிக் கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு சப்பாத்தி கள்ளியை அந்த நீரில் போடவும்.
  3. 4-5 நிமிடம் உயர் தீயில் கொதிக்கவிடவும்.
  4. பின்பு நீரில் இருந்து சப்பாத்தி. கள்ளியை எடுத்து ஆறவிடவும்.
  5. ஆறியபின், அதன். தோல்பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும்.
  6. அவற்றுடன் சிறிது எலுமிச்சை, ஆரஞ்சு, தேங்காய் நீர் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த பழங்களை சேர்ப்பதால் இந்த பானத்தின் சுவை அதிகரிக்கும் .
  7. பின்பு ஒரு வடிகட்டியில் சாற்றை வடிகட்டி எடுத்துக் பருகவும்.

கற்றாழை  சாற்றின்  நன்மைகளை இப்போது  காணலாம்.

எடை இழப்பிற்கு உதவுகிறது:

இந்த கற்றாழை சாறு குறைந்த கலோரியைக் கொண்டிருப்பதால் எடையை நிர்வகிக்க ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு கப் கற்றாழை சாற்றில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனைப் பருகுவதால் உங்கள் உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.  தேவையற்ற நேரத்தில் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதும், அதிகமாக உணவு உட்கொள்ளும் உணர்வும் தடுக்கப்படுகின்றன.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:

கற்றாழை சாறு பருகுவதால் உடலில் உள்ள LDL  என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும்  உடலில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் இதய நோய் மற்றும் தமனித் தடிப்பு போன்ற அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

பல நூற்றாண்டுகளாக, அழற்சி, வீக்கம், மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, பெருங்குடல் அழற்சி போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு இந்த சாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும் பெருங்குடல் அனைத்து நச்சுகளையும் வெளியிடுவதன் மூலமும் செயல்படுகிறது.

குறிப்பு:

இந்த சாறு பருகுவதால் சிலருக்கு குமட்டல், வலி, வயிற்றுப்போக்கு போன்ற குடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஹேங் ஓவருக்கு தீர்வு:

மது அருந்தியபின் சிலருக்கு ஹேங் ஓவர் நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து  விடுபட இந்த சாறு சிறப்பாக செயல்புரிவதாக சிலர் பெரிதும் நம்புகின்றனர். ஹேங் ஓவர் நிலையை வெளிப்படுத்தும் தலைவலி , குமட்டல் போன்றவற்றிற்கு இந்த  சாறு  சிறந்த தீர்வைத் தரும். அதிகமான மது அருந்துவதால்  உண்டாகும். அழற்சிக்கு இதமளிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த சாற்றில் இருப்பதாக அறியப்படுகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது:

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியைக் குறைக்கும் தன்மை கற்றாழை சாற்றில் உள்ள முக்கிய கூறுகளுக்கு உண்டு. ஆகவே மாதவிடாய். காலத்தில் அடிவயிற்றில் பெண்களுக்கு உண்டாகும் அசௌகரியத்தைப் போக்கவும் அதிகரித்த வலியைப் போக்கவும் கற்றாழை சாறு பருகலாம்.