முடி வளர்ச்சிக்கு காபி தூள்
காபி அதனை பருகும் பலருக்கும் பல வித உணர்வை தரும். காலை வேளையின் பரபரப்புகள் ஓய்ந்த பின் 1 கப் காபியுடன் வந்து சோபாவில் அமரும் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் காபி ஒரு தற்காலிக தாய் வீடு தான். அந்த அளவுக்கு மனதை தளர்த்தும் தன்மை காபிக்கு உண்டு. இது ஒரு எனர்ஜி பூஸ்டராக , மூளையை புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக பலவிதங்களில் போற்றப்படும்.
இப்போது மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி! காபி முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. தூக்கத்தில் இருக்கும் ஆண்களை மட்டும் காபி எழுப்புவதில்லை, தூங்கி கொண்டிருக்கும் அவர்களின் தலையில் உள்ள செயலற்ற முடி வேர்க்கால்களையும் தட்டி எழுப்பி வளர செய்கிறது. நம்ப முடிய வில்லையா?
தலை முடியின் வேர்க்கால்களை வளர விடாமல் செய்யும் டெஸ்டோஸ்ட்டிரோன் ஏற்படுத்தும் சேதங்களை தடுக்கும் ஆற்றல் காபியில் உள்ள காஃபைனுக்கு உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. அலோபீசியாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் செயலற்ற வேர்கால்களுக்கு காபியை பயன்படுத்தும்போது முடிவுகள் ஆச்சர்யத்தை கொடுத்தன. டெஸ்டோஸ்டெரானால் பாதிக்கப்பட்ட முடியின் வேர்க்கால்கள் காபியின் குறிப்பிட்ட அளவு பயன்பட்டால் வளர்ச்சியை எட்டி இருக்கின்றன.
ஆண் மற்றும் பெண் , இருபாலரின் தலையிலும் காஃபைன் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளபட்டது. முடியின் நீள வளர்ச்சியில் நல்ல மாற்றம் ஏற்பட்டது . ஆண்களின் தலையை விட பெண்களின் தலைக்கு காஃபைன் அதிகம் ஏற்று கொள்ளப்பட்டது.
இரண்டு விதமாக நாம் தலை முடிக்கு காபியை பயன்படுத்தலாம்.
* காபி தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தலை முழுதும் தடவி 20 நிமிடம் கழித்து தலை அலசலாம்.
* காபி எண்ணெய் தயாரித்து முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
* 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
* 2 ஸ்பூன் காபி தூள் (இன்ஸ்டன்ட் காபி)
செய்முறை:
* அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.
* எண்ணெய் காயாமல் பார்த்துக் கொள்ளவும்.
* காபி தூளை அதில் சேர்க்கவும்.
* மெதுவாக 10 நிமிடங்கள் கிளறவும்.
* அடுப்பை அணைத்து, இந்த கலவையை குளிர விடவும்..
* தேவைப்பட்டால் இதனுடன் சிறிது விளக்கெண்ணெய், கறிவேப்பிலை, செம்பருத்தி இலை போன்றவற்றை சேர்க்கலாம்.
ஆறியவுடன் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். எண்ணெய்யை தலையில் ஊற்றி , நன்றாக உச்சந்தலையில் அழுத்தி தேய்க்கவும். காபி தூள், தலையில் உள்ள இறந்த செல்களை அகற்றும். பொடுகு தொந்தரவு இருந்தாலும் தீர்க்கப்படும். தலையை தேய்ப்பதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடி உதிர்தல் உடனே நிற்கும்.
இன்றே இதனை முயற்சித்து பாருங்கள். நிச்சயமாக முடி உதிர்தல் குறைந்து நீளமான முடி வளரும்.