வயது முதிர்வை தடுக்க - கொலாஜென் ரீமாடெல்லிங்

சருமத்தை சோர்வாக மாற்றி, வயது முதிர்வை ஏற்படுத்தும் காரணிகளுக்கு இந்த நவீன யுகத்தில் ஒரு சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்ன?

வயது முதிர்வை தடுக்க  - கொலாஜென் ரீமாடெல்லிங்

சருமத்தின் மிருதுவான தன்மை மற்றும் எலாஸ்டிக் தன்மை மாறும்போது, நமக்கு வயதாகிறது என்பதை ஞாபகப்படுத்தும். இதற்கான காரணங்கள், சருமத்தில் இருக்கும் ப்ரீ  ரேடிக்கல் என்னும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் தீங்குகள். இவை சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை குறைத்து, கோடுகள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

அறுவை சிகிச்சை இல்லாமல் கொலாஜென் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுதான் தான் அந்த முறை. இதன் பெயர் கொலாஜென் ரீ மோடெல்லிங் . இந்த சிகிச்சைக்கு பின்னர், கோடுகள், சுருக்கங்கள் ரோஸசியா , மெலாஸ்மா , பருவால்  உண்டான தழும்புகள் போன்றவை போக்க படுகின்றன. இதனை பற்றி விளக்கமாக, கொலம்பியா ஆசியா மருத்துவமனை சேர்ந்த தோல் சிகிச்சை மற்றும் ஒப்பனை நிபுணர், டாக்டர்.ஷ்ரவ்யா சி.டிபிர்னேனி கூறுகிறார்.

புதிய கொலாஜென் உற்பத்தி எப்படி உண்டாகிறது?
லேசர் சிகிச்சை மூலம் கொலாஜென் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. இது தீங்கற்ற முறையில், வயது முதிர்வை  தடுக்கிறது. சூரிய ஒளியால் சருமத்திற்கு ஏற்படும் இழப்பை குறைக்கிறது. 

சருமத்திற்கு ஏற்படும் தீங்குகளான, அதிகரித்த துளைகள், சீரற்ற சரும நிறம், ரோஸஸியா  என்ற சரும பிரச்சனை, கோடுகள் மற்றும் சுருக்கங்கள், பருக்களின் தழும்புகள், சோர்வான சருமம் போன்றவை நீக்கப்படுகின்றன.

எப்படி இது வேலை புரிகிறது ?
இந்த தொழில்நுட்பம் பொது கொள்கையை  கொண்டது. ஆனால் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு விதமாக செயல் பட கூடியது. தோலின் அடி பகுதியில் வெப்ப ஆற்றலை செலுத்தி  கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைய செய்கின்றது. மெலஸ்மா என்ற பாதிப்பால் தோன்றக்கூடிய பழுப்பு நிற திட்டுக்களை போக்க, ஒளி ஆற்றலை  உறிஞ்சி வெப்ப ஆற்றலாக மாற்றி, பாதிப்பு உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன. 

அமர்வு காலம் என்ன?
ஆரம்ப கட்டத்தில் மாற்றம் இல்லாதது போல் தோன்றினாலும், 6-8 சிட்டிங்கிற்கு பிறகு நல்ல மாற்றத்தை உணர முடியும். சிகிச்சை மற்றும் சிட்டிங் பொறுத்த முடிவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 
ஸ்கின் நீடலிங் , போடோக்ஸ் , ஹையலூரோனிக் ஆசிட் பில்லர் போன்ற வகைகளுடன் சேர்த்து சிகிச்சை அளிக்கும்போது விரைந்த மாற்றம் காணப்படும்.
சிகிச்சையின் பலன்கள் :

* அதிகரிக்கப்பட்ட துளைகள் - அளவில் குறையும் 
* சமசீரற்ற சரும  நிறம் - மென்மையாகி சீராகும்.
* சூரிய ஒளியால் ஏற்பாடு மாற்றம் - லேசாகும் 
* சோர்வான தோற்றம் - பிரகாசமாகும்.
* பருக்களால் உண்டான  தழும்புகள் - சீராகும் 
* கருப்பு திட்டுக்கள் - ஓரளவுக்கு மறையும் 

சிகிச்சைக்கு ஏற்ற வயது:
பொதுவாக , மேலே கூறிய சரும பிரச்சனைகள் 30 வயதிற்கு மேல் ஏற்படுவதாகும். ஆகவே இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள இதுவே சரியான வயதாகும் . இந்த வயதிற்கு முன் சிகிச்சைகளை தொடங்கினாலும், நல்ல தீர்வுகள் கிடைக்கும். இள வயது சருமம், சிகிச்சைக்கு வளைந்து கொடுக்கும் , புத்துணர்ச்சியும் விரைவில் கிடைக்கும். வயது முதிர்வு ஏற்படும் காலம் தாமதமாகும்.

நன்மைகள் : 
* தீங்குகள் அற்றது. 
* வலி இல்லாதது 
* மற்ற சிகிச்சைகளான, போடோக்ஸ், பில்லேர்ஸ், மைக்ரோ நீடலிங் , ரேடியோ ப்ரீகுவென்ஸி போன்றவற்றோடு இணையும் போது நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

தீமைகள்:
* பல கட்ட அமர்வு தேவைப்படும்.
* விலை உயர்ந்த சிகிச்சை 
* தொடர் சிகிச்சையால் மட்டுமே பலன்கள்  தெரியும்