மரங்களுக்கான தேவை

தற்போது இருக்கும் நமது கால சூழல், கோடை காலம் போய் கோடை காலங்களாகவும். மழை  காலம் போய் மழை  நாட்களாகவும் மாறி கொண்டு இருக்கிறது.

மரங்களுக்கான தேவை

பொதுவாக நாம் சுற்றுலா அல்லது விடுமுறை நாட்களை கழிக்க நினைக்கும்போது பல வெளியிடங்களுக்கு  செல்ல விழைகிறோம். நாம் செல்லும் இடங்களில் மரங்கள் இல்லாமல் வெப்பமயமாக இருந்தால் நம்மால் அவற்றை அனுபவிக்க முடியாது.

நிழல் மரங்கள் உடனடியாக சூடான, வெக்கையான வெயில் நாட்களை குளிர்ச்சியாக்குகின்றன. மரங்கள் நமது வெயில் காலங்களில் நமது வீடுகளை கூட குளிர்விக்க தவறுவதில்லை! குறிப்பாக மரங்கள் வீட்டின் மேற்கு பகுதியில் நடப்படுகிறது போது, அவை நமது குளிர் சாதன  பயன்பாட்டை 30 சதவீதம் வரை குறைக்க முடிகிறது.

குளிர்ச்சி என்ற ஒற்றை  பயன் மட்டுமே மரத்தினால் நமக்கு கிடைப்பது இல்லை. அவை குளிர்ச்சியை தந்து நம்மை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல்,  (UV Rays) என சொல்லப்படும் புர ஊதா கதிர்களிடமும் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின் படி, ஒரு நிழல் மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது SPF 10 சன் பிளாக்கிற்கு சமமானதாகும்.

மரங்கன் இயற்கையான முறையின் ஒரு சன்ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. 

மரத்தின் நிழலுக்கான நன்மைகளை/தேவைகளை பற்றி கீழே கொடுத்துளோம்.

மாறி வரும் கால சூழல்களால், முந்தைய காலங்களை விட தற்போது நாம் நமது தோலினை சரி வர பராமரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

"ஸ்கின்  கேன்சர் ஃபவுண்டேஷன்", எனும் ஒரு அமைப்பு உலகின் வாழும் ஐந்தில் ஒருவருக்கு தமது வாழ் நாளில் தோல் புற்றுநோய்  உருவாகும்  வாய்ப்பு இருக்கிறது என மதிப்பிடுகிறது. இந்த புள்ளி விவரத்தை நாம் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் இந்த புள்ளி விவரத்தை குறைக்க நாம் செய்ய வேண்டியது,

ஒவ்வொரு நாளும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதை குறைத்துக் கொண்டு, நாம் வெளியில் இருக்கும்போது முடிந்த வரை மர நிழலில் இருப்பது மிகச் சிறந்தது.

மர நிழல் UV-B யின் வெளிப்பாட்டை சுமார் 50 சதவிகிதம் குறைக்கிறது. இது தான் நாம் கொண்டாட வேண்டிய ஒரு புள்ளிவிவரம்.

மர நிழலில் நன்மைகளை அதிகரிக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1.  வெளி  இடங்களில்  அடர்த்தியான பசுமையான மரங்கள் கீழ் உட்காரும்போது . இலைகள் மூலம் குறைவான சூரிய ஒளி நம் உடலில் படுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.
2. தொடர்ந்து மரங்கள் இருக்கும் இடங்கள் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழல் இருக்கும் இடங்களை  தேர்வு செய்து சிறிது நடை பயணம் மேற்கொள்ளலாம்.
3. பகலில், UV கதிர்களின் தாக்கத்தை மரங்கள் மிக அதிக அளவில் தடுக்கின்றன.

புதிய மரங்களை நடுவதற்கு ஏற்ற சிறந்த காலங்கள், வசந்த காலம் மற்றும் இல்லை உதிரும் காலங்கள் ஆகும். 

மரங்களின் முக்கியத்துவம் , குளிர்ந்த காற்று தருவதும், சூரிய ஒளியின் புரா ஊதா  கதிர்களை கட்டுப் படுத்தி நமது உடலின் வெளிப்புறத்தில் உள்ள தோலை காப்பதோடு மட்டும் அல்லாமல்  அவை நமக்கு ஆக்சிஜன் எனப் படும் சுத்தமான பிராணவாயுவை வெளியிட்டு நமது உடல் உள் உறுப்புகளுக்கும் நன்மை பயக்கின்றன. 

மேலும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வீடாக செயல் படுவதன் மூலம் அவற்றின் அளவையும் பெருக்கி உலக உயிர்களை சமன் படுத்தி சிறந்த உலகத்தை படைக்க அவை பெரும் உதவி புரிகின்றன.


நமது முன்னோர்கள் செல்வந்தர்களாக வாழ்ந்தார்களா என்பது நமக்கு தெரியாது ஆனால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் வாழ்நாட்களின் நீளம் நமக்கு தெளிவு படுத்தி இருக்கும். அதே நீண்டஆயுளை ஆரோக்கியமாக வாழ்ந்து அனுபவிக்க நாமும் நமது சந்ததிக்கு விட்டு விட்டு போக நமது வாழ் நாளில் 
 ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு மரம் நடுவோம். முடிந்த வரை நல் உலகை அவர்களுக்கு  நல்குவோம் 

மரம் வளர்ப்போம் மழைக்காக மட்டும் அல்ல நமது சந்ததிக்காகவும்...