ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் ஏற்படும் தீய விளைவுகள்

அதிகமான பெண்கள் மற்றும் சில ஆண்களால் கூட பயன்படுத்தக்கூடிய ஒரு வகை  ஹேர் ஸ்டைல் முடியை நேராக்குவது. இதனை ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் என்று கூறுவர். சுருள் முடி அல்லது சாதாரண முடி , எதுவாக இருந்தாலும் அதனை நேராக்கி விடுவதுதான் இந்த முறை.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் ஏற்படும் தீய விளைவுகள்

முடியை அழகு படுத்துவதில்  பல வகை உள்ளன. சுருள் முடியை நேராக்குவது. நேராக இருக்கும் முடியை சுருள வைப்பது போன்ற அழகு சிகிச்சைகள் , இயற்கையாக இருக்கும் முடியை நமக்கு பிடித்த வகையில் மாற்றியமைக்க உதவுகின்றன. இளம் வயது பெண்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் இவற்றை பயன்படுத்தி தம்மை மேலும் அழகு படுத்திக் கொள்கின்றனர். 

சாதாரண முடியை நேராக்குவது  ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஆகும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் முடியின் தன்மையில் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். அவற்றின் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்ய விரும்புவோர், இதனை படித்து தெரிந்து கொண்டு அதை செய்யலாமா என்று நன்கு யோசித்து பின்பு முடிவு செய்யலாம்.

அதிகமான வறட்சி:
வறண்ட முடி என்பது இதன் முதல் பக்க விளைவு. ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் பிரயோகிக்கப்படுவதால் தலை முடியின் இயற்கை எண்ணெய் தன்மை காணாமல் போகிறது. முடியின் எலாஸ்டிக் தன்மை குறைந்து சொரசொரப்பாகிறது. உடைந்தும் போகிறது. அடிக்கடி ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்ய கூடாது. முடி ஈரமாக இருக்கும்போது ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்ய கூடாது. அதிகமான வெப்பத்தில் முடிகள் சேதமடையும். ஆகவே குறைந்த வெப்பத்தை பயன்படுத்தி ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்யலாம் . உண்மையில் சொல்ல போனால் ஸ்ட்ரெய்ட்டெனிங் என்பது உங்கள் முடியை வறுப்பது போல ஆகும்.

சுருள் முடி:
அடிக்கடி ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் முடி வறண்டு  அடி  முடி சுருள தொடங்கும். தலை முடி கலைந்து சீராக இருக்காது . கண்டிஷனர் பயன்படுத்தும்போது கீழ் பாதி முடியில் மட்டும் பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெய் , பால், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கொண்டு மாஸ்க் செய்து பயன்படுத்துவதால் முடியில் ஈரத்தன்மை தக்க வைக்கப்படும்.

முடி உடையும்:
ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் முடி வறண்டு உடையத்  தொடங்கும். இவையும் அதிக  வெப்பம் மற்றும் ரசாயனத்தின்  தாக்கத்தால் உருவாவதுதான்.  இவை முடியின் வலிமையை போக்கி எளிதில் உடைய வைக்கின்றன. முடி உடைவதால் அடி  பாகத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.அதிகமாக  பிரஷ் அல்லது ட்ரயர் பயன்படுத்துவது,  ஈர முடியை சீவுவது போன்றவை முடியில் வெடிப்புகளை உருவாக்குகின்றன.

சோர்வு:
வறண்ட தலைமுடி பளபளப்பாக இருக்காது . ஆரோக்கியமும் குறைவாக இருக்கும். இதற்கு காரணம், முடியில் இயற்கையான எண்ணெய் குறைந்து உச்சந்தலை வறண்டு காணப்படுவதுதான். ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தி முடியின் பளபளப்பை அதிகரிக்கலாம். ஆர்கான் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெய்யை பயன்படுத்தி தேவையான ஈரப்பதத்தை அடையலாம்.

எரிச்சல்:
உடல் மென்மைக்காக பயன்படுத்தப்படும் சாதனங்களின் அதிக வெப்பத்தின் காரணமாக பார்மால்டீஹைடு காஸ் வெளியாகிறது. ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்ய பயன்படுத்தும் பிளாட் அயன் மற்றும் ட்ரயர் அதிக வெப்பத்தில் இயங்கும்போது இந்த பார்மால்டீஹைடு வெளியாகிறது. தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமம், கண்கள், மூக்கு மற்றும் நுரையீரல் போன்றவை எரிச்சல் அடைகின்றன. இவை புற்று  நோயை உண்டாக்கும் வாய்ப்புகளும் உண்டு. 

முடிந்த அளவு ஸ்ட்ரைடென்னிங்  செய்வதை தவிர்க்கலாம். இதனால் குறைந்த பட்சம் முடிஉதிர்வதில் இருந்து புற்று  நோய் ஏற்படுவது வரை பல தீங்குகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்பது தெளிவாகிறது.  காசை செலவு செய்து நோய்களை வரவழைப்பது தேவையில்லாத செயல். இயற்கையான அழகை இயற்கையான பராமரிப்பின் மூலம் நிரந்தரமாக்கிக்கொள்வோம்.