இனி மறந்தும் கூட இரவில் வாழ்த்தும் தவறைச் செய்யாதீர்கள்.
நம் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக தானே வாழ்த்துகிறோம். அப்படியிருக்கையில், இனி மறந்தும் கூட இரவில் வாழ்த்தும் தவறைச் செய்யாதீர்கள்.
நிஷித் காலத்தில் மறந்தும் கூட வாழ்த்துக்களை சொல்லாதீர்கள்
மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் நம் மரபுகளை மறந்து பலர் பிறந்த நாள், புத்தாண்டு, திருமண நாள் மற்றும் வேறு எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் இரவு 12 மணிக்கு கொண்டாடுகிறார்கள். இரவில் ஏன் எந்த சுப நிகழ்ச்சிகளை செய்யவும் கூடாது, கொண்டாடவும் கூடாது மற்றும் வாழ்த்துக்களையும் சொல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நான் படித்த இந்த விஷயம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
பிறந்த நாள், புத்தாண்டு மற்றும் எந்த சுப நிகழ்ச்சிகளையும் ஏன் நிஷித் காலத்தில் கொண்டாடக்கூடாது
பிறந்தநாள், புத்தாண்டு மற்றும் எந்த சுப நிகழ்ச்சிகளையும் இரவு 12 மணிக்கு கொண்டாடுவதை நம் சாஸ்திரங்கள் தவறு என்று குறிப்பிடுக்கிறது. நிஷித் காலமான 12 மணி முதல் 3 மணி வரை இருக்கும் நேரத்தை இருண்ட காலம் என்று சொல்லுவார்கள். நிஷித் என்றால் நள்ளிரவு என்று பொருள். இந்த காலம் கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் தீய சக்திகள் ஆற்றல் மிகவும் வலுவாகின்றன. இவை நம் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் பில்லி,சூனியம், மாந்திரிகம் போன்ற தீய செயலை இரவு வேலையில் செய்கிறார்கள்.
இரவில் கொண்டாடினால் என்னவாகும்?
இந்த காலத்தில் பிறந்த நாள், புத்தாண்டு அல்லது எந்த சுப நிகழ்ச்சிகளையும் கொண்டாடும் போது கண்ணுக்குத் தெரியாத தீய சக்தி அந்த நபரின் வயதையும் அதிர்ஷ்டத்தையும் குறைத்து துரதிஷ்டத்தை அளிக்கும் மற்றும் அந்த நேரத்தில் வழங்கப்படும் வாழ்த்துக்கள் அல்லது விருப்பங்கள் பலன் அளிக்காது மற்றும் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
அப்போது சிவராத்திரியை ஏன் இரவில் கொண்டாடுகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம், சிவராத்திரி அன்று மட்டும் இந்த நிஷித்காலம் இறையருளால் மகாநிஷித் காலமாக மாறுவதன் மூலம் நல்ல பலன்களை தருகிறது. ஆனால் மற்ற நாட்களில் வரும் நிஷித் காலம் மோசமான விளைவையே ஏற்படுத்தும்.
எப்பொழுது வாழ்த்து கூறுவது?
இந்து சாஸ்திரங்களின்படி, சூரிய உதயத்துடன் அன்றைய நாள் தொடங்குகிறது. இந்த காலைபொழுதில் வளிமண்டலம் நேர்மறை சக்தியை வெளிப்படுத்தும். அதனால் சூரிய உதயத்திற்கு பிறகு வாழ்த்தினால் வாழ்த்துக்கள் பலிப்பதோடு நல்லதே நடக்கும். அதனால் தான் இந்து முறைப்படி செய்யும் எந்த சுப நிகழ்ச்சிகளும் காலையில் நடைபெறுகிறது.
நம் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக தானே வாழ்த்துகிறோம். அப்படியிருக்கையில், இனி மறந்தும் கூட இரவில் வாழ்த்தும் தவறைச் செய்யாதீர்கள். சூரிய உதயத்துடன் தொடங்கும் இந்த புத்தாண்டிலிருந்து அனைவரின் வாழ்க்கையும் ஒளிமயமாகட்டும் என்று நம்குரல் வாயிலாக இனிய நல்வாழ்த்துக்கள்.