ஆடைகள்

ஆடைகள் - இது ஆடி ஆஃபர் பற்றி இல்லங்க !

ஆடைகள்

ஆடைகள் நம் வாழ்வின் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒரு பொருள்  ஆகும். அவை நம் உடலை குளிர், காற்று, சூரிய ஒளி மற்றும் மழை போன்றவற்றில் இருந்து  பாதுகாக்கப்  பெரிதும் உதவுகிறது. அது போல் நாம் விரும்பிய, நமக்குத் தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய ஆடைகளை அணிவது என்பது நமது பண்புகளை அனைவருக்கும் அதன் மூலம் பறை சாற்றுவதற்கு  ஈடாகும்.

பொதுவாக நாம் ஒரு ஆடையை தேர்ந்து எடுக்கும் முன், அந்த ஆடைக்குரிய பலன்களை அல்லது தீங்குகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது பற்றி நாம் ஒருபோதும் நினைப்பதில்லை. சிலர் நல்ல இறுக்கமான ஆடையை அணிபவராக இருப்பார்கள், சிலர் மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்து இருப்பார்கள். அதிக இறுக்கமான ஆடைகள் நம் மனதிற்கு இறுக்கமாக/இடைஞ்சலாக இருக்கும், நாம் எந்தப் பணியில் இருந்தாலும் அதில் முழு கவனம் செலுத்த முடியாது. இங்கே நாம் பணி என்று குறிப்பிடுவது நாம் வேலையை மட்டும் அல்ல, ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு திரைப்படம் பார்க்கையில் அல்லது வேறு ஏதாவது ஒரு வேலை செய்கையில் நம்மை அறியாமல் நமக்கு ஒரு இறுக்கமான மன நிலை உருவாகி இருக்கும். மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்தால் அது நம்மை மற்றவர் முன் நல்ல வித மாக காட்டாது. இந்த கட்டுரையின் மூலம் துணிகளை சரியான வகையான தேர்வு செய்வதின் பின்னால் உள்ள அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும்  ஆடைகளை பற்றி சில கோட்பாடுகள் இருக்கும். உதாரணத்திற்கு, இந்து தர்மத்தில் கூட சில கோட்பாடுகள் உள்ளன. அதன் பரிந்துரைத்தபடி ஆடைகள் அணிவதால் வளிமண்டலத்தில் இருந்து தெய்வீக சக்திகளை ஊடுருவ  உதவுகிறது என்றும், மேலும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்குதல்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது என்றும் நம்பப் படுகிறது. 

உளவியல் ரீதியாக பார்த்தால்,  ஒரு தனி நபர் தமது குணாதிசயத்தின்படி  துணிகளைத் தேர்ந்தெடுக்கிறார். நமது சமூகத்தில் நல்ல சுத்தமான ஆடைகளை அணிபவர்களை நல்ல எண்ணம் கொண்ட, மனசாட்சிக்கு பயந்தவராக பார்க்கப் படுகிறது. ஒரு கசங்கிய, அசுத்தமான   உடைகளை உடுத்துபவர்களை சோம்பேறிகளாகவும், கவனக் குறைவு உள்ளவர்களாகவும் பார்க்கப் படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு வேலை நேர்க்காணலுக்கு, நேர்த்தியான மற்றும் சலவை செய்யப் பட்ட ஆடைகள் அணிந்து வருபவர்கள், அவர் அணிந்து இருக்கும் ஆடை மூலம் ஒழுக்கம் மற்றும் நம்பகத் தன்மை கொண்ட எண்ணங்களை காட்ட முயல்வார்கள். 

நாம் புது ஆடை உடுத்துகையில் இயல்பாக மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் சில காரணங்களுக்காக நாம் ஒரு பழைய, அழுக்கான ஆடையை அணிய நிர்பந்திக்கப் பட்டால் அது நமக்கு சங்கட படுத்தும் மனோ நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு மனிதனின் மனதை அவன் உடுத்தும் ஆடைகள் எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம். "ஆர்தர் ஆண்டர்சன்" எனும் ஒரு இங்கிலாந்து நிறுவனம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு, அந்த ஆய்வின் முடிவை அடிப்படையாக கொண்டு அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் ஆடையில் ஒரு மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து  அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் மனதில் தாம் செய்யும் வேளையில் பெருமளவு திருப்தி அடைந்ததாக கூறி இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த ஆரம்பித்த பின்னால் அவர்களால் மிக அதிகமான உற்பத்தி திறனை கொடுக்க முடிந்தது. ஒரு சிறு ஆடை மாற்றத்தால் ஒரு மிகப் பெரிய அளவில் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என்றால், நாம் ஆடையை தேர்வு செய்வதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று பாருங்கள்.