தினமும் ஒரு கப் காபி பருகுவதால் உங்கள் உடலில் என்ன நிகழ்கிறது தெரியுமா?
ஒரு டம்ப்ளர் காபி பலருக்கும் புத்துணர்ச்சி பானம் என்பது மறுப்பதற்கில்லை.
அவ்வப்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. சாதாரண நாட்களில் காலையில் எழுவதே கடினம். அதுவும் குளிரான நாட்களில் காலையில் எழுவது மிகவும் கடினம். இந்த கடினத்தைப் போக்குவதற்கு ஒரு சிறந்த தீர்வு, காபி. வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு, பருகும் ஒரு கப் காபிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் இல்லை. ஒரு கப் காபியில் ஒரு சிப் பருகியதும் ஒரு வித மந்திர சக்தி உடலில் வேலை செய்யும். அது என்ன என்பது இன்று வரை மாயமாகவே உள்ளது.
காபியின் எந்த ஒரு விதமும், ப்ளாக் காபி, கோல்ட் காபி, ஐஸ் காபி , எதுவாக இருந்தாலும், அதனை ஒரு சிப் பருகியதும் உதட்டில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொள்ளும். உண்மையில், காபி பருகுவதால் பல வித நன்மைகள் நமக்கு கிடைக்கும். காபி பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் காபியின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். வாருங்கள்.
தினமும் ஒரு முறை ஒரு கப் காபி பருகுவதால் அல்சைமர் நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது. அதாவது ஒரே ஒரு கப் காபி மட்டுமே, அதற்கு மேலும் அல்ல குறைவாகவும் அல்ல.
தினமும் சர்க்கரை சேர்க்கப்பட்ட காபியை பருகுமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை, ஆனால் எதாவது ஒரு இனிப்பு சாப்பிடும்போது காபி பருகலாம். இது நன்மை அளிக்கும். காபின் மற்றும் க்ளுகோசின் மந்திர ஒருங்கிணைப்பு உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, கவனத்தை கூர்மையாக்குகிறது, மேலும் எளிதில் படிக்கும் ஆற்றலைத் தருகிறது. டோனட் மற்றும் பிஸ்கட் காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கான அருமையான காம்பினேஷன்.
ஒரு நாளில் ஒரு முறை தான் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அதனைப் பருக சரியான நேரம், நீங்கள் யாரையாவது சந்திப்பதற்கு முன். ஒரு ஆராய்ச்சியில், புதிதாக ஒருவரை சந்திப்பதற்கு முன், போட்டியாளர்களுக்கு அவர்களின் விருப்பமான கோல்ட் காபி அல்லது மற்ற காபி வழங்கப்பட்டது. காபி பருகியவர்கள், புதிதாக சந்தித்த நபருடன் நட்பாக பழகினர். ஆகவே நீங்களும் இதனை முயற்சிக்கலாம்.
காபி பருகுவதால் நட்புணர்ச்சி மட்டும் பெருகுவதில்லை, உண்மையில் காபி பருகுபவருக்கு ஒரு வித இன்பம் கிடைக்கிறது. இது ஜோக் அல்ல. ஒரு நாள் காலையில் காபி பருகாமல் இருப்பவர், தங்கள் நாளில் ஒரு வித சந்தோஷத்தை இழக்கின்றனர். ஒரு முறை காபி பருகும்போது நிச்சயம் மறுமுறை குடிப்பதற்கான ஆர்வம் தோன்றும். அதனால் ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகுவதால் உங்கள் மனச்சோர்வு தடுக்கப்படுகிறது. இதற்குக் காரணாம் காபியில் உள்ள அன்டி ஆக்சிடென்ட்.
ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகுவதும் நன்மை அளிக்கிறது. குறிப்பாக அதிக மது அருந்துபவர்கள் ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகலாம். காபி பருகுபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவது குறைவதாக, 9 ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் தினமும் இரண்டு கப் காபிக்கு மேல் பருகுபவரா? அப்படி என்றால் 3? நீங்கள் 3 கப் காபி பருகுவதால், இதய நோய் பாதிப்பின் அபாயம் குறைகிறது.
நீங்கள் தினமும் 4 கப் காபி பருகுவதால், புற்று நோய் தடுக்கப்படுகிறது. பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் 4 கப் காபி பருகுபவர்களுக்கு கருப்பை புற்று நோய் அபாயம் குறைவதாகவும், அதுவே காபி பருகும் பழக்கம் இல்லாத பெண்களுக்கு இந்த அபாயம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதையும் தாண்டி, காபி பருகுவதையே வேலையாக கொண்டிருப்பவர் நீங்களா? அதுவும் நன்மை தான். பார்கின்சன் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயம், உங்களைப் போன்றவர்களுக்கு தடுக்கப்படுகிறது.ஒரு நாளில் இரண்டு கப் காபி பருகுபவரை விட 7 கப் காபி பருகுபவருக்கு நீரிழிவு அபாயம் குறைகிறது.
என்ன வாசகர்களே? நீங்கள் எத்தனை கப் காபி பருகுவீர்கள்? காபி பருகுவதின் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டீர்களா? தொடர்ந்து காபி பருகி ஆரோக்கியமாக இருங்கள்.