கீல்வாதத்திலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய 5 விதமான உடற்பயிற்சிகள்
கீல்வாதம் என்பது குருத்தெலும்பு திசு பாதிக்கப்படுவதால் உண்டாகும் ஒரு நோயாகும்.
குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கீல்வாதம் உண்டாகிறது. கீல்வாதம் என்பது எலும்புகளுக்கு இடையில் உராய்வை ஏற்படுத்தி , இதன் காரணமாக கடுமையான வலி , பிடிப்பு , எலும்பு துருத்திக் கொள்வது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம் . ஒருவேளை உங்களுக்கு இடுப்பு பகுதியில் கீல்வாதம் ஏற்படுவதால் உங்களால் உடற்பயிற்சி செய்யமுடியாது மற்றும் சரியாக நடக்க முடியாது. இருப்பினும் உங்கள் தசைகளை பராமரிக்கவும், சமநிலையை மேம்படுத்தவும், இடுப்பு மூட்டுகள் நிலையாக இருக்கவும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதுடன் சேர்த்து உங்கள் தினசரி செயல்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். மேலும் கீழே குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆனால் இத்தகைய எந்த ஒரு பயிற்சியையும் தொடங்குவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கீல்வாதத்தால் ஏற்படும் வலியிலிருந்து நீங்கள் நிவாரணம் பெற உதவும் சில எளிய உடற்பயிற்சிகள் இதோ:
நடைபயிற்சி:
குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அருமையான பயிற்சி நடைப்பயிற்சி ஆகும். நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட சமநிலையை அடைய முடிகிறது. சாய்வு இல்லாமல் ஒரு டிரெட்மில்லைப் பயன்படுத்த முயற்சியுங்கள், இதனால் நீங்கள் வெளியில் நடந்தாலும் சரியான சமநிலை கிடைக்கும். இதனால். உங்கள் உடலுக்கு போதுமான செயல்பாடு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் தசை வலிமையம் மெல்ல வளர்கிறது.
ஸ்டேஷனரி பைக்:
உங்கள் உடல் வலிமை மெதுவாக அதிகரிக்கும். வகையில் குறைந்த அளவு அமைப்பைக் கொண்ட ஒரு ஸ்டேஷனரி பைக் பயன்படுத்தலாம். இதனை போக்குவரத்து. நெரிசல் இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதைவிட, உங்கள் வீட்டில் மட்டும் பயன்படுத்துவதால், சோர்வாக இருக்கும்போது சற்று இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். இந்த வகை பைக் ஜிம்மில் காணப்படும் சைக்கிளிங் மெஷினை
ஒத்து காணப்படும். தினமும் இந்த பைக்கில் இரண்டு மணி நேரம் சைக்கிளிங் பயிற்சி செய்வதனால் உங்கள் உடல் வலிமை அதிகரிக்கும். ஆனால் நீண்ட நேரம் இதில் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேர பயிற்சி காயங்களுக்கு வழிவகுக்கலாம்.
நீச்சல் பயிற்சி:
உடலுக்கு மிதமான அளவு செயல்பாட்டைத் தரும் நீச்சல் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நெகிழ்வைத் தரும். நீச்சல் தவிர மற்றொரு. வகை தண்ணீர் பயிற்சியும் உண்டு. அது இடுப்பளவு தண்ணீரில் நடப்பது. இடுப்பளவு தண்ணீரில் நடப்பதால் மூட்டு தசைகள் லேசாகி, எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமையையும் அதிகரிக்கிறது. இப்படி செய்வதால் இடுப்பு வலி குறைகிறது. மூட்டு தொடர்பான வலிகளுக்கு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு, பாதிக்கப்பட்ட இடத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் பாதிப்பை சரி செய்வதற்கு தண்ணீர் பயிற்சி நல்ல வகையில் உதவுகிறது. தண்ணீர் பயிற்சியால் ஏற்படும் நல்ல பலன்களை முழுவதும் பெறுவதற்கு, நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெறலாம்.
யோகா:
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தசை வலிமையை மேம்படுத்தி, வலியைக் குறைக்க யோகா உதவுகிறது. தினமும் காலையில் யோகா பயிற்சி செய்வதால் உங்கள் மூட்டுகள் திறக்கப்பட்டு, உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடை நிர்வகிக்கப்படுகிறது. கீல்வாதம் உள்ளவர்கள் தங்கள் எடையை கட்டுப்பாட்டில். வைத்திருக்கவேண்டும் என்பதால், யோகா செய்து உங்கள் உடல் எடையை பராமரிக்கலாம்.
தாய் சி :
தாய் சியின் மெதுவான மற்றும் திரவ இயக்கங்கள் உங்களை வலியிலிருந்து விடுவிப்பதை உணர வைக்கும். உடலின் சமநிலை மேம்பட இது உதவும். இது ஒரு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறையில் மனஅழுத்தத்தைப் போக்க உதவும் பயிற்சி. குறிப்பாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த பலன் கொடுக்கும். திரவ இயக்கங்கள் எடுத்துக்கொள்ளும்போது சரியான பராமரிப்பு தேவை, இல்லையேல் ஆழமான காயம் ஏற்படும் அபாயம் உண்டு.