கேது தசையில் அரசனும் ஆண்டியாவாரா
கேது தசை நடக்கும் போது கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், விநாயகர் மற்றும் கேதுவை வழிபட்டு வந்தால் துன்பங்கள் குறையும் நன்மைகள் பெருகும் .
கேது தசையில் அரசனும் ஆண்டியாவாரா
ஞானகாரன் என்று சொல்லப்படும் கேது ஒரு நிழல் கிரகம். கேதுவை போல் கெடுப்பானும் இல்லை என்று கூறுவார்கள், ஏன்னென்றால் கேது தசையில் அரசுனும் ஆண்டியாவார் என்றுமளவுக்கு துன்பத்தை ஏற்படுத்துவார். கேது தசையின் பொது பலன்கள் பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.
கேது மகாதசை(7 வருடங்கள் )
கேது தசை கேது புத்தி- 4மாதங்கள் 27நாட்கள். இது கெட்ட காலம்.
கேது தசை சுக்கிரன் புத்தி- 1வருடம் 2மாதங்கள். இது நல்ல காலம்.
கேது தசை சூரியன் புத்தி- 4மாதங்கள் 6 நாட்கள். இது கெட்ட காலம்.
கேது தசை சந்திரன் புத்தி- 7மாதங்கள். இது கெட்ட காலம்.
கேது தசை செவ்வாய் புத்தி- 4 மாதங்கள் 27 நாட்கள். இது கெட்ட காலம்.
கேது தசை ராகு புத்தி- 1வருடம் 18 நாட்கள். இது கெட்ட காலம்.
கேது தசை குரு புத்தி- 11மாதங்கள் 6 நாட்கள். இது நல்ல காலம்.
கேது தசை சனி புத்தி- 1வருடம் 1மாதங்கள் 9 நாட்கள். இது கெட்ட காலம்
கேது தசை புதன் புத்தி- 11மாதங்கள் 27 நாட்கள். இது நல்ல காலம்.
கேது சாதகமாக இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும், இறைபணியில் ஈடுபாடு இருக்கும், மனம் தெளிவுபடும், பதவி உயர்வு, அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், ஞானம் பெருகும், நிலம் மற்றும் செல்வம் சேரும், வெளிநாட்டு மூலம் அதிர்ஷ்டம், எதிரிகள் அழிவு போன்றவை ஏற்படும்.
கேது பாதகமாக இருந்தால்
மன குழப்பங்களை ஏற்படும், அறிவை மந்தப்படுத்தும், கடுமையான துன்பங்களை ஏற்படும், அனைத்து முயற்சிகளும் பலனளிக்காது, பதவி அல்லது அதிகார இழப்பு, செல்வங்களை இழக்க நேரிடும், குடும்ப வாழ்க்கையை துறக்கச் வைக்கும், உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும், தவறுகளில் ஈடுபடுத்தும், வீண் வழக்குகளை சந்திக்க வைக்கும்.
கேது காயத்ரி மந்திரம் :
அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!
கர்ம கிரகமான கேது ஒருவரின் பூர்வ புண்ணியத்தை வைத்தே பலன்களை கொடுக்கிறது. கேது தசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், விநாயகர் மற்றும் கேதுவை வழிபட்டு வந்தால் துன்பங்கள் குறையும் நன்மைகள் பெருகும்.