நெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்
வயது அதிகரிப்பதும் அதன் அறிகுறிகள் முகத்தில் தெரிவதும் பெரிய பாவம் இல்லை. ஆனாலும் அதனை மறைக்க நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம்.
என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். இப்படி நினைப்பதில் எந்த ஒரு பிழையும் இல்லை. பதினாறு வயது என்பது இளமை ததும்பும் வயது. பதின் பருவத்து மத்தியில் ஆண் பெண் இருவருமே இளமையாக தோன்றுவர். இதற்கு முன் பார்க்கும்போது குழந்தைகளாய் தோற்றமளித்தவர்கள் திடீரென்று இந்த வயதில் வாலிபத்தை நெருங்கி, பெற்றோர்க்கு இணையாக உயர்ந்து காணப்படுவர். ஆகவே பலரும் உங்கள் வயது என்ன என்ற கேள்விக்கு ஸ்வீட் 16 என்று பதிலளிப்பர். திரையுலக மார்க்கண்டேயன் என்ற புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் சிவகுமார் பற்றியும் நாம் பேசலாம். 75 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்க அவரால் மட்டுமே முடியும். அவரை முன் மாதிரியாக வைத்து பலரும் இளமையாக இருக்க முயற்சி செய்கின்றனர்.
நம்முடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற் பயிற்சியில் ஆர்வம் இல்லாமை, தூக்க நேரத்தில் மாறுபாடு, மன அழுத்தம் , வேலை பளு போன்றவை நமது வயதை அதிகரித்து காட்டும் காரணிகளில் சில. இவற்றில் நம்மால் ஆனா கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி நடக்க முயற்சிக்கும்போது என்றும் இளமை என்பது எட்டாக்கனி இல்லை.
ஒப்பனை சிகிச்சைகளை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆனால் இவற்றிற்கு சில இயற்கை தீர்வுகளே உள்ளன. அவற்றை பயன்படுத்தி, வயது முதிர்வை குறிக்கும் அறிகுறிகளான சுருக்கம் , கோடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். இயற்கை பொருட்களான ஓலிவ் எண்ணெய், முட்டை வெள்ளை கரு, பப்பாளி போன்றவை பழங்காலம் முதலே அழகு சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கலாம். இவற்றில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள், போன்றவை வயது முதிர்வை குறைக்கின்றன. சில வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல தீர்வுகல் நிச்சயம் கிடைக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் என்ற ஒரு என்சைம் உள்ளது. இது வயது முதிர்வை தடுக்கிறது. நெற்றியில் உண்டாகும் சுருக்கத்தை போக்க பப்பாளி பெரிதும் உதவுகிறது.
1 டேபிள் ஸ்பூன் பப்பாளி விழுதை எடுத்துக் கொள்ளவும். இதனை சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
முட்டை:
முட்டையின் வெள்ளை கருவிற்கு வயதை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. வயது முதிர்வை தடுத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு முட்டையை எடுத்து வெள்ளை கருவை தனியாக பிரித்து கொள்ளவும். அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் நெற்றில் உள்ள சுருக்கத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிந்த நீரால் முகத்தை கழுவவும்.
ஆரஞ்சு தோல் பவுடர் :
சிட்ரிக் அமிலம் இருக்கும் பேஸ் பேக் பெரும்பாலும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை போக்கும் தன்மை உடையனவாகும். ஆகவே இவற்றை நம்பி பயன்படுத்தலாம்.
1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கலந்து நெற்றில் உள்ள சுருக்கத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.
பைனாப்பிள் :
பைனாப்பிள், ப்ரோமெலைன் மற்றும் வைட்டமின்களின் ஆதாரமாக உள்ளன. இவற்றை பயன்படுத்தி நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்கலாம்.
பைனாப்பிளை எடுத்து வெட்டி, அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பஞ்சை எடுத்து இந்த சாறில் நனைத்து உங்கள் நெற்றில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
விட்ச் ஹேசல் (ஒரு வகை காட்டுச் செடி)
விட்ச் ஹசெலில் டேனின் என்ற துவர்ப்பு பொருள் அதிகமாக உள்ளது. இது வயது முதிர்வை தடுக்கிறது. நெற்றில் ஏற்படும் சுருக்கங்களை போக்குகிறது .
விட்ச் ஹசேலை 3 -4 துளிகள் எடுத்து, 1 ஸ்பூன் க்ரீன் டீயுடன் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் நெற்றியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய்யில் சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. ஆகவே இது சருமத்தின் சுருக்கத்தை போக்க ஒரு சிறந்த தீர்வாகும்.
ஆலிவ் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து உங்கள் நெற்றில் தடவி மசாஜ் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
கலெண்டுலா :
இது சருமத்திற்கு நன்மைகள் அளிக்க கூடிய ஒரு மூலிகையாகும். வயது முதிர்வை அதிகரித்து சுருக்கங்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களிடம் போராடி வயது முதிர்வை தடுக்கிறது.
1 ஸ்பூன் கலெண்டுலாவை எடுத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் நெற்றில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும்.
மேற்கூறிய முறைகளில் எதாவது ஒன்றை தொடர்ந்து முயற்சித்து பாருங்கள். விரைவில் நல்ல பலன்கள் காணப்படும். நீங்களும் வயது முதிர்வை போக்கி இளமையாக வாழலாம்.