உங்கள் காதல் உண்மையா அல்லது பொய்யா?
உறவுகளில் போலியானதை கண்டுபிடிக்க ஒரு மிகப் பெரிய அனுபவம் வேண்டும். குறிப்பாக காதல் என்ற உறவில், அது நிரந்தரமாக நமது வாழ்நாள் முழுதும் தொடருமா என்ற கேள்வி காதலிக்கத் தொடங்கும் ஆண் மற்றும் பெண்ணின் மனதில் எழும் ஒரு முக்கிய கேள்வியாகவே உள்ளது.
காதலின் தொடக்கத்தில் இது உண்மையில் காதல் தானா என்ற சந்தேகம் வருகிறது. உங்களுக்கும் உங்கள் துணைக்குமான காதலைப் பற்றி புரிந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் நிச்சயம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த இணைப்பை பற்றிய புரிதல் மற்றும் இது உண்மையானதா இல்லை உங்களில் ஒருவர் போலியாக காதல் செய்கிறீர்களா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இதனைத் தெரிந்து கொள்ள நான்கு அடிப்படைக் கேள்விகளை கேட்க வேண்டும், அது,
இந்த உறவில் எதாவது குறைபாட்டை நீங்கள் உணர்கிறீர்களா ?
நீங்களும் உங்கள் துணைவரும் எந்த அளவிற்கு பிணைப்பில் இருக்கிறீர்கள்?
எந்த வழியில் நீங்களும் உங்கள் துணைவரும் உங்களின் இணைப்பை பகிர்ந்து கொள்கிறீர்கள்?
உங்கள் உறவை மேம்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உங்கள் ஜோடியுடைய இணைப்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள சில விஷயங்களில் ஆழமாக பயணிக்க வேண்டும். அதனைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
உணர்வு ரீதியான இணைப்பு :
ஒருவருக்கொருவர் உணர்வு ரீதியாக எந்த அளவிற்கு பிணைக்கப் பட்டிருகிறார்கள் என்பதை பொறுத்து தான் இவர்களுக்குள் எல்லாமே இருக்கிறது, இந்த உணர்வுகள் இல்லாமல் , ஒருவரை பற்றி ஒருவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதும், இவர்களின் இணைப்பை பற்றி புரிந்து கொள்வதும் மிகவும் கடினம். ஒரு ஆரோக்கியமான உணர்ச்சி இணைப்பு என்பது பயம், அவமானம், துயரம், மற்றும் தனிமை போன்ற பாதிக்கப்படக்கூடிய உணர்வுகளை பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் தான் உள்ளது .
உங்கள் துணையின் உணர்வுகள் உங்களை பாதிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் உறவில் இன்னும் ஆழமாக உணர்வு ரீதியாக ஒன்றவில்லை என்று பொருள்படுகிறது. அல்லது எதையும் வெளிபடுத்த முடியாத அல்லது உணர்வுகளில் நிலையில்லாத ஒருவரிடம் நீங்கள் உறவில் உள்ளதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
காதல் உறவின் தொடக்கத்தின் முதல் சில மாதங்களில் பரவசம் மற்றும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய பல ஆழ்ந்த நினைவுகளை தரக் கூடிய நிகழ்வுகள் நடக்கலாம். இது நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். ஆனால் நீங்கள் நேசித்த ஒருவருடன் காதல் வசப்படும்போது மூளையில் உள்ள ஹார்மோன் தூண்டப்படுவதால் தான் இந்த வித உணர்வை நீங்கள் பெறுகிறீர்கள்.
உணர்வு பூர்வமாக ஆழமாக செல்வதற்கு ஒரு சில ஜோடிகளுக்கு சில காலம் தேவைப்படும். இந்த உணர்வு பரஸ்பரம் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம் ஆழமான உணர்வை வெளிபடுத்தும்போது, அவருக்கு உங்கள் மீது ஒரு பிடிப்பு ஏற்படவில்லை என்றால் உங்கள் இருவருக்கும் உணர்வு ரீதியான இணைப்பு ஏற்படாது.
உங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றிய உங்கள் உணர்வைப் பற்றி இருவரும் வெளிப்படையாக மற்றும் நம்பகமான முறையில் உரையாடும்போது உங்கள் இருவரின் உணர்வு ரீதியான இணைப்பைப் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.
ஒருவருக்கொருவர் உணர்வு ரீதியாக இணைப்பை ஏற்படுத்தும்போது, ஒருவர் நினைவில் மற்றவர் வாழ முடியும். இது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். உணர்வு பூர்வமான ஒரு நெருக்கம் என்பது உங்களுக்குள் ஒரு உண்மையான இணைப்பை உருவாக்க மிகவும் தேவை.
மனதளவில் ஒற்றுமை :
நீங்கள் உங்கள் துணையும் ஒரே மாதிரி யோசிக்கிறீர்களா? என்ற கேள்வி எல்லா ஜோடிக்குள்ளும் இருக்கும். உங்கள் துணைவர் உங்களைப் புரிந்து கொள்கிறாரா ? என்பது மனதளவில் ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடிக்கும் இன்னொரு முறையாகும். இருவரின் மூளையும் ஒன்றாக பயணிக்கும்போது மனதளவில் ஒற்றுமை அதிகரிக்கும். உணர்வு ரீதில் உண்டாகும் நெருக்கத்தைப் போல் இந்த மன ஒற்றுமையும் ஒரு ஜோடிக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.
மன ஒற்றுமை ஏற்பட பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இருக்கும் மன நல பழக்கங்கள், சிந்தனை செயல்முறை போன்றவை மற்றும் அதனை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை போன்றவற்றின் மூலம் உங்கள் மன ஒற்றுமையை அளவிட முடியும். அடிப்படையில் மன ஒற்றுமையைத் தவற விடுபவர்கள், தங்கள் காதலில் வழுக்கி விழும் நிலை உண்டாகும்.
காதல் என்ற ஒற்றை வார்த்தையில் உங்கள் இணைப்பு வெளிப்படாது. வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வை, நீங்கள் சிந்திக்கும் முறை, உங்கள் குறிக்கோளை நீங்கள் பகிர்ந்து கொள்ளுதல், உங்கள் இருவருக்கும் நடக்கும் கலந்துரையாடல், நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் அன்பு, இருவருக்கும் இருக்கும் பொதுவான அறிவு, ஒரே மாதிரி யோசிக்கும் தன்மை, போன்றவை அனைத்தும் மன ஒற்றுமைக்கான தேவைகள் ஆகும். ஒரு உறவு பலப்பட மன ஒற்றுமை மிகவும் முக்கியம் ஆகும். இதனால் உங்கள் இணைப்பு உண்மை என்று அறியப்படுகிறது.
சமூக வாழ்க்கை :
சமூக ரீதியாக நீங்களும் உங்கள் துணையும் இணைப்பில் இருகிறீர்களா? ஒரு ஜோடியாக இந்த சமூகத்தில் எப்படி உங்களை தொடர்பில் வைத்திருக்கிறீர்கள்? ஒருவருக்கொருவர் விருப்பங்களை அல்லது நலன்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகளில் பரஸ்பர விருப்பங்களைப் பகிர்ந்துகொள்வது, போன்றவை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான சமூக இணைப்பை உருவாக்குவதற்கு உதவும். உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் சில பண்புகள் கூட சமூகத்தில் உங்கள் இணைப்பை ஆராய உதவும். சிலர் இயற்கையில் மிகவும் அமைதியானவராக சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவராக இருக்கலாம். இவரின் துணைசமூகத்தோடு ஒட்டி வாழும் குணமுள்ள கலகலப்பாக பழகக் கூடியவராக இருக்கும்போது இந்த ஜோடி, சமூத்தில் நல்ல பெயரை எடுக்க முடியும். இல்லையேல் சமூகம் இவர்களைப் புறக்கணிக்கலாம். ஒருவருக்கொருவர் மதிப்பீடு செய்து, சமூகத்துடன் இணைந்து வாழும் வாழ்கையை பராமரிப்பது உண்மையான இணைப்பிற்கு மிகவும் அவசியம். .
சமூகத்தில் எல்லோரிடமும் நண்பர்களாகப் பழகுவது சமூக முன்னணியை அமைப்பதற்கான சிறந்த வழி. நீங்கள் உங்கள் துணையுடனும் மற்ற நண்பர்களுடனும் கைகோர்த்துச் செல்வது எளிதாக இருக்கும். நாம் அனைவரும் சமூக விலங்குகள் தான் .எனவே நமக்கு சமூக வாழ்க்கை மற்றும் அதன் தொடர்பு மிகவும் அவசியமான ஒன்று என்பதை மனதில் கொள்வது நல்லது.
இயற்கையான நெருக்கம் :
உடல் சார்ந்த நெருக்கம் என்பது உறவில் மற்றொரு முக்கிய அம்சமாகும். இருவரின் ஒன்றிணைந்த விருப்பம் இல்லாமல் இந்த நெருக்கம் ஏற்படாது. உங்கள் துணையின் விருப்பத்தை புரிந்து கொண்டு நடப்பது உறவில் மிகவும் அவசியம் ஆகும்.
உண்மையான நெருக்கத்தையும் இணைப்பையும் புரிந்து கொண்ட காதலர்களைப் போல் அழகான விஷயம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. ஒரு உறவு உண்மையானதா இல்லையா என்பதையும் இறுதி வரை இந்த உறவு நீடிக்குமா என்பதையும் தெரிந்து கொள்ள மேலே கூறிய காரணங்கள் சிறப்பாக விவரிக்கிறது. உங்கள் துணையைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நான்கு விஷயத்திற்கான தீர்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முடிவு உங்களுக்கு சாதகமாக இருந்தால், உங்கள் இணைப்பு அழகாக உள்ளது என்பதை புரிந்துக் கொண்டு உறவைத் தொடருங்கள். இல்லை என்றால் உங்கள் நேரத்தை செலவு செய்யாமல் அந்த உறவில் இருந்து விலகி வாருங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை பற்றிய கருத்துகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .