உடல் எடை குறைப்பிற்கு உதவும் உணவுகள்
எடை குறைப்பிற்கான பல்வேறு விளம்பரங்கள் இன்று நம்மிடையே தோன்றுகிறது.
இன்றைய நாகரீக உலகில், உணவில் மேற்கொள்ளும் மாற்றங்களால் பலரும் உடல் பருமன் அடைய தொடங்கியுள்ளனர். சிறு குழந்தைகள் கூட அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அல்லது மொபைல் போன் விளையாட்டுகளில் ஈடுபட்டு, ஓடியாடி விளையாடுவதை மறந்தே விட்டனர். இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமன் அதிகரித்த சில நாட்களில், எடை குறைப்பு முயற்சியை மேற்கொள்கின்றனர். போலியான எடை குறைப்பு முறைகளில் மாட்டிக் கொண்டு எடை குறைகிறதோ இல்லையோ உடல் ஆரோக்கியம் குறைய தொடங்குகிறது.
ஆகவே நம்மிடையே உள்ள உணவுகளை கொண்டு உடல் எடை குறைப்பதற்கான ஆய்வு பூர்வமான தீர்வுகளை தருவது தான் இந்த பதிவு.
சமீபமாக நடந்த ஒரு ஆய்வில், சில உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வை தருவதற்காக மூளையின் சில அணுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.. அமினோ அமிலம் நிறைந்த உணவுகள் மற்ற உணவுகளை விடவும் அதிகமாக பசியை போக்கி , வயிற்றை நிரப்புகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிக்கன் , கானாங்கெளுத்தி மீன், அவகேடோ போன்ற வகை உணவுகள் இந்த உணர்வை அதிகம் வெளிப்படுத்துவதாகவும், இவற்றை உண்ணும்போது உடல் எடை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்ரிகாட், பிளம், பாதாம், பயறு வகைகள், பன்றி இறைச்சி , போன்றவற்றில் அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளது. ஆகையால் இத்தகைய உணவுகளை மக்கள் உண்ணும்போது வேகமாக பசி அடங்கி விடுகிறது.
எவ்வளவு வேகமாக நமது வயிறு நிரம்புகிறது என்பதை டேனிசிட் என்ற அணு குழு ஒன்று நிர்வகிக்கிறது . இவற்றை ஊக்குவிப்பது அமினோ அமிலங்களாகும். டேனிசிட் என்பது மூளையின் மத்தியில் அமைந்து உடல் எடையை கட்டுப்படுத்துவதாகும். இவை நேரடியாக அமினோ அமிலத்தை உணரும் திறன் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் வருங்காலத்தில் உடல் எடை கட்டுப்பாட்டில் இவற்றின் பங்கு இன்றியமையாததாகும் .
சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு நிரம்பிய உணர்வை பெறுவதற்கு இரத்தம் மற்றும் மூளையில் அமினோ அமிலத்தின் அளவு மிகவும் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் குழு நேரடியாக அமினோ அமிலத்தை மூளைக்குள் செலுத்தி பரிசோதித்தனர். மூலையில் இருக்கும் டேனிசிட் 30 வினாடிகளில் வயிறு நிறைந்த உணர்வை சிக்னலாக மூளைக்கு அனுப்பியது.
இந்த ஆய்வின் முடிவை பயன்படுத்தி உடல் பருமன் சிகிச்சையை மேற்கொள்ளலாம். இந்த உலகத்தின் பெரும்பாலானவருக்கு இது ஒரு நல்ல செய்தி தானே!